தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணம் அம்பாறை

கல்முனைப் போராட்டம்- பேரினவாதம் கையிலெடுத்த பின்னணி

பௌத்த பேரினவாதத்தோடு கூட்டுச் சேர்ந்துள்ள சில்லறைகளின் அரவனைப்பில் மக்கள் சென்றுவிடும் அபாயம்!
பதிப்பு: 2019 ஜூன் 20 15:31
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 23 03:28
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக் கோரி கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் போராட்டங்களின் பின்னணியில் இந்துத்துவா அமைப்பு செயற்படுவதாக கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். பௌத்த- இந்து உறவு என்ற பெயரில் வடக்கு- கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் சமீபகாலமாகச் செயற்பட்டு வரும் சில தமிழ்ப் பிரமுகர்கள், கண்டியக் கலாச்சாரத்தை மையமாகக் கொண்ட பௌத்த போதனைகளை முதன்மைச் சமயமாக ஏற்றுக் கொண்டுள்ளனர். அதன் கீழ் இந்து சமய அடையாளங்களைப் பின்பற்ற இணங்கிய சூழலில், பௌத்த குருமாருடன் இணைந்து முஸ்லிம் மக்களுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த வேண்டுமென்ற கோரிக்கைகள் நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.
 
ஆனால் இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கம, 2009 ஆம் ஆண்டு மே மாதம் ஈழப் போர் இல்லாதொழிக்கப்பட்ட பின்னரான சூழலில், போரினால் ஏற்பட்ட பக்க விளைவுகளுக்குக் கூட இதுவரை தீர்வை முன்வைக்கவில்லை.

பௌத்த பேரினவாதம் முஸ்லிம் மக்களை நேரடியாகத் தாக்கினால், 2009 ஆம் ஆண்டுக்கு பின்னரான சூழலில் மற்றைய சமுகம் ஒன்றை இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கம் ஓரம்கட்டுவதாகக் குற்றச்சாட்டுக்கள் சர்வதேச மட்டத்தில் எழுந்துவிடும். ஆகவே அதிலிருந்து தப்பிக்கவே பௌத்த- இந்து உறவு என்று கூறிக் கொண்டு தமிழ் மக்களை முஸ்லிம் மக்களுக்கு எதிராகத் தூண்டி விடுகின்ற அணுகுமுறையை பௌத்த குருமார் ஊடாக சிங்கள ஆட்சியாளர்கள் கையாளுகின்றனர்.

இந்த நிலையில் கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தைத் தரம் உயர்த்தும் கோரிக்கைகளை ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான கண்ணோட்டத்தோடு ஒப்பிட்டு இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கம் தட்டிக் கழிக்கின்றது.

அத்துடன் தமிழ்- முஸ்லிம் உறவை கிழக்கு மாகாணத்தில் மேலும் சிதைப்பதற்கு ஏற்ற முறையிலும் இந்த விவகாரத்தை சிங்கள ஆட்சியாளர்கள் கையாண்டு வருகின்றனர்.

இவ்வாறானதொரு நிலையிலேதான், இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலின் பின்னரான சூழலில், இலங்கைத் தீவில் இருந்து முஸ்லிம்களை முற்றாக ஓரம்கட்டுவதற்காக தமிழ் மக்களை முஸ்லிம் மக்களோடு மோதவிடும் சூழ்சி ஒன்றை இலங்கை அரச இயந்திரத்தின் ஆதரவோடு பௌத்த குருமார் வகுத்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதன் பரீட்சார்த்த நகர்வுதான் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக் கோரும் போராட்டங்கள். இதற்கு ஆதரவாகப் போர்க்காலத்தில் இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து இயங்கியவரும், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் பிரதியமைச்சராகப் பதவி வகித்தவருமான கருணா எனப்படும் விநாயகமூத்தி முரளிதரனும், கடந்த ஒக்ரேபர் மாதம் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியின் போது மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து மகிந்த தலைமையிலான அரசாங்கத்தில் பிரதியமைச்சர் பதவி வகித்திருந்த வியாழேந்திரன் ஆகியோரும் செயற்படுகின்றனர்.

கருணா
கருணா எனப்டும் விநாயகமூர்த்தி முரளிதரன், வியாழேந்திரன் போன்றவர்கள் மகிந்த ராஜபக்ச தரப்பின் தேர்தல் வெற்றிக்காகவும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்தும் போராட்டத்தைக் கையிலெடுத்துள்ளதாகக் கிழக்கில் பேசப்படுகின்றன. போர்க்காலத்தில் இலங்கை இராணுவத்துடன் கருணா சேரந்து இயங்கியவர். வியாழேந்திரன் கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதத்தின் பின்னர், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கட்சி ஆதரவாளராக மாறியுள்ளார். போர்க்காலத்தில் இலங்கை இராணுவப் புலனாய்வுடன் சேர்ந்து செயற்பட்ட சில பௌத்த குருமார், அம்பாறை மாவட்ட தமிழ்க் கிராமங்களில் பௌத்த- இந்து உறவை வளர்ப்பதற்கான பிரச்சாங்களில் ஈடுபட்டு வருவதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

ஆகவே இந்தப் போராட்டம் எந்தளவு தூரம் நியாயமானதாக இருக்கும் என்ற கேள்விகள் தமிழ் மக்கள் மத்தியில் எழாமலில்லை. கிழக்கில் கிஸ்புல்லாஹ், அமீர் அலி போன்ற ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளுக்காக சாதாரண முஸ்லிம் மக்கள் அனைவரையுமே ஒட்டுமொத்த எதிரியாகப் பார்ப்பது, தமிழர்களின் அரசியல் விடுதலைப் பயணத்துக்கு ஆரோக்கியமானதல்ல.

எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் விடுதலைப் போராட்டம் ஒன்றைத் தொடர்ச்சியாக நடத்தி வரும் தமிழச் சமூகம், இதனை பட்டறிவின் ஊடகச் சிந்நதிக்கத் தலைப்பட வேண்டும்.

தமிழ்த் தேசியக் கோட்பாட்டைச் சிதைக்கவும். ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பிரதான அரசியல் சிந்தனையில் இருந்து திசை திருப்பவும் கையாளப்படும் இந்தப் பிரித்தாளும் தந்திரோபாயங்களை இனம் கண்டு. இந்துத்துவா போன்ற அமைப்புகளைச் செயலிழக்கச் செய்ய வேண்டும்

பௌத்த பேரினவாதம் முஸ்லிம் மக்களை நேரடியாகத் தாக்கினால் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில் மற்றைய சமூகம் ஒன்றை இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கம் ஒதுக்குகின்றது என்ற குற்றச்சாட்டுக்கள் சர்வதேச மட்டத்தில் எழுந்துவிடும். அது ஜெனீவா வரை போய்ச் சேரும் நிலையும் ஏற்படலாம்.

ஆகவே அவ்வாறான குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பிக்கவே பௌத்த- இந்து உறவு என்று கூறிக் கொண்டு தமிழ் மக்களை முஸ்லிம் மக்களுக்கு எதிராகத் தூண்டி விடுகின்ற அணுகுமுறை ஒன்றை பௌத்த குருமார் ஊடாக சிங்கள ஆட்சியாளர்கள் கையாளுகின்றனர்.

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில். தமிழ் மக்களுக்கான தலைமை தாங்களே என்று, தங்களைத் தாங்களே மார்தட்டிக் கொள்ளும் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலவீனமே கிழக்கில் இன்று ஏற்பட்டுள்ள இந்த நிலைமைக்கு முழுமையான காரணம் என்ற கருத்துக்களும் உண்டு.

ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளினால் அதிருப்பதியடைந்துள்ள தமிழ் மக்கள், விரும்பியோ விரும்பாமலோ கருணா போன்ற சிங்கள பௌத்த பேரினவாதிகளோடு கூட்டுச் சேர்ந்துள்ள சில்லறைகளின் அரசியல் அரவனைப்புக்குள் சென்றுவிடும் அபாயம் உள்ளது

இவ்வாறன சூழலில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், விக்னேஸ்வரன், சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்றவர்கள் அமைதிகாப்பது ஆரோக்கியமானதல்ல. சரியான நிலைப்பாட்டை தமிழ் மக்களிடம் சொல்ல வேண்டும். இல்லையேல் கிஸ்புல்லாஹ், ரிஷரட் பதியுதீன் போன்ற ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளினால் அதிருப்பதியடைந்துள்ள தமிழ் மக்கள் விரும்பியோ விரும்பாமலோ கருணா போன்ற சிங்கள பௌத்த பேரினவாதிகளோடு கூட்டுச் சேர்ந்துள்ள சில்லறைகளின் அரசியல் அரவனைப்புக்குள் சென்றுவிடும் அபாயம் உள்ளது. இதற்குப் பக்கபலமாக இந்துத்துவா அமைப்பும் உள்ளது.

எனவே, தமிழ் மொழியிலான காட்சி ஊடகங்களும், பிரதான தமிழ் மொழி நாளேடுகளும், வார இதழ்களும் சிங்களப் பேரினவாதத்தின் பிரித்தாளும் தந்திரோபாயங்களை புடம்போட்டுக் காண்பிக்க வேண்டும். மேய்ப்பன் இல்லாத மந்தைகளாக தமிழர்கள் மாறும் நிலைக்கு இட்டுச் செல்லக் கூடாது.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்துத்தவ அமைப்புத் தான், மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் சைவத் தமிழ் மக்களையும் கிறிஸ்தவத் தமிழ் மக்களையும் மோதவிட்டு, பௌத்த பேரினவாதத்திற்குத் தீனி போட்டுக் கொடுத்தது என்பதை மந்துவிடவும் முடியாது.

எனவே தமிழ்த் தேசியக் கோட்பாட்டைச் சிதைக்கவும். ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பிரதான அரசியல் சிந்தனையில் இருந்து திசை திருப்பவும் கையாளப்படும் இந்தப் பிரித்தாளும் தந்திரோபாயங்களை இனம் கண்டு. இந்துத்துவா போன்ற அமைப்புகளைச் செயலிழக்கச் செய்ய வேண்டுமென சமுக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனார்.

திருகோணமலை கன்னியாவில் ஈழத் தமிழர்களின் பாரம்பரியக் காணிகள், பிள்ளையார் ஆலயம் இருந்த இடங்கள் அழிக்கப்பட்டு, அடையாளங்களை மாற்றி, அங்கு பௌத்த விகாரை கட்டுவதற்கு அல்லது பௌத்த சமய அடையாளத்தோடு சேர்ந்து சைவத் தமிழ் பாரம்பரியங்களை இந்து என்ற அடையாளங்களோடு பேணலாம் என்ற திட்டங்கள் வகுக்கப்படுவதன் பின்னணியிலும் இந்துத்துவா அமைப்பு இருப்பதாகவே சந்தேகிக்கப்படுகின்றது.