இலங்கை முப்படையினரின் கெடுபிடிகள் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் - ஏற்பாட்டுக் குழு அழைப்பு

காலை 10.30்க்கு நினைவுச்சுடர் ஏற்றப்படும் - கொழும்பில் இருந்தும் பலர் வந்துள்ளனர்
பதிப்பு: 2019 மே 17 23:47
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: மே 18 11:25
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#TamilGenocide
#Tamils
#Mullivaikal
#Mullaituvu
#Remembarance
#Universityofjaffna
#UOJ
#Students
இலங்கை அரசினால் நடத்தப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்புப் போரில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூர்ந்து முள்ளிவாய்க்காலில் நடைபெறவுள்ள நினைவேந்தலில் அனைத்து மக்களையும் சமுகமளிக்குமாறு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளடங்கிய ஏற்பாட்டுக்குழு அழைப்பு விடுத்துள்ளது. முள்ளிவாய்க்கால் பத்தாண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நினைவேந்தல் நிகழ்வில் சமயத் தலைவர்கள், தமிழ் அரசியல் பிரதிநிதிகள், பிரமுகர்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் பங்குகொள்ளவரென ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது. இலங்கைப் படையினரின் சோதனைக் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.
 
நாளை சனிக்கிழமை முற்பகல் 10.30க்கு முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் இடம்பெறும் நிகழ்வில் கலந்துகொள்ள கொழும்பில் இருந்தும் பலர் சென்றுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை சைவ சமயக் குருக்கள், அருட்தந்தையர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் இணைந்து துப்புரவு செய்தனர். சிரமதானப் பணிகளிலும் ஈடுபட்டனர்.

இறுதிப் போரின்போது கொல்லப்பட்ட தமிழ் மக்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பு நாள் ஆண்டுதோறும் ஈழத் தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் அனுட்டிக்கப்பட்டு வருகின்றது.

ஆனால் இந்த ஆண்டு இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களைக் காணரங்காட்டி இலங்கை முப்படையினர் வடக்கு - கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்களிலும் போர்க்காலம் போன்று வீதிச் சோதனைச் சாவடிகளை அமைத்துள்ளனர்.

அவசரகாலச் சட்டமும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் மாணவர்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஏற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.