இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று நடந்த தாக்குதலின் பின்னரும்

கொழும்பு நகருக்குள் குண்டுகளுடன் வாகனங்கள்- பொலிஸாரின் அறிவிப்பினால் மக்கள் பதற்றம்

உலகத்துக்கு ஒரே கடவுள் என்ற வாசகத்துடன் நகரில் வலம்வரும் மோட்டார் சைக்கிள்
பதிப்பு: 2019 ஏப். 23 23:17
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 23 23:31
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
குண்டுகள் பொருத்தப்பட்ட லொறி ஒன்றும் ஐந்து மோட்டார் சைக்கிளும் கப் ரக வாகனம் ஒன்றும் குண்டுகளுடன் கொழும்பு நகருக்குள் உள்நுழைந்துள்ளதாக இலங்கைப் புலனாய்வுப் பொலிஸார் அறிவித்ததையடுத்து கொழும்பு நகரில் மக்கள் மத்தியில் பதற்றம் அதிகரித்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இந்த அறிவிப்பு வெளியானதும் அரைகுறையாகத் திறக்கப்பட்டிருந்த வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டன. கொழும்பு நகரம் வெறிச்சோடியது. இன்று இரவு வரை குறித்த வாகனங்கள் எதுவும் இலங்கைப் பொலிஸாரால் கைப்பற்றப்படவில்லை. உயிர்த்த ஞாயிறன்று நடந்த குண்டு வெடிப்பை அடுத்து இன்று செவ்வாய்க்கிழமை வரையும் அரச விடுமறை வழங்கப்பட்டிருந்து.
 
நாளை புதன்கிழமை காலை முதல் வழமை போன்று அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் செயற்படவுள்ள நிலையில் குண்டுகளுடன் வாகனங்கள் கொழும்பு நகருக்குள் உள்நுழைந்துள்ளதாக விடுக்கப்பட்ட அறிவிப்பு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரச ஊழியர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இன்று இரவு ஒன்பது மணிக்கு ஆரம்பித்த ஊரடங்குச் சட்டம் நாளை புதன்கிழமை அதிகாலை நான்கு மணி வரை அமூலில் இருக்குமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் குண்டுகளுடன் உள் நுழைந்த வாகனங்கள் கண்டுபிடிக்கப்படும் வரை நாளை கொழும்பு நகரக்குள் உள்ள அரச, தனியார் அலுவலகங்களுக்கு பணியளர்கள் சமூகமளிக்கமாட்டார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை. உலகத்துக்கு ஒரே கடவுள் என்ற வாசகம் எழுதி ஒட்டப்பட்ட மோட்டார் iசைக்கிள் ஒன்றுடன் நபர் ஒருவர் கொழும்பு நகரைச் சுற்றி வலம் வரும் படம் ஒன்று பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ளது.