தமிழர் தாயகத்தின் அறிவுப் பெட்டகம்

தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய யாழ் பொது நூலகம் தீக்கிரையாகி 38 ஆண்டுகள்

ஈழத் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதற்கு காரணம்
பதிப்பு: 2019 ஜூன் 01 11:36
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 02 03:15
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#JaffnaPublicLibrary
#Jaffna
#JaffnaLibraryBurned
#Srilanka
#Lka
தமிழ் மக்களின் கல்வி மற்றும் கலை கலாசாரத்தை வெளிப்படுத்தும் யாழ்ப்பாண நகரத்தின் மத்தியில் அமைந்துள்ள பொது நூலகம் எரியூட்டப்பட்டு இன்றுடன் 38 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. ஆசியாவின் மிகப்பெரிய பொது நூலகமாக விளங்கிய யாழ்ப்பாண பொது நூலகம் திட்டமிட்டு எரிக்கப்பட்டமை சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியிருந்தது. அறுதிப் பெரும்பான்மையுடன் 1977ஆம் ஆண்டு ஆட்சியமைத்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் கீழ் 1981ஆம் ஆண்டு தமிழ் மக்கள் மீதான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
 
தமிழ் மக்கள் மீது இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தால் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டமைக்கான மிகச்சிறந்த உதாரணமே யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்ட சம்பவமாகும்.

யாழ்ப்பாண நூலகம் 1981ஆம் ஆண்டு எரிக்கப்பட்டமையே வடக்கு- கிழக்கு இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதற்கு மிகப் பெரிய காரணமாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

தமிழ் மக்களின் பாரம்பரிய கலாசாரங்கள், வரலாறுகளை எடுத்துக்காட்டும் தமிழ் நூல்களும் ஆங்கில மொழி நூல்கள் உட்பட 6 மொழியிலான நூல்களும் யாழ் நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வந்தன. கிட்டத்தட்ட 35 ஆயிரம் நூல்கள் இதன்போது எரிந்து சாம்பராகின.

1994ஆம் ஆண்டு கொழும்பு கிராண்ட்பாஸில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் காமினி திசநாயக்க, 1981ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோது இந்த நூலகம் தீக்கிரையானது.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவியேற்று தனது அதிகாரத்தின் மூலம் பலாலி இராணுவ முகாமை விஸ்தரித்துக்கொண்டிருந்த வேளையில், யாழ். பொது நூலகமும் யாழ். நகரிலுள்ள பிரபல வர்த்தக நிலையங்களும் எரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.