இலங்கையில் நடந்த உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலையடுத்து

பதினைந்து பாக்கிஸ்தானியர்களும் மூன்று இந்தியர்களும் கைது- விசாரணை தொடர்கின்றன

தேசிய தௌஹித் ஜமா அத் அமைப்பு இலங்கையில் தடை செய்யப்படும்- தயாசிறி
பதிப்பு: 2019 ஏப். 23 14:20
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 23 17:44
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையின் தலைநகர் கொழும்பு அதன் புநகர் பகுதியான நீர்கொழும்பு மற்றும் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் மட்டக்களப்பில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களையடுத்து, அவிசாவளையில் உள்ள செப்பு வயர் தொழிற்சாலையில் ஒன்பது பாகிஸ்தானியர்களும், மூன்று இந்திய முஸ்லீம்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை அதிரடிப்படையினர் நேற்றுத் திங்கட்கிழமை பிற்பகல் நடத்திய தேடுதல் சோதனை நடவடிக்கைகளின்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தத் தொழிற்சாலை செப்பு வயர் தொழிற்சாலை என்ற பெயரில் இயங்கியதாகவும் ஆனால் அங்கு குண்டுகளே தாயரிக்கப்பட்டதாகவும் சந்தேகிக்கப்படுகின்றது. தகவல் ஒன்றை அடுத்து அங்க சோதனை நடத்திய இலங்கை விசேட அதிரடிப்படையினர், தொழிற்சாலையை மூடியுள்ளனர்.
 
கைது செய்யப்பட்ட நபர்கள் கொழும்பின் புநகர் பகுதியான அவிசாவளையில் உள்ள இலத்திரனியல் கடையொன்றில் பணியாற்றுவதாக விசாரணையின் போது கூறியிருந்தனர்.

ஆனாலும் இலங்கைப் புலனாய்வுப் பொலிஸார் நடத்திய விசாரணையில் இவர்கள் பொய்யான தகவலை வழங்கியமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, விசா இன்றி நீர்கொழும்பில் தங்கியிருந்த பாக்கிஸ்தான் பிரஜைகள் ஆறு பேர் நேற்றுத் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கைப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தேசிய தௌஹித் ஜமா அத் அமைப்பு இலங்கையில் தடைசெய்யப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் தயாசிறி ஜயசேகர கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.