புதிய விவாதத்தைக் கிளப்புகிறார் புலம் பெயர் ஈழத்தமிழ்ப் பெண் எழுத்தாளர்

பெண் சமத்துவ நிலைநிறுத்தலில் மீரூ இயக்கமா விடுதலைப்புலிகளா தமிழர்களுக்கான முன்னுதாரணம்?

நவதராண்மைவாதம் பொருளாதார நீதியை மறைத்து பாலியல் சமத்துவத்தை மட்டுமே ஊக்குவிக்கின்றது
பதிப்பு: 2018 ஒக். 24 11:48
புதுப்பிப்பு: ஒக். 25 21:40
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Metoo
பிரபலங்களிடையே பாலியல் கலாசாரத்தில் சமத்துவம் என்பதையே சமுதாயத்திற்கான பாலியல் சமத்துவமாகச் சித்தரிப்பதோடு தனது தேவையை முடித்துக்கொள்கிறது இன்றைய மீரூ இயக்கம். குடும்ப மட்டத்திலே பெண்களுக்கெதிரான பாலியல் சுரண்டல்களை இல்லாமற் செய்யவல்ல வேலைத்திட்டங்களை எந்தவித விளம்பரங்களும் இன்றி விடுதலைப் புலிகள் சாதித்திருந்தார்கள். இவற்றை ஈழத்தமிழர்களே இப்போது தொலைத்துவிட்டு நிற்கிறார்கள். தமிழ்நாட்டில் சின்மயியும் வரலட்சுமியும் தற்போது பேசியிருப்பவற்றை இந்தக் கோணத்தில் நோக்கவேண்டும் என்கிறார் மனித உரிமைச் செயற்பாட்டாளரும் வன்னியில் இடம்பெற்ற இன அழிப்புப் போரில் உயிர்பிழைத்துத் தனது அனுபவங்களைக் கேள்விகளாக உலக மானுடத்திடம் எழுப்பிவருபவருமான 70 வயது நிரம்பிய ஈழத்தமிழ் எழுத்தாளர் பெண்மணி முனைவர் ந. மாலதி.
 
N Malathy
முனைவர் ந. மாலதி
1970களில் அமெரிக்காவில் முளை கொண்ட பெண்ணியவாதம் முதலாளித்துவத்தையும் அதன்பின்னரான நவகாலனித்துவத்தையும் தக்கவைப்பதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

பெண்களை அச்சுறுத்தும் பாலியல் சுரண்டல்களும் அத்துமீறல்களும் தமிழர் சமுதாயத்திலும் வேரோடிப்போய்க் கிடக்கிறது.

2009 இற்குப் பின்னர் ஈழத்தமிழர்கள் மத்தியில் பெண் அடக்குமுறை கோரமடைந்திருக்கிறது.

திட்டமிடப்பட்ட ஆழமான அடக்குமுறை மூலோபாயத்துக்கூடாக இது முன்னெடுக்கப்படுகிறது. இன அழிப்பின் ஒரு வடிவமாக அது ஈழத்தமிழர்களிடையே விதைக்கப்பட்டுவருகிறது.

ஆகவே, ஈழத்தமிழர்களின் அடுத்த கட்ட நகர்வுக்கான சிந்தனையாளர்களாகவும், மக்கள் இயக்க, அரசியற் தலைமைகளாத் தங்களைச் சித்தரிக்க விழைவோரும் வன்னியில் அமைதியாகவும் ஆழமாகவும் முன்னெடுக்கப்பட்ட பால் நிலைச் சமத்துவத்தை மீளாய்வு செய்துகொள்ளவேண்டும்.

இதைப்போலவே, சரிநிகர் சமானமாக ஆண் பெண் சமத்துவத்தை நீதியுடன் நிறுவுவதற்கு ஈழத்தமிழர்களின் தேசிய விடுதலை இயக்கம் என்ன செய்தது என்பதைச் சமூக நீதி குறித்து அக்கறை காட்டிவரும் தமிழ்நாட்டுச் சிந்தனையாளர்களும் செயற்பாட்டாளர்களும் ஆழமாகப் படிக்கவேண்டிய தேவை இருக்கிறது என்பதையே ஈழத்தமிழ் எழுத்தாளரின் கருத்து பூடகமாகச் சுட்டி நிற்கிறது என்பதைக் கூர்மை செய்தி இணையம் இத்தருணத்தில் தனது கருத்தாக முன்வைக்கிறது.

நியூசிலாந்தில் வதியும் மாலதி அவர்களின் மூல எழுத்தை, அதன் முக்கியத்துவம் கருதி, அவர் எழுதியவாறே தமிழிலும் ஆங்கிலத்திலும் இங்கு வெளியிடுகிறோம்:

பெண்ணியம் முதலாளித்துவம் #MeToo

70 வயதான பெண்ணியவாதியும் தத்துவ பேராசிரியருமான நான்சி ஃபரேசர் பிரித்தானிய கார்டியன் செய்திதாளில் பெண்ணியத்தை பற்றியும் முதலாளித்துவத்தை பற்றியும் ஒரு ஆக்கம் எழுதியுள்ளார். முதலாளித்துவத்தின் சுரண்டல்களை கடுமையாக விமர்சித்து 70களில் ஆரம்பித்த பெண்ணிய இயக்கம் இன்று முதலாளித்துவத்திற்கும் அதன் தற்கால வடிவமான நவதாராளவாதத்திற்கும் ஆதரவான சில சிந்தனைகளை உருவாக்கி கொடுத்திருக்கிறது என்று அவர் கவலை தெரிவிக்கிறார். அன்று பெண்ணியவாதிகள் அரசினால் நெறிப்படுத்தப்பட்ட முதலாளித்துவத்தை நோக்கி விமர்சனங்களை முன்வைத்தார்கள். இன்று முதலாளித்துவம் அரசின் கட்டுப்பாட்டிற்கு வெளியே, உலமயமாக்கல் சூழலில் நவதாராளவாதமாக வடிவெடுத்திருக்கிறது. அன்றைய பெண்ணியவாதிகளின் விமர்சனங்கள் இன்றைய நவதாராளவாதத்திற்கு துணைபோகின்றன என்பது பேராசிரியர் நான்சி ஃபரேசரின் வாதம்.

அன்று கணவனில் தங்கி வாழும் மனைவி என்ற ஒற்றை வருமான குடும்பத்தை பெண்ணியவாதிகள் விமர்சித்தார்கள். அதையே நவதாராளவாதம் பெண்கள் மேம்பாடு என்ற போர்வையில் இரட்டை வருமான குடும்பமாக்கிவிட்டது. உலகெங்கும் பெண்கள் ஊதிய தொழில்களில் பெருந்தொகையாக வந்து சேர்ந்தார்கள்.

இதற்கு பின்னால் ஊதியம் குறைக்கப்பட்டதும், தொழிலின் உறுதியற்ற தன்மையும், வாழ்க்கைத்தரம் குறைந்ததும், தொழில் நேரம் அதிகரித்ததும், வறுமை, முக்கியமாக பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களில் வறுமை, மோசமானதும் மறைந்து கிடக்கிறது என்கிறார் பேராசிரியர்.

மேலும், பொருளாதாரத்தை மட்டுமே கணக்கிலெடுத்து அதை நிவர்த்தி செய்ய முயன்ற அரச முதலாளித்துவத்தை பற்றி அன்று பெண்ணியவாதிகள் விமர்சித்தார்கள். பொருளாதாரத்திற்கும் அப்பால் பெண்களுக்கு எதிராக தொடரும் பாலியல் துன்புறுத்தல்கள், குடும்ப வன்முறைகள் போன்றவற்றை அரச முதலாளித்துவம் கணக்கெடுக்கவில்லை என்றார்கள். நீதி என்பது பொருளாதாரம் பாலியல் கலாச்சாரம் என்ற இரண்டு தளத்திலும் இருக்க வேண்டும் என்றார்கள். ஆனால், பாலியல் கலாச்சாரத்தில் மட்டுமே சமத்துவம் என்று இதை மாற்றி விட்டது இன்றைய நவதாராளவாதம் என்கிறார் பேராசிரியர்.

இன்றைய #MeToo இயக்கமும் கூட பொருளாதார நீதியை மறைத்து இந்த பாலியல் சமத்துவத்தை மட்டுமே ஊக்குவிக்கிறதா?. உண்மையில் அடிமட்ட பெண்களின் #MeToo அனுபவங்களும் வெளிவருமா? வருவதற்கான சாத்தியங்களே இப்போது இல்லையே.

வேலைத்தளத்திலே பாலியல் சுரண்டல்கள் என்பதற்கு அப்பால், சிறு பெண்பிள்ளைகளுக்கு குடும்ப சூழலில் நடக்கும் கொடுமைகளுக்கும் #MeToo தீர்வாகுமா? தமிழீழ சமூகத்தில் குடும்பங்களில் பெண்பிள்ளைகளின் மேல் நடத்தப்டும் பாலியல் அத்துமீறல்களைப் பற்றி விடுதலைப்புலி பெண்கள் நிறைய வேலைகள் செய்திருக்கிறார்கள்.

இதையெல்லாம் தமிழீழ சமூகம் இப்போ தொலைத்துவிட்டு நிற்கிறது.

இதையே தமிழ்நாட்டை சேர்ந்த சின்மயியும் வரலட்சுமியும் தமது அனுபவங்களாக பேசியிருக்கிறார்கள்.

90 வீதம் தமிழ் பெண்பிள்ளைகள் இதை அனுபவித்திருப்பார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.

இருந்தாலும் சினிமா சார்ந்தவர்களைப்பற்றி பேசப்படுவது போல இவை இன்றும் பொதுவெளியில் அதிகம் பேசப்படவில்லையே.

70 வயதான என்னையும் எனது சிறுபிராயத்தில் மாமா, சித்தப்பா, வேலையாட்கள் என பலரும் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள் என்பதையும் இங்கு பதிவு செய்கிறேன். 60 ஆண்டுகளுக்கு பின் இதை ஏன் சொல்கிறார் என்று கேட்பீர்களா?

இவற்றிற்கு தீர்வு நீதிமன்றமா அல்லது பாதிக்கப்பட்டவரும் குற்றம் இழைத்தவரும் உண்மை பேசுவதற்கான பொதுமன்றங்களா?

ந மாலதி

Feminism Capitalism and #MeToo

In an article in the British Guardian paper, 70 years old feminist and philosophy professor, Nancy Fraser, expresses her concerns on how feminism of the 70’s that critiqued capitalism has become the hand maiden of its present avatar neoliberalism. Professor argues in her article that feminists then critiqued the single income family where the wife is considered a dependent of her husband. Neoliberalism has taken it on and made the present day two income families. But Professor Fraser says hidden behind this change are: reduced wages, longer working hours, job insecurity and poverty especially among female headed households. Also feminists then critiqued the focus on equality in economics, ignoring sexual harassment and domestic violence. Neoliberalism taking this on too and has changed the focus to gender equality at the expense of economic equality.

Today’s #MeToo movement is also hiding the economic inequality and promoting gender equality. Will the #MeToo experiences of the women in marginalized sections ever come to light? One sees no sings of it happening.

Beyond sexual harassment at workplace, will the #MeToo movement bring out the sexual abuse experiences of young Tamil girls in their family environment? Women in the Tamil Tiger movement had done immense work about sexual abuses in families. The Tamil Eelam society has lost all this now. Chinmayi and Varalaxmi from Tamil Nadu also have spoken about their experiences in their family environment. It appears 90 percent of Tamil girls would have gone through this kind of abuse in the family environment. However, these are not the topic that is discussed as widely as the accusations in the film industry.

I, now 70, have also as a girl experienced many times sexual inappropriateness in the family environment at the hands of uncles and workmen who came to do work at home. Will I be accused for saying this after 60 years?

Are the solutions to these accusations to be found in the courts? Or will public Truth and Reconciliation Councils for the accused and the accuser a better solution?

N Malathy