நவம்பர் 16 ஆம் திகதிக்குப் பின்னரான சூழலில்

ஜெனீவா மனித உரிமைச் சபையின் குற்றச்சாட்டில் இருந்து வெளியேற இலங்கை முன்னெடுக்கும் நகர்வுகள்

சீனத் தகவல் தொழினுட்பத்தைக் கைவிடுவதற்கான மீளாய்வில் கோட்டாபய ராஜபக்ச- இந்தியாவும் கரிசனை
பதிப்பு: 2020 ஜன. 02 00:11
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 10 23:39
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#indianocean
#region
இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா, இந்தியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் போட்டியிட்டுக் கொண்டிருக்கும் நிலையில் சீனா, ரஷியாவுடன் இணைந்து ஈரான் இந்தியப் பெருங்கடலின் வடக்கு பகுதியில் கூட்டு இராணுவ பயிற்சி நடத்தியுள்ளது. இந்தத் தகவல் உலகம் முழுவதும் உள்ள இராணுவ ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்கா, ஈரான் நாடுகளிடையே பதற்றம் நிலவி வருகின்ற சூழலில், ஒலி வேகத்தின் 27 மடங்கு வேகத்தில் அணு ஆயுதங்களை அனுப்பும் திறன் கொண்ட அவாங்கார்ட் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை (Avangard hypersonic missile) ரஷியா போர் நடவடிக்கைக்காகப் பயன்படுத்தவுள்ளதாகவே கருதப்படுகின்றது.
 
அவுஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய ஆகிய மூன்று நாடுகளும் ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் தீவிரமான புவிசார் அரசியல் சக்தி வாய்ந்த உறுப்பு நாடுகளாகப் பங்களிப்புச் செய்கின்றன. அதேவேளை, இந்த ஆண்டு ஜனவாி மாதம் சீனா, பிாித்தானிய ஆகிய நாடுகளின் பதவிக் காலம் முடிவடைவதால் இந்த இரு நாடுகளும் வெளியேறுகின்றன.

சீனா தனது மிகப்பெரிய தகவல்த் தொடர்பு செயற்கைக்கோளை ஒரு புதிய சக்திவாய்ந்த ரொக்கெட்டில் ஏவியமை தொடர்பாகவும் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், ரஷ்யாவின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.

இந்தியப் பெருங்கடலிலும், பாகிஸ்தானின் கிழக்கே அமைந்துள்ள ஓமான் வளை குடாவிலும் இந்தக் கடற்படைப் பயிற்சிகள் நடைபெற்றமை தெற்காசியாவின் அணுசக்தி அணுகுமுறை, அமெரிக்கா அணுசக்கி ஒப்பந்தத்தில் குறைபாடுகள் உள்ளதாகத் தெரிவித்து விலகியமை, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் இராணுவமயமாக்கலை அதிகரிக்கவுள்ளதாகவும் இராணுவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையிலேதான் எதிர்வரும் மார்ச் மாதம் கூடவுள்ள ஜெனீவா மனித உரிமைச் சபையில், இலங்கை தொடர்பான தீர்மானத்தை ரத்துச் செய்ய இந்தப் பூகோள அரசியல் போட்டிகளை கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்குச் சாதகமாக எந்தவழியிலேனும் பயன்படுத்தத் தீர்மானித்துள்ளதை அவருடைய நகர்வுகள் கோடிகாட்டுகின்றன.

2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானித்தில் கூறப்பட்டுள்ள 20 நிபந்தனைகளில் பதினேழு விடயங்களைப் பூர்த்தி செய்துள்ளதாக மகிந்த ராஜபக்ச தலைமையிலான அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கொழும்பில் செய்தியாளா்களிடம் தெரிவித்துள்ளாா்.

சா்வதேச ஒப்பாசாரத்துக்காக அவ்வாறு கூறினாலும் இந்தத் தீர்மானம் தொடர்பாக புதிய அரசாங்கம் இதுவரை எந்தவொரு முடிவுகளையும் எடுக்கவேயில்லை. ஜெனீவாத் தீர்மானம் குறித்து இறுதி முடிவுகள் எடுக்கப்படவில்லை என்றே அமைச்சா் சுசில் பிரேமஜயந்தவும் கூறுகிறார்.

அவுஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய மூன்று நாடுகளும் ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் தீவிரமான புவிசார் அரசியல் சக்தி வாய்ந்த உறுப்பு நாடுகளாகப் பங்களிப்புச் செய்கின்றன. அதேவேளை, 2020 ஆண்டு ஜனவாி மாதம் சீனா, பிாித்தானிய ஆகிய நாடுகளின் பதவிக் காலம் முடிவடைவதால் இந்த இரு நாடுகளும் வெளியேறுகின்றன.

தொடர்ச்சியாக இரண்டு தடவைகள் ஆறு ஆண்டுகள் ஜெனீவா மனித உரிமைச் சபையில் அங்கம் வகித்திருந்த நிலையிலேயே இந்த நாடுகளும் வெளியேறவுள்ளன.

ஈரான், சீனா ஆகிய நாடுகளோடு இந்தியப் பெருங்கடல் மற்றும் ஓமான் வளைகுடாவில் கூட்டு கடற்படைப் பயிற்சியை டிசம்பா் மாதம் நடத்திய பின்னர், ரஷியா தனது வெளிவிவகார அமைச்சரை கொழும்புக்கு அனுப்பி வைக்கிறது. அவர் மறுநாள் புதுடில்லிக்குச் செல்வார் என அந் நாட்டு வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மரியா ஸகரோவா தெரிவித்துள்ளார்

இந்த நிலையில் 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்தல் அதில் கூறப்பட்டுள்ள சில விடயங்களை ரத்துச் செய்தல் போன்றவை தொடா்பாக இலங்கைச் சட்டமா அதிபா் திணைக்களமும் இலங்கை வெளியுறவு அமைச்சும் பிரதமா் அலுவலகமும் இணைந்து பாிசீலித்து வருவதாக சுசில் பிரேமஜயந்த கூறியுள்ளாா்.

30/1 தீர்மானத்தில் உள்ளதாகக் கூறப்படும் போர்க் குற்றச்சாட்டுகள் அது குறித்த விசாரணைக்கான கலப்பு நீதிமன்றங்கள் ஆகியவை இலங்கை இராணுவத்தின் தரத்தைத் தாழ்த்தியுள்ளதாகவும் சுசில் பிரேமஜயந்த கூறுகிறாா்.

ஜெனீவா மனித உரிமைச் சபையின் இவ்வாறான தரம் தாழ்த்தும் தீா்மானத்தால் இராணுவச் செயற்பாடுகளில் இலங்கை இராணுவத்தினா் நம்பிக்கையிழந்தவா்களாகக் காணப்பட்டனா். இதன் காரணமாகவே உயிா்த்த ஞாயிறுத் தாக்குதல் மிகவும் இலகுவாக நடத்தப்பட்டிருந்ததாகவும் அமைச்சா் சுசில் பிரேமஜயந்த காரணம் கூறுகிறார்.

இந்தக் கருத்தையே கோட்டாபய ராஜபக்சவும் முன்னர் கூறியிருந்தாா். எனவே கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச ஆகியோரை மையப்படுத்திய புதிய அரசாங்கம் 30/1 தீர்மானத்தை இலங்கையின் இறைமைக்குக் கேடாகவே கருதுகின்றது. ஆனாலும் இந்தத் தீா்மானம் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை எனவும் சுசில் பிரேமஜயந்த கூறுகிறாா்.

ஜெனீவா மனித உரிமைச் சபை தேர்ந்தெடுக்கப்பட்ட 47 உறுப்பு நாடுகளை உள்ளடக்கியது. எதிர்வரும் பெப்ரவாி மாதம் 24 ஆம் தகதி நடைபெறவுள்ள மனித உரிமைச் சபையின் 43 வது அமர்வு ஆரம்பமாகவுள்ளது.

இவ்வாறானதொரு நிலையில் எதிா்வரும் ஜனவரி மாதம் 14,15 ஆம் திகதிகளில் ரஷிய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் (Sergey Lavrov) தனது இந்தியப் பயணத்துக்கு முன்னதாக இலங்கைக்கு வர உள்ளதாக ரஷியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் மற்றும் சீனாவுடன் இந்தியப் பெருங்கடல் மற்றும் ஓமான் வளைகுடாவில் கூட்டு கடற்படைப் பயிற்சியை டிசம்பா் மாதம் நடத்திய பின்னர், ரஷியா தனது வெளிவிவகார அமைச்சரை கொழும்புக்கு அனுப்பி வைக்கிறது. அவர் மறுநாள் புதுடில்லிக்குச் செல்வார் என அந் நாட்டு வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மரியா ஸகரோவா (Maria Zakharova) தெரிவித்துள்ளார்.

இந்தப் பயணத்தின்போது ரஷிய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பிரதமர் மஹிந்த ராஜபக்ச இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடல் மேற்கொள்ளவுள்ளார்.

ரஷியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான தற்போதைய உறவுகள், அரசியல் பேச்சுவார்த்தைகளை ஊக்குவிப்பதற்கான வாய்ப்புகள், வர்த்தக-பொருளாதார, மனிதாபிமான மற்றும் ஏனைய துறைகளில் ஒத்துழைப்பை வளர்ப்பது, அத்துடன் இருதரப்பு ஒப்பந்தம் மற்றும் சட்ட அடிப்படையை விரிவாக்குவது குறித்து கலந்துரையாடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவா் கூறுகிறார்.

இதனையடுத்து, ஜனவரி 15 ஆம் திகதி, ரஷிய வெளிவிவகார அமைச்சர் புதுடில்லியில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமண்யம் ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனைய அபிவிருத்திகள் இந்தியா ஜப்பான் ஆகிய நாடுகளிடம் கையளிக்கப்படவுள்ளன. இந்த இரு நாடுகளும் இணைந்து கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையை அபிவிருத்தி செய்யும் போது அம்பாந்தோட்டைத்துறைகப் பாதுகாப்பு விடயங்களில் கவனம் செலுத்த அது அமெரிக்காவுக்கு வசதியாகவும் இருக்கலாம்

ஜனவரி 14-16 திகதிகளில் இந்திய தலைநகரில் நடைபெறவிருக்கும் ரைசினா உரையாடல் மாநாட்டில் ரஷிய வெளிவிவகார அமைச்சா் பங்கேற்கத் திட்டமிட்டுள்ளார். சீனா, ரஷியா, ஈரான் கூட்டுக் கடற்படை முத்தரப்புப் பயிற்சியை மேற்கொண்டு வரும் நிலையில் ரஷிய வெளிவிவகார அமைச்சா் புதுடில்லிக்கும் செல்லவுள்ளமை பிராந்திய அரசியலின் போட்டித் தன்மையை அதிகாித்துள்ளதெனலாம்.

அதேவேளை, இந்த முத்தரப்புப் பயிற்சி 2018 முதல் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் நடைபெற்று வருவதாகச் சீனாவின் பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் வு கியான் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமான் வளைகுடா ஹார்முஸ் பகுதி உலகின் முக்கியமான எண்ணெய் வளப் பகுதிகளில் ஒன்றாகும். இந்த வளைகுடா ஒரு முக்கியமான இடமாகவும், உலகளாவிய எரிசக்தி போக்குவரத்திற்கு இன்றியமையாததாகவும் உள்ளது. ஆனாலும் இதன் நிலைமை சீனாவின் பொருளாதாரத்தையும் பாதுகாப்பையும் பெரிதும் பாதிக்கக்கூடும் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சியால் இயக்கப்படும் பத்திரிகையின் ஆங்கில பதிப்பான குளோபல் டைம்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதேவேளை, கோட்டபய ராஜபக்ச இலங்கையில் பதவிக்கு வந்த பின்னரான சூழலில் அமெரிக்க- இந்திய உறவு அம்பாந்தோட்டைத் துறைமுகப் பாதுகாப்புத் தொடர்பான விவகாரங்களைக் கையாள்வதற்குப் புதிய அணுகுமுறை ஒன்றை மேற்குலக நாடுகள் தேர்தெடுத்துள்ளதெனலாம்.

குறிப்பாக அம்பாந்தோட்டைத் துறைமுகம் இந்தியாவின் கொல்லைப்புறத்தில் அமைந்துள்ள அச்சம் நிறைந்த பாதுகாப்பு உட்கட்டமைப்பு அபாயத்தைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே இந்த அணுகுமுறை வகுக்கப்பட்டுள்ளதாகக் கருத முடியும்.

அம்பாந்தோட்டைத் துறைமுக அவதானிப்பை பிரதானமாகக் கருதி கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனைய அபிவிருத்திகள் இந்தியா ஜப்பான் ஆகிய நாடுகளிடம் கையளிக்கப்படவுள்ளன. இந்த இரு நாடுகளும் இணைந்து கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்யும் போது அம்பாந்தோட்டைத்துறைமுகப் பாதுகாப்பு விடயங்களில் கவனம் செலுத்த அது அமெரிக்காவுக்கு வசதியாகவும் இருக்கலாம்.

சீனா, ரஷியா என்ற இரு நாடுகளுடனான உறவுகளையும் வைத்துக் கொண்டு அமொிக்கா போன்ற மேற்குலக நாடுகளையும் இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளையும் இலங்கைக்கு ஏற்றவாறு செயற்பட வைப்பதற்கான உத்திகளையும் கோட்டாபய வகுத்து வருகின்றார் என்றே கூறலாம்

இதன் பின்னணியிலேதான் அமெரிக்கா இந்தியக் கூட்டுறவு இலங்கையில் சீன அரசின் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழினுட்ப உட்கட்டமைப்பைக் கைவிட அல்லது முற்றாக வெளியேற்றுவதற்காக கோட்டாபய ராஜபக்சவைப் பயன்படுத்தவும் முடிவு செய்திருக்கின்றன.

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இதற்கான ஏற்பாட்டைச் செய்துள்ளதாகவே கொழும்பில் உள்ள இந்தியச் செய்தியாளா்கள் கூறுகின்றனா். இலங்கைத் தீவில் சீனாவின் தகவல் தொழினுட்பத்திற்குப் பதிலாக அமெரிக்காவிற்கு விருப்பமான தகவல் தொழினுட்பத்திற்கு ஆதரவு வழங்கக் கோட்டபய ராஜபக்சவுக்கு அழுத்தம் கொடுக்கப்படலாமெனக் கொழும்பில் உள்ள இந்தியச் செய்தியாளா்கள் கூறுகின்றனா்.

சீனாவின் தகவல் தொழினுட்பம் இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமையுமெனக் கடந்த வாரம், அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளா் மைக் பொம்பியோ, (Mike Pompeo) வோஷிங்டன் டி.சி.யில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கூறியிருந்தாா். இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டாா்.

சீன அரசினால் இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப இணைய வலையமைப்புகள், குறிப்பாக ஐந்து ஜி உள்ளிட்ட தகவல் தொழினுட்பச் சாதனங்கள், கொள்ளையடிக்கும் பொருளாதாரச் செயற்பாடுகள் என்றும் மைக் பொம்பியோ குற்றம் சுமத்தியுள்ளார்.

தற்போது வெளியுறவுத் துறைச் செயலாளராகப் பதவி வகிக்கும் மைக் பொம்பியோ முன்னர் அமெரிக்காவின் சிஜஏ எனப்படும் மத்திய புலனாய்வுப் பிாிவின் இயக்குநராகப் பதவி வகித்திருந்தாா்.

ஆகவே மைக் பொம்பியோ சீனாவின் தகவல் தொழினுட்ப ஆபத்துத் தொடா்பாகக் கூறிய கருத்தை கோட்டாபய ராஜபக்ச ஏற்கக் கூடிய நிலை அல்லது மீளாய்வு செய்யக் கூடிய நிலைமை ஏற்படலாம் என்ற கருத்துக்களும் எழாமலில்லை. ஏனெனில் சீனத் தகவல் தொழினுட்பத்தை முற்றாகப் புறக்கணிக்க வேண்டும் என்ற விடயத்தில் இந்தியாவும் அதிக ஈடுபாட்டுடனேயே செயற்படுகின்றது.

வோஷிங்டன் டீசியில் இடம்பெற்ற கூட்டத்தின் போது, ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான், நேபாளம், இலங்கை, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் நிலைமை குறித்த மதிப்பீடுகளைப் பகிர்ந்து கொண்டதாக இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் விளக்கமளித்திருக்கிறார்.

உலகம் முழுவதும் 5 ஜி தொழினுட்பத்தில் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே ஒரு பனிப்போர் நிலவி வரும் நிலையில் இந்தக் கருத்துக்களும் வெளியாகியுள்ளன.

ஆகவே அமொிக்கா, இந்தியா ஆகிய நாடுகளுக்கு ஏற்ற முறையிலான விட்டுக் கொடுப்புகளைச் செய்யும்போது ஜெனிவா மனித உரிமைச் சபையில் அனைத்துக் குற்றச்சாட்டுக்களில் இருந்தும் இலங்கையை முற்றாக விடுவிக்க வேண்டுமென்ற நிபந்தனையை கோட்டாபய ராஜபக்ச விதித்துள்ளாரென்றே கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன.

ஜெனீவா மனித உரிமைச் சபையில் சீனாவின் அங்கத்தும் காலவதியான நிலையில் மேற்குலக நாடுகளின் சீனாவுக்கு எதிரான பிராந்திய அரசியல் நலன்களுக்கு உடன்பட்டு இலங்கையைக் காப்பாற்றுவதே கோட்டாபயவின் தற்போதைய திட்டமாகவுள்ளது.

சீனாவின் தகவல் தொழினுட்பம் இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமையுமெனக் கடந்த வாரம், அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளா் மைக் பொம்பியோ, வோஷிங்டன் டி.சி.யில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கூறியிருந்தாா். இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டாா்

ஜெனீவா மனித உாிமைச் சபையில் இருந்து அமெரிக்கா ஏற்கனவே வலிந்து வெளியேறிருந்தாலும் மேற்குலக நாடுகளின் செல்வாக்கின் மூலம் பிராந்திய நலன்சாா்ந்து இலங்கையை அமொிக்கா காப்பாற்றக் கூடிய முறையில் நகர்வுகளை மேற்கொள்ளும் சந்தா்ப்பங்கள் அதிகமாகவேயுள்ளன.

இந்த இடத்திலேதான் தற்போது ரஷியாவும் இலங்கையுடனான உறவுகளை ஏற்படுத்தி சீனாவுக்குப் பலமான முறையில் இந்தோ பசுபிக் பிராந்திய செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தீர்மானித்திருக்கலாம்.

எனவே சீனா, ரஷியா என்ற இரு நாடுகளுடனான உறவுகளையும் வைத்துக் கொண்டு அமொிக்கா போன்ற மேற்குலக நாடுகளையும் இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளையும் இலங்கைக்கு ஏற்றவாறு செயற்பட வைப்பதற்கான உத்திகளையும் கோட்டாபய வகுத்து வருகின்றார் என்றே கூறலாம்.

எனவே கோட்டாபய ராஜபக்சவை தங்கள் பக்கம் ஈர்ப்பதற்கு அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளும் இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளும் இணைந்து தீவிர கவனம் செலுத்தி வரும் நிலையில், மறுபுறத்தில் அந்த நாடுகளின் நலன்களுக்கு ஏற்றவாறு செயற்படுவதற்கான நிபந்தனையாக ஜெனீவா மனித உரிமைச் சபையின் தீர்மானத்தை முற்றாகவே ரத்துச் செய்வதற்கான அழுத்தங்களை கோட்டாபய ராஜபக்சவும் முன்வைத்து வருகிறார் என்பதே இங்கு வெளிப்படையாகின்றது.

ஜெனீவா மனித உரிமைச் சபை தேர்ந்தெடுக்கப்பட்ட 47 உறுப்பு நாடுகளை உள்ளடக்கியது. எதிர்வரும் பெப்ரவாி மாதம் 24 ஆம் தகதி நடைபெறவுள்ள 43 வது அமர்வின் போது, ஆப்கானிஸ்தான், அங்கோலா, அர்ஜென்டினா, ஆர்மீனியா, அவுஸ்திரேலியா, ஆஸ்திரியா, பஹாமாஸ், பஹ்ரைன், பங்களாதேஷ், பிரேசில், பல்கேரியா, புர்கினா பாசோ, கேமரூன், சிலி, செச்சியா, காங்கோ ஜனநாயக குடியரசு, டென்மார்க், எரித்திரியா, பிஜி, ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், லிபியா, மார்ஷல் தீவுகள், மவுரித்தேனியா, மெக்ஸிகோ, நமீபியா, நேபாளம், நெதர்லாந்து, நைஜீரியா, பாகிஸ்தான், பெரு, பிலிப்பைன்ஸ், போலந்து, கத்தார், கொரியா குடியரசு, செனகல், ஸ்லோவாக்கியா, சோமாலியா, ஸ்பெயின், சூடான், டோகோ, உக்ரைன், உருகுவே மற்றும் வெனிசுலா ஆகிய 47 உறுப்பு நாடுகள் கலந்துகொள்ளவுள்ளன.