வடக்கு- கிழக்கு உள்ளிட்ட

இலங்கையின் பல பகுதிகளில் கடந்த மூன்று நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 42 பேர் பலி

சில தினங்களில் பன்னிரெண்டு தமிழர்கள் உயிரிழப்பு
பதிப்பு: 2019 ஏப். 17 23:21
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 17 23:55
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
வடக்கு கிழக்கு உட்பட இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த மூன்று நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 42 பேர் உயிரிழந்துள்ளதாக இலங்கைப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கொழும்பில் இன்று புதன்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கடந்த சில தினங்களாக இடம்பெற்று வரும் வீதி விபத்துக்கள் தொடர்பாக கருத்து வெளியிடுகையிலேயே ருவன் குணசேகர இவ்வாறு தெரிவித்தார். கடந்த 13ஆம் திகதி காலை ஆறு மணியிலிருந்து இன்று புதன்கிழமை காலை ஆறு மணிவரை வடக்கு கிழக்கு உள்ளிட்ட இலங்கை ழுமுவதிலும் முப்பத்தியொரு வாகன விபத்துகள் இடம்பெற்றுள்ளதாக அவர் கூறினார்.
 
இந்த விபத்துக்களில் 42 பேர் பலியானதோடு மேலும் பலர் காயமடைந்து அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதாகவும் ருவன் குணசேகர தெரிவித்தார். காயமடைந்தவரிகள் பலரின் உடல் அவயங்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கவீனமடைந்திருப்பதாகவும் கூறினார்.

வாகனச் சாரதிகளின் கவனயீனத்தாலேயே இந்த விபத்துகள் இடம்பெறுவதாகவும் கூறிய அவர், வீதி விபத்துக்களைத் தடுக்க புதிய நடைமுறைகள் அமூல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதேவேளை, வடக்கு- கிழக்கு மற்றும் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கும் ஹயேஸ் வாகனங்களில் பயணம் செய்யும் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களே கூடுதலாகப் பலியாவதாகக் கூறப்படுகின்றது.

சில நாட்களில் பன்னிரண்டு தமிழர்கள் வாகன விபத்துக்களில் பலியாகியுள்ளனர். இன்று புதன்கிழமை கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பத்துப்பேரும், சென்ற சனிக்கிழமை அதிகாலை லன்டனில் இருந்து கொழும்புக்கு வந்த யாழ் நயினாதீவைச் சேர்ந்த 48 வயதான இளம் குடும்பப் பெண்ணொருவரும் கனடாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்த 65 வயதான குடும்பஸ்த்தரும் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.