இலங்கைப் படையினரால் வடக்கு- கிழக்கு தமிழர் தாயகத்தில் விதைக்க முற்பட்ட நிலையில்

போதைப் பொருள் பாவனையின் கூடாரமாக மாறி வரும் கொழும்பு- கொட்டாஞ்சேனையில் பெண் மீது துப்பாக்கிச் சூடு

அரசியல் செல்வாக்கினால் குற்றவாளிகள் பாதுகாக்கப்படுவதாக ஜே.வி.பி.குற்றச்சாட்டு
பதிப்பு: 2019 பெப். 15 10:53
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: பெப். 15 23:41
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போதைப் பொருள் ஒழிப்புத் தொடாபான விழிப்புணர்வு நடவடிக்கையை பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் கிராமங்களிலும் ஆரம்பித்து வைத்துள்ள நிலையில், போதைப் பொருள் வியாபரத்துடன் இலங்கைப் படையினருக்குத் தொடர்புள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. குறிப்பாக வடக்கு- கிழக்கு தமிழர் தாயகப் பிரதேங்களில் படையினர் மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் போதைப் பொருட்களை விநியோகிப்பதாக முன்னாள் வடமாகாண சபை முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் ஏலவே குற்றம் சுமத்தியிருந்தார். இந்த நிலையில் 639 கிராம் ஹெரோயினுடன் முல்லைத்தீவு பிரதேசத்தில் உள்ள விசேட அதிரடிப்படை படை முகாமில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரியொருவர் நேற்று முன்தினம் புதன்கிழமை கலகெதரவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
தன்னுடைய மேலதிகாரியொருவரே இந்த ஹெரோயின் போதைப்பொருளை வழங்கியதாக கைதான பொலிஸ் அதிகாரி தனது வாக்குமூலத்தில் சாட்சியமளித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் வடக்கு- கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழ்த்தேசிய அரசியல் சிந்தனைகளைச் சீரழிக்கும் நோக்கிலும் திசைமாற்றவும் போதைப் பொருள் பாவனைகளை இலங்கை இராணுவம் இளைஞர்கள் மத்தியில் ஊக்குவித்தது.

இதனால், கொழும்பின் புறநகர் பகுதியான ரம்புக்கனை பிரதேசத்தில் உள்ள குறித்த பொலிஸ் உயர் அதிகாரியின் வீட்டை நேற்று வியாழக்கிழமை பொலிஸார் சோதனையிட்டனர்.

அங்கிருந்து எம் 60 ரக ஐந்து ரவைகளுடன் மகசின் ,ரி 56 துப்பாக்கி மற்றும் 46 ரவைகள், விமானப்படை சீருடைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.

ஆகவே இலங்கைப் பொலிஸாருக்கும் இலங்கைப் படையினருக்கும் போதைப் பொருள் வியாபாரத்தில் தொடர்புள்ளமை வெளியாகியுள்ளது.

போதைப் பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய மேலும் பல இலங்கைப் படை உயர் அதிகாரிகள், கொழும்பு அரசியல் செல்வாக்கினால் சுதந்திரமாக நடமாடுவதாக ஜே.வி.பியும் குற்றம் சுமத்தியுள்ளது.

அதேவேளை, கொழும்பு- கொட்டாஞ்சேனை பிரதேசத்தில், நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 39 வயதுடைய பெண் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பெண், டுபாயில் கைதாகியுள்ள கஞ்சிபானி இம்ரானின் சட்டபூர்வமற்ற இரண்டாவது மனைவி என்று கொட்டாஞ்சேனைப் பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்தப் பெண் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுபவரெனக் கூறியுள்ள பொலிஸார். மற்றுமொரு பாதாள உலகக்குழுவைச் சேர்ந்தவர்களே இந்தப் பெண் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆனால் பொலிஸாரே திட்டமிட்ட முறையில் இந்தப் பெண் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

பிரபல பாதாள உலகக்குழுத் தலைவர் மாக்கந்துர மதுஸ் டுபாயில் கைது செய்யப்பட்டதை அடுத்து போதைப் பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய பாதளா உலகக்குழுவைச் சேர்ந்த பலர் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பில் நடத்தப்பட்ட தேடுதலில் இதுவரை ஆயிரத்தி 130 கிலோகிராம் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கைப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரூவான் குணசேகர கூறியுள்ளார்.

அதேவேளை, கொழும்பு மருதானை மேம்பாலத்துக்கு அருகில் நேற்று வியாழக்கிழமை விபத்துக்குள்ளன ஜீப் ஒன்றில் இருந்தும் பெருமளவு ஹெரோயின் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

ஆனால், இவை தொடர்பான விசாரணைகள் உரிய முறையில் நடப்பதில்லை என்றும் அரசியல் செல்வாக்குகள் பின்னணியில் இருப்பதாகவும் ஜே.வி.பி உறுப்பினர் ஹந்துந் நெத்தி கூறியுள்ளார்.

மாக்கந்துர மதுஸ் டுபாயி்ல் கைது செய்யப்பட்டமை குறித்தும் பிரபல அரசியல்வாதிகள் பாதாள உலகக்குழுக்களுடன் தொடர்பு வைத்துள்ளமை பற்றியும் இலங்கை நாடாளுமன்றத்தில் விவாதம் ஒன்றை நடத்துமாறு ஜே.வி.பி., சபாநாயர் கரு ஜயசூரியவிடம் கோரியுள்ளது.

வடக்கு- கிழக்கில் போதைப் பொருள் பாவனையை ஊக்குவித்து தமிழ் இளைஞர்களை அரசியல் சிந்தனையற்றவர்களாக மாற்ற முற்பட்ட கொழும்பு, தற்போது அந்தப் போதைப் பொருளின் கூடாரமாக மாறியுள்ளமைதான் வேடிக்கையானது.

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் வடக்கு- கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழ்த்தேசிய அரசியல் சிந்தனைகளை சீரழிக்கும் நோக்கிலும் திசைமாற்றவும் போதைப் பொருள் பாவனைகளை இலங்கை இராணுவம் இளைஞர்கள் மத்தியில் ஊக்குவித்தது.

பாடசாலை மாணவர்களுக்கு இரகசியமான முறையில் இலவசமாகவும் இலங்கைப் படையினர் போதைப் பொருட்களை விநியோகித்தமை குறித்து முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்கள் பகிரங்கமாவே குற்றம் சுமத்தியிருந்தனர்.

போதைப் பொருள் பாவனையில் யாழ்ப்பாணம் முதலாவது என்றும் மட்டக்களப்பு இரண்டாம் இடமென்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கிண்டலாக வேறு கூறியுமிருந்தார்.

ஆனால், தமிழர் தாயகப் பகுதியில் முகாம் அமைத்துள்ள பெரும் எண்ணிக்கையிலான இலங்கைப் படையினரே போதைப் பொருட்களை பாவிப்பதாகவும் தமிழ் இளைஞர்கள் அல்ல எனவும் யாழ் செய்தியாளர்கள், கடந்த செப்ரெம்பர் மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் ஊடக வகுப்பு ஒன்றில் குற்றம் சுமத்தியிருந்தனர்.

இந்த நிலையில் மாக்கந்துர மதுஸ் டுபாயில் கைது செய்யப்பட்டதன் பின்னணியில் கொழும்பு போதைப் பொருள் கூடாரமாக திகழ்ந்து வருகின்றமை அம்பலமாகியுள்ளது.

அமைச்சர்கள், பிரபல அரசியல்வாதிகள் சிலருக்கு போதைப் பொருள் வியாபாரம், வருமானம் ஈட்டும் ஒன்றாக மாறியுள்ளது. எவ்வாறாயினும் வடக்கு- கிழக்கில் போதைப் பொருள் பாவனையை ஊக்குவித்து தமிழ் இளைஞர்களை அரசியல் சிந்தனையற்றவர்களாக மாற்ற முற்பட்ட கொழும்பு, தற்போது அந்தப் போதைப் பொருளின் கூடாரமாக மாறியுள்ளமைதான் வேடிக்கை.

நிலைமை இவ்வாறிருக்க, ஏன் தமிழர் தாயகமான முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லுாரியில் போதைப் பொருள் ஒழிப்புக்காண விழப்புணர்வு நடவடிக்கைகளை மைத்திரிபால சிறிசேன கடந்த மாதம் ஆரம்பித்து வைத்தார் என்பது இங்கு கேள்வி.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விசேட ஏற்பாட்டில் மாக்கந்துர மதுஸ் டுபாயில் டுபாயில் கைது செய்யப்பட்டார். ஏனெனில் மைத்திரி, இலங்கையின் முன்னாள் பாதுகாப்பச் செயலாளர் கேட்டாபய ராஜபக்ச ஆகியோர் மீதான கொலைக் குற்றச்சாட்டில் மாக்கந்துர மதுஸ் உள்ளிட்ட குழுவுக்கும் தொடர்புள்ளது.

இந்த நிலையிலே மைத்திரி- ரணில் மோதல் மேலும் வலுவடையும் என அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர். 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் தமிழ் மக்களின் தமிழ்த் தேசியச் சிந்தனையை இலங்கைத் தேசிய அரசியலில் கரைக்க முற்பட்ட சிங்கள அரசியல் கட்சிகள் இன்று தமக்குள்ளேயே முரண்பட்டு சிதறப்படுகின்றன.

மைத்திரி, மகிந்த, ரணில், சந்திரிகா என வெவ்வேறு பிரிவுகளாக பிளவுபட்டுள்ளன. ஒன்று சேரக் கூட முடியாத நிலையில் அவர்கள் தவிக்கின்றனர்.

அதற்கு இரண்டு காரணங்களைக் கூறலாம்-

ஒன்று- இலங்கை இராணுவத்தைப் பயன்படுத்தி வடக்கு- கிழக்கில் போதைப் பொருள் பவானையை ஊக்குவித்து தமிழ்த் தேசிய சிந்தனை சிதைக்க முற்பட்டமை.

இரண்டாவது- 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலிலும் இலங்கை இரணுவத்தின் எண்ணிக்கையை வடக்கு கிழக்கில் குறைத்து முகாம்களை மூடாமல், அங்கு சிவில் நடவடிக்கைகளில் இராணுவத் தலையீட்டை அனுமதித்ததோடு போதைப் பொருள் பாவனைக்கான சுதந்திரத்தையும் கையளித்தமை.