14 ஆண்டுகளின் பின்னரான சிந்தனை-

வடக்குக்- கிழக்கு மாகாணங்களை இணைக்க சர்வதேச நீதிமன்றத்தை ஏன் நாட முடியாது?

பத்து ஆண்டுகளில் மூன்று தடவைகள் இந்தியப் பிரதமரைச் சந்தித்த தமிழரசுக் கட்சி இதை ஏன் வலியுறுத்தவில்லை?
பதிப்பு: 2020 மே 19 21:09
புலம்: யாழ்ப்பாணம்
புதுப்பிப்பு: பெப். 03 21:52
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#india
இனப்பிரச்சினைக்குத் தீர்வாக 13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மாகாண சபைகள் முறை உருவாக்கப்பட்டது. வடக்குக் கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு இலங்கையில் எட்டு மாகாண சபைகள் அன்று உருவாக்கப்பட்டிருந்தன. 1987ஆம் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் இந்த மாகாண சபை முறை உருவானது என்பது வரலாறு. ஆனால் ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான தீர்வாக அன்று இந்த மாகாண சபைகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இவ்வாறானதொரு சூலிலேதான் 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதியாகப் பதவியேற்ற மகிந்த ராஜபக்ச, ஜே.வி.பியைத் தூண்டிவிட்டு உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்வித்திருந்தார் என்பதையும் மறுப்பதற்கில்லை. (போரை நடத்த ஜே.வி.பி அப்போது மகிந்த ராஜபக்சுவுக்குப் பக்கபலமாக இருந்தது)
 
வடக்குக் கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்குரிய வகையில் சர்வதேச நீதிமன்றத்தில் இந்திய அரசைக் கொண்டு முறையிடக் கூடிய ஏற்பாடுகளையேனும், தமிழ் அரசியல் பிரதிநிதிகள் மேற்கொள்ளவில்லை. தன்னுடைய இந்தோ- பசுபிக் பிராந்திய அரசியல் நலனில் நின்று செயற்படும் இந்திய அரசை, எப்படித் தமது கைக்குள் கொண்டு வருவது என்ற திட்டத்தை, தேர்தல் மூலம் மக்கள் ஆணையைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதாவது தமிழரசுக் கட்சி வகுக்கவில்லை

வடக்குக் கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டது இலங்கை அரசியல் யாப்புக்கு முரணானது என்றும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒவ்வொரு ஆண்டும் கையொப்பமிட்டு அந்த இணைப்பை நீடிக்க முடியாதெனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

13 ஆவது திருத்தச் சட்டத்தின்படி மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் பரவலாக்கம் செய்யப்பட்டிருந்தது. அந்த அதிகாரங்கள் 13 ஆவது திருத்தச் சட்டமாக இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கரிக்கப்பட்டிருந்தது. ஆனால் வடக்குக் கிழக்கு மாகாணம் இணைப்பு என்பது நாடாளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்டிருக்கவில்லை.

ஆனால், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாத்தின் கீழ், வடக்குக் கிழக்கு மாகாணங்கள் இணை்டையும் தற்காலிகமாக இணைக்க முடியுமெனவும் அந்தத் தற்காலிக இணைப்பை உறுதிப்படுத்தி ஒவ்வொரு ஆண்டும் ஜனாதிபதி கையொப்பமிட வேண்டும் என்றும் இந்திய இல்ங்கை ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தது.

அதனாலேயே முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர், ஜயவர்த்தன, பிறேமதாசா, டி.பி.விஜயதுங்க, சந்திரிகா, ஆகியோர் தமது பதவிக் காலங்களின்போது இந்தத் தற்காலிக இணைப்பை உறுதிப்படுத்தி ஒவ்வொரு ஆண்டும் கையொப்பமிட்டு வந்தனர். 2005 ஆம் ஆண்டுக்கான நீடிப்பைச் சந்திரிகா கையொப்பமிட்டு உறுதிப்படுத்திவிட்டார்.

ஆனால் அதே ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் திகதி ஜனாதிபதியாகப் பதவியேற்ற மகிந்த ராஜபக்ச, 2006 ஆம் ஆண்டுக்கான நீடிப்புக்கு கையொப்பமிடவில்லை.

மாறாக இலங்கை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு வடக்குக் கிழக்கு மாகாணம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அப்போது உயர் நீதிமன்ற நீதியரசராக இருந்த சரத் என் சில்வா, ஜே.வி.பியின் மேற்படி மனுவைப் பரிசீலித்து விசாரணைக்கு உட்படுத்தி வடக்குக் கிழக்கு மாகாணத்தை இரண்டாகப் பிரித்துவிடார்.

அதாவது இந்த இணைப்புத் தற்காலிகமானது என்றும் நாடாளுமன்றத்தில் சட்டதால் அங்கீகரிக்கப்படாமல் ஜனாதிபதி ஒவ்வொரு ஆண்டும் கையொப்பமிட்டு நீடிக்க முடியாதென்வும் சரத் என் சில்வா தனது தீர்ப்பில் வியாக்கியானம் கொடுதுதிருந்தார்.

எழுபேர் அடங்கிய நீதியரசர்கள் குழாமில் இரண்டு நீதியரசர்கள் வடக்குக் கிழக்கு மாகாணம் தற்காலிகமாக இணைக்கப்பட்டிருப்பதை பிரிக்க விரும்பவில்லை. ஆனாலும் ஐந்து நீதியரசர்கள் அதற்குச் சம்மதம் தெரிவித்தால், தற்காலிகமாக இருந்த அந்த இணைப்பு ரத்துச் செய்யப்பட்டது.

ஆகவே கேள்வி என்னவென்றால், இரண்டு சமூகங்களிடையே இருந்த அரசியல் அதிகாரப் பங்கீட்டுப் பிரச்சினை ஒன்றுக்காக இரண்டு நாடுகள் தமது இணக்கத்தோடு செய்து கொண்ட ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள முக்கியமான ஆவணம் ஒன்றை எவ்வாறு உயர்நீதிமன்றம் ஒருதலைப்பட்சமாக ரத்துச் செய்ய முடியும் என்பதுதான். இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்க முடியாதென்று தெரிந்துதான்.

சர்வதேச ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள முக்கிய சரத்துகளை ஒப்பந்தத்தில் ஈடுபட்ட ஒரு நாடு தன்னிச்சையாக மீறினால், அதற்கு எதிராகப் பாதிக்கப்பட்ட நாடு சர்வதேச நீதிமன்றத்தில் (International court of Justices) (ICJ) முறையிட முடியும். ஆகவே இலங்கை தமது ஒப்பந்தத்தை மீறிவிட்டதாகக் குற்றம் சுமத்திய இந்திய மத்திய அரசு ஏன் இதுவரை காலமும் சர்வதேச நீதிமன்றத்தில் முறையிடவில்லை என்ற கேள்வி இத்தனை ஆண்டுகளின் பின்னர் எழுவது இயல்பானது

ஜே.ஆர்.ஜயவர்த்தன தனது நிறைவேற்று அதிகாரங்களின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் கையொப்பமிட்டு அந்த இணைப்பை நீடிக்கச் சம்மதம் தெரிவித்திருந்தார். இந்தியாவுக்கும் அது புரியும். ஆகவே வடக்குக் கிழக்கு மாகாணம் சட்டத்திற்கு முரணாக ஒன்பது ஆண்டுகள் தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்தா என்ற கேள்வி எழுவதுடன், இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள விடயத்தை ஒருதலைப்பட்டசமாக எவ்வாறு மீற முடிந்தது என்ற சந்தேகங்களும் எழுகின்றன.

சர்வதேச ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள முக்கிய சரத்துகளை ஒப்பந்தத்தில் ஈடுபட்ட ஒரு நாடு தன்னிச்சையாக மீறினால், அதற்கு எதிராகப் பாதிக்கப்பட்ட நாடு சர்வதேச நீதிமன்றத்தில் (International court of Justices) (ICJ) முறையிட முடியும். ஆகவே இலங்கை தமது ஒப்பந்தத்தை மீறிவிட்டதாகக் குற்றம் சுமத்திய இந்திய மத்திய அரசு ஏன் இதுவரைகாலமும் சர்வதேச நீதிமன்றத்தில் முறையிடவில்லை என்ற கேள்வி இத்தனை ஆண்டுகளின் பின்னர் எழுவது இயல்பானது.

ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வைக் காண இந்தியா அழுத்தம் கொடுக்கும் என்று கடந்த முப்பது ஆண்டுகளாக இந்திய மத்திய அரசு கூறி வருகின்றது. 2006ஆம் ஆண்டு வடக்குக் கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்டபோது இந்தியாவில் பிரதமர் பதவியில் இருந்த மன்மோகன், சிங்க, தற்போது பிரதமராகப் பதவி வகிக்கும் நரேந்திரமோடி ஆகியோரை புதுடில்லிக்குச் சென்று சந்தித்துப் பேசிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் இதுபற்றி அங்கு வாய்திறந்து எதுவும் பேசினார்களா?

சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து இலங்கை உயர் நீதிமன்றத்தினால் ஒருதலைப்பட்சமாக பிரிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணத்தை மீண்டும், இணைக்க முடியதா என்று இந்தியப் பிரதமர்களிடம் இவர்கள் எப்போதாவது கேள்வி எழுப்பியதுண்டா?

இலங்கை நாடாளுமன்றத்தில் பிரேரணை ஒன்றைச் சமர்ப்பித்து மீண்டும் வடக்குக் கிழக்கு மாகாணத்தை இணைக்க முடியும் என்று சரத் என் சில்வா தலைமையிலான உயர் நீதிமன்ற நீதியரசர்கள் தமது தீர்ப்பில் கூறியிருந்தனர். ஆனால் இலங்கை நாடாளுமன்றத்தில் அப்படி மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் அல்லது சாதாரண பொரும்பான்மையினால் கூட நிறைவேற்ற முடியாது என்று தெரிந்துதானே அன்று ஜே.ஆர் தற்காலிகமாக இணைக்கும் அந்த ஏற்பாட்டைத் தனது அதிகரித்துக்குள் எடுத்துக் கொண்டார்?

அதுவும் அவருடைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துக்கு அன்று ஐந்தில் ஆறு பெரும்பான்மைப் பலம் இருந்தது. மிக இலகுவாக வடக்குக் கிழக்கு இணைப்புக்கான சட்ட அங்கீகாரத்தை அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருக்கலாம். ஆனால் ஜே.ஆர் அதனைச் செய்ய விரும்பவில்லை.

அன்று இந்தியா கடும் அழுத்தம் கொடுத்திருந்தால் அப்போதே இலங்கை நாடாளுமன்றத்தில் அதனை நிறைவேற்றியிருக்கலாம். ஆனால் இந்தியாவும் விரும்பவில்லை என்பதையே இலங்கை அரசாங்கத்துடனான இந்திய மத்திய அரசின் நகர்வுகள் கோடிட்டுக் காண்பிக்கின்றன.

இறுதிப் போரில் நடந்த இன அழிப்புக்கான சர்வதேச விசாரணைக்கும் இந்தியா தடையாக இருக்கிறதா என்ற கேள்விகளும் சந்தேகங்களும் ஈழத் தமிழர்களுக்கு ஏலவே உண்டு. அதேவேளை, 2015 ஆம் ஆண்டு ஜெனீவா மனித உரிமைச் சபையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை குறித்த தீர்மானத்தில், இனப்பிரச்சினைக்குத் தீர்வாக 13 ஆவது திருத்தச் சட்டம் உரிய முறையில் நிறைவேற்றப்பட வேண்டுமெனக் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் அன்று நிறைவேற இலங்கை, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளோடு சேர்ந்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தது. அப்போது கூட வடக்குக் கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும் என்ற ஒரு வார்த்தை கூட அந்தத் தீர்மானத்தில் சேர்க்கப்படவில்லை. ஆகவே இலங்கைக்கு மாத்திரமல்ல இந்தியாவுக்கும் அது விருப்பமில்லை என்பது புரிகிறது.

அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் ஈழத்தமிழர் விடயத்தில் இந்தியாவும் இலங்கையும் சொல்வதையே கேட்கின்றன எனபதும் வெளிப்படை. அதற்கு ஏற்ப தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இசைந்து கொடுத்து வருகிறது என்பதும் பட்டவர்த்தனம்.

வடக்குக் கிழக்கு இணைந்த தாயகப் பிரதேசம் என்பதை அங்கீகரிப்பதில் இந்திய மத்திய அரசுக்குப் பிரச்சினை என்பது வெளிப்படைதான். எழுபது ஆண்டுகால போராட்டத்தில் இடையிடையே ஏற்பட்ட குழப்ப நிலமைகளுக்கும் அதுவே காரணம். ஆனாலும் ஈழத் தமிழர்களின் ஒருமித்த குரல் உறுதியாக இருந்தால் சாதிக்க முடியும்

எனவேதான் இரண்டு அரசியல் சமூகங்களிடையேயான அரசியல் அதிகாரங்களை எவ்வாறு பங்கிடுவது என்பது தொடர்பான விடயங்களில், 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் ஈழத் தமிழர்கள் குறிப்பாக தமிழரசுக் கட்சி ஈடுபடவில்லையென்ற குற்றச்சாட்டுகள் உண்மையாகின்றன.

தற்போதைய சூழலில் இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள் நின்று கொண்டு வெறுமனே கொழும்பை மையப்படுத்திய அதிகாரப்பரவலாக்கத்திற்கான தயார்படுத்தலை மாத்திரமே தமிழரசுக் கட்சி மேற்கொண்டு வருகிறது. அத்துடன் சாதாரண கட்சி அரசியல் செயற்பாடுகளிலும் கவனம் செலுத்தி வருகின்றது தமிழரசுக் கட்சி.

இரு நாடுகளுக்கிடையே அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட நாடுகள் செய்து கொண்ட ஒப்பந்தங்கள், மற்றும் உடனபட்டுக் கொண்ட விடயங்களை ஒரு தலைப்பட்சமாக மீறும்போது அல்லது கைவிடப்படும்போது அல்லது அவற்றைச் செயற்படுத்துவதில் மாறுபட்ட நிலை காணப்பட்டால், அவற்றுக்கு எதிராகப் பாதிக்கப்பட்ட நாடு சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட முடியும்.

ஒரு நாட்டுக்குள் ஓரினத்தால் மற்றுமொரு இனத்தின் உரிமைகள் நசசுக்கப்படும்போது அல்லது இனப்படுகொலை இடம்பெற்றால் அல்லது ஒரு நாட்டின் இராணுவம் அந்த மக்களையே படுகொலை செய்யதால், அதற்கு எதிராக முறையிடக் கூடிய இடமே சர்வதேச நீதிமன்றம். (International Criminal Court) (ICC)

ஆகவே இந்த இரண்டு நீதிமன்றங்களையும் நாடக்கூடிய ஏதுநிலை ஈழத் தமிழர்களுக்கு இருந்தும், 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான ஒரு தசாப்தகால சூழலில், இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள் நின்று கொண்டு தமிழ்த் தேசிய அரசியல் பேசப்படுகின்றது.

குறைந்த பட்சம் வடக்குக் கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்குரிய வகையில் சர்வதேச நீதிமன்றத்தில் இந்திய அரசைக் கொண்டு முறையிடக் கூடிய ஏற்பாடுகளையேனும், தமிழ் அரசியல் பிரதிநிதிகள் மேற்கொள்ளவில்லை. தன்னுடைய இந்தோ- பசுபிக் பிராந்திய அரசியல் நலனில் நின்று செயற்படும் இந்திய அரசை, எப்படித் தமது கைக்குள் கொண்டு வருவது என்ற திட்டத்தை, தேர்தல் மூலம் மக்கள் ஆணையைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதாவது தமிழரசுக் கட்சி வகுக்கவில்லை.

இலங்கை அரசியல் யாப்புக்கு அமைவான சாதாரண கட்சி அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையிலேயே குறைந்த பட்சம் இந்திய அரசை தமிழர் பக்கம் உள்வாங்குவதற்கான அரசியல் வேலைத் திட்டங்களை வகுத்திருக்க முடியும். வடக்குக் கிழக்கு இணைந்த தாயகப் பிரதேசம் என்பதை அங்கீகரிப்பதில் இந்திய மத்திய அரசுக்குப் பிரச்சினை என்பது வெளிப்படைதான்.

எழுபது ஆண்டுகால போராட்டத்தில் இடையிடையே ஏற்பட்ட குழப்ப நிலமைகளுக்கும் அது காரணம். ஆனாலும் ஈழத் தமிழர்களின் ஒருமித்த குரல் உறுதியாக இருந்தால் சாதிக்க முடியும். போர் அழிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டு மே மாத்திற்குப் பின்னரான சூழலில் அதாவது 2015 ஆம் ஆண்டு மைத்திரி- ரணில் ஆட்சியின்போது, இந்திய அரசாங்கமே தேவையில்லை என்ற தொனியில் தமிழரசுக் கட்சி செயற்பட்டிருந்தது.

அவ்வளவுக்கு மைத்திரி- ரணில் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இருந்திருக்கிறது. ஆனால் நடந்தது என்ன? 2009 இல் போரை நடத்தியவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கின்றனர். வடக்கு்க் கிழக்கு இரண்டாகப் பி்ரிக்கப்படும் போது தமிழர்களின் சார்பில் அன்று சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வாதிட்டிருந்தார். (அவர் இன்று ஜனாதிபதி சட்டத்தரணி) ஆனாலும் இரு மாகாணங்களும் பிரிக்கப்பட்டுவிட்டது.

இரண்டு அரசுகள் செய்து கொண்ட சா்வதேச ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்த முக்கிய சரத்து ஒன்றை எப்படி ஒரு நாட்டின் உயர் நீதிமன்றம் தன்னிச்சையாக ரத்துச் செய்ய முடியுமென அன்று சுமந்திரன் கேள்வி எழுப்பியிருந்தாரா? அப்படிக் கேள்வி எழுப்பியிருந்தால், நீதியரசர்கள் அதனைக் கவனத்தில் எடுக்காமல் பௌத்ததேசியவாதக் கண்ணோட்டத்தில் செயற்பட்டு வடக்குக் கிழக்கு மாகாணங்களை இரண்டாகப் பிளவுபடுத்தி விட்டனர் என்று வைத்துக் கொள்வோம்---

14 ஆண்டுகளின் பின்னர் இப்படியொரு சிந்தனை- பதில் தருமா தமிழரசுக் கட்சி. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, விக்னேஸ்வரன்- சுரேஸ் பிரேமச்சந்திரன் அணி உள்ளிட்ட அனைத்துத் தமிழ்க் கட்சிகளுக்கும் இது சமர்ப்பணம்

ஆனால் சுமந்திரன் இன்று தமிழரசுக் கட்சியின் முக்கிய உறுப்பினர். 2010 ஆம் ஆண்டு இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்று இன்று பத்து ஆண்டுகள் சென்றுவிட்டன. இந்தப் பத்து ஆண்டுகளில் மூன்று தடவைகள் இந்தியப் பிரதமரைச் தமிழரசுக் கட்சி சந்தித்திருந்தது.

ஆனால் இந்திய -இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் இணைக்கப்பட்ட வடக்குக் கிழக்கு மாகாணத்தை இணைக்க சா்வதேச நீதிமன்றத்தை ஏன் நாட முடியாதென்று சட்டத்தணி சுமந்திரன் கேள்வி எழுப்பியிருந்தாரா? அல்லது இப்படியொரு ஆலோசனையை தமிழரசுக் கட்சியிடம் முன்வைத்து, அதனை மக்கள் மயப்படுத்தி இந்தோ- பசுபிக் அரசியல் சூழலுக்கு ஏற்ப இந்திய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம் என எப்போதாவது தீர்மானம் எடுக்கப்பட்டிருந்ததா?

மாகாண சபைகள் முறை ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலைக்குத் தீர்வல்ல என்பது வேறு- ஆனால் குறைந்த பட்சம் வடக்குக் கிழக்கு மாகாணத்தை மீண்டும் இணைக்க சர்வதேச நீதிமன்றத்தை நாடாக்கூடிய வாய்ப்பிருந்தும், ஏன் அதற்கான அழுத்தம் கொடுக்கப்படவில்லை? தாமாகவே சென்று இந்தியா முறையிடாது என்பதற்குப் பல காரணங்கள் உண்டு. ஆனால் அதற்கான புறக் காரணிகளை உருவாக்கியிருக்க வேண்யது தமிழ்தரப்பி்ன் பொறுப்ப்ல்லவா?

அத்தோடு இலங்கை ஒற்றையாட்சி அரசிலமைப்புக்குள் நின்று கொண்டு ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலைக்கு ஒரு போதும் தீர்வைக் காண முடியாது என்பதையும் இலங்கை இந்திய ஒப்ப்ந்தத்தின் மூலமான இந்த வடக்குக் கிழக்கு இணைப்பும் பிரிப்பும் வெளிப்படையாகவே தெரிகின்றன.

தமிழரசுக் கட்சி. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, விக்னேஸ்வரன்- சுரேஸ் பிரேமச்சந்திரன் அணி உள்ளிட்ட அனைத்துத் தமிழ்க் கட்சிகளுக்கும் இது சமர்ப்பணம்.