இலங்கையின் தலைநகர்

கொழும்பு நட்சத்திர ஹோட்டல் குண்டு வெடிப்பில் 33 வெளிநாட்டவர் பலி

தகவல்களை இலங்கை அரசாங்கம் வெளியிடவில்லை- பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டது
பதிப்பு: 2019 ஏப். 21 18:50
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 21 23:46
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையின் தலைநகர் கொழும்பு அதன் புறநகர் பகுதியான நீர்கொழும்பு மற்றும் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் மட்டக்களப்பு சியோன் தேவாயலத்திலும் தொடர்ச்சியாக இடம்பெற்ற குண்டு வெடிப்பையடுத்து இலங்கையின் முப்படையினரும் முக்கியமான சந்திகளில் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் நாளை திங்கட்கிழமை காலை ஆறு மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. நாளையும் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமையும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், பாடசாலைகள் அனைத்துக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களும் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பை இலங்கை அரசாங்கம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.
 
இன்று பிற்பகல் முதல் கொழும்பு நகரம் வெறிச்சோடிக் காணப்படுகின்றது. கொழும்பு காலிமுகத்திடலில் உள்ள ஏழு நட்சத்திரக் ஹோட்டல் மற்றும் இரண்டு ஐந்து நட்சத்திரக் ஹேட்டல்களில் நடந்த குண்டுவெப்பில் கொல்லப்பட்ட வெளிநாட்டு பிரஜைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பதினொரு வெளிநாட்டவர் பலியானதமாக ஆரம்பத்தில் இலங்கைப் பொலிஸ் ஊடப் பேச்சாளர் ருவான் குணசேகர கூறியிருந்தார். ஆனாலும் பிந்திக்கிடைத்த தகவல்களின் படி 33 வெளிநாட்டவர் பலியானதாக இலங்கை அரசாங்கத்தின் சுற்றுலாத்துறைத் திணைக்களம் கூறியுள்ளது.

பெல்ஜியம், பிரித்தானியா. அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே உயிரிழந்ததாகவும் இலங்கைச் சுற்றுலாத்துறைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை. குண்டுவெடிப்புடன் சம்மந்தப்பட்டதாகக் கூறப்படும் ஏழுபேரை கைது செய்துள்ளதாக இலங்கைப் பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜயரட்ண கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர்கள் சிலரின் படங்களை இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. ஆனாலும் இலங்கை அரசாங்கம் கைது செய்யப்பட்டவர்களின் விபரங்கள் எதனையும் வெளியிடவில்லை.