ஈழப் பேரில் கொல்லப்பட்ட

இலங்கை முப்படையினருக்கு மைத்திரி தலைமையில் அஞ்சலி

அரசியல் முரண்பாடுகளுக்கு மத்தியில் ரணில், மைத்திரி, மகிந்த ஒரே மேடையில்
பதிப்பு: 2019 மே 19 23:35
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மே 19 23:54
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
ஈழப் போரில் வெற்றியடைந்த இலங்கை ஒற்றையாட்சி அரசின் முப்படையினருக்கு இலங்கை மக்கள் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் நன்றி செலுத்த வேண்டுமென்ற இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் கூற்றுக்கு அமைவாக இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நான்கு 30க்கு இலங்கை முப்படையினருக்கும் மரியாதை செலுத்தப்பட்டது. அத்துடன் 2009 ஆண்டு முள்ளிவாய்க்கால் போரில் உயிர் நீத்த முப்படையினருக்கும் அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இலங்கை ஒற்றையாட்சியாட்சி அரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இலங்கை நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள படையினரின் நினைவுத் துபியில் பத்தாம் ஆண்டு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
 
அரசியல் முரண்பாடுகளுக்கு மத்தியிலும் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட பிரதான சிங்கள அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இலங்கையின் ஓய்வுப்பெற்ற மேஜர் ஜெனரல் சன்மிக லியனகே வரவேற்புரையாற்றினார். சர்வமத வழிபாடுககளையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றினார்.

போரில் கொல்லப்பட்ட இலங்கை முப்படையினரின் உறவினர்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர். இலங்கைத் தேசியப் படைவீர் கௌரவிப்பு எனப் பெயரிடப்பட்ட இன்றைய நிழக்வில் இசைவாத்திய நிகழ்வும் இடம்பெற்றது.

இலங்கை நாடாளுமன்றச் சபாநாயகர் கரு ஜெயசூரிய, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன, அமைச்சர் அர்ஜூன ரணதுங்க ஆகியோரும் மற்றும் இலங்கை ஒற்றையாட்சி அரசின் சிங்கள உயர் அதிகாரிகளும் நிகழ்வில் பங்குபற்றினர்.

சுமார் இரண்டு மணிநேரமாக இடம்பெற்ற நிகழ்வில் போரில் கொல்லப்பட்ட இலங்கை முப்படையினரையும் நினைவுகூர்ந்து பாடல்களும் இசைக்கப்பட்டன.