இலங்கையின் தலைநகர்

கொழும்பில் தொடர் குண்டு வெடிப்பு- 290 பேர் பலி, கொல்லப்பட்டோரில் அதிகமானோர் தமிழர்கள்

மட்டக்களப்பு சியோன் தேவாலயக் குண்டுவெடிப்பில் 30 பேர் பலி-
பதிப்பு: 2019 ஏப். 21 14:33
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 23 14:46
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையின் தலைநகர் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம், சினமன் கிராண்ட் ஹோட்டல், ஷங்கிரிலா ஹோட்டல், புறகர் பகுதியான நீர்கொழும்பு கட்டுவபிட்டி புனித செபஸ்ரியன் தேவாலயம், மற்றும் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் மட்டக்களப்பு சியோன் தேவாலயம் ஆகிய ஆறு இடங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 290 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். ஐநூறுக்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்துள்ளனர். கொழும்புத் தேசிய வைத்திய சாலையில் 260 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.15இற்கும் 9.15இற்கும் மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் குண்டுகள் வெடித்துள்ளதாக இலங்கைப் பொலிஸார் தெரிவித்தனர்.
 
அதேவேளை. இன்று பிற்பகல் 2.30க்கு கொழும்பின் புநகர் பகுதியான தெஹிவளை மிருகக்காட்சிச் சாலைக்கு முன்பாகவுள்ள ஹேட்டேல் ஒன்றில் குண்டு வெடித்துள்ளது.

இந்தக் குண்டு வெடிப்புகளின் பின்னணி குறித்து பல்வேறுபட்ட ஊகங்கள், சந்தேகங்கள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன. இந்தக் குண்டுவெடிப்புகளில் உயிரிழப்புகள் அதிகமாக இருக்கலாம் என்றும் கொல்லப்பட்டவர்களில் அதிகமானோர் தமிழ்க் கிறிஸ்த்தவ மக்கள் என்றும் கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.

நீர்கொழும்பு கட்டுவபிட்டி புனித செபஸ்ரியன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் தமிழர்கள் உட்பட 112 இற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அவர்களில் 65 பேரின் சடலங்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 30 பேர் பலியாகியுள்ளனர் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்த 40 பேரின் சடலங்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

கொழும்பில் மூன்று ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்புகளிலும் பதினொரு வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆனாலும் இந்தக் குண்டு வெடிப்புகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பாக இலங்கை அரசாங்கமோ இலங்கை பாதுகாப்பு அமைச்சோ அதிகாரபூர்வமாக இதுவரை எதுவுமே தெரிவிக்க்வில்லை.