சிங்களத் தேசியவாதத்தைக் கிளப்பி

இலங்கையின் இறைமை அதிகாரம் பிரிக்கப்படாமல், அதனை சர்வதேச ஆதரவுடன் பாதுகாப்பதே சிங்களக் கட்சிகளின் நோக்கம்

ஈழத் தமிழர்களுக்கு ஜெனீவா எதனையும் கொடுக்காது- போர்க்குற்ற விசாரணை புலிகளை நோக்கியே
பதிப்பு: 2019 மார்ச் 14 23:33
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 15 00:53
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்படவுள்ள பிரேரணையில் போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இலங்கை இராணுவ அதிகாரிகள், சிப்பாய்களை இலங்கையிலேயே கைது செய்வதற்கான ஏற்பாடுகள் உள்ளதாக பூகோள இலங்கையர் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஒன்றியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர், சியாமேந்திரா விக்கிரமாராட்சி, இலங்கைக்கு ஆபத்து வரக்கூடிய அந்தப் பிரேரணையை சிங்கள அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும் எனக் கோரினார். இலங்கை இராணுவத்தை உள்ளநாட்டில் விசாரணை செய்யலாம் என்றவொரு அத்தியாயம் ஜெனீவா பிரேரணையில் உள்ளது. பிரித்தானிய அரசு அந்த அத்தியாயத்தை பிரதானப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
ஜெனீவா மனித உரிமைச் சபையில் ஓரிரு வாரங்களில் பிரித்தானிய சமர்ப்பிக்கவுள்ள குறித்த பிரேரணை தொடர்பாக இலங்கையில் உள்ள பிரதான சிங்கள அரசியல் கட்சிகள் என்ன நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

ஜெனீவாவை மாத்திரம் நம்பி அரசியல் செய்து வரும் தமிழ்த் தரப்புகள், இன்று வரைகூட ஜெனீவா எந்த அடிப்படையில் போர்க்குற்ற விவகாரத்தில் திட்டங்களை முன்வைக்கின்றது என்பதை அறியாதவர்களாக அல்லது தெரிந்தும் தெரியாதவர்களாக இருப்பது, இலங்கை அரசு என்ற கட்டமைப்பைக் காப்பாற்றுவதற்கான மறைமுக உதவிதான்.

அதேவேளை, ஜெனீவாப் பிரேரணையை முற்றுமுழுதாக எதிர்க்க வேண்டும் என மகிந்த ராஜபக்ச தரப்பு வலியுறுத்தியுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்திலும் விவாதம் ஒன்றிற்கு மகிந்த தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

ஜெனீவா மனித உரிமைச் சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணையின் பிரதி இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தப் பிரதி போலியானது எனவும் உண்மையான பிரதி சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் ஜே.வி.பி. குற்றம் சுமத்தியுள்ளது.

எனினும் ஜெனீவாவில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கை தொடர்பான பிரேரணை இலங்கை அரசுக்கே சாதகமானது என்றும் ஈழத் தமிழர்கள் ஏமாற்றப்படுவதாகவும் விடயமறிந்த வட்டாரங்கள் குற்றம் சுமத்துகின்றன.

ஈழத் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தினால் ஏற்பட்ட பக்கவிளைவுகளுக்குக் கூட இலங்கை அரசாங்கம் இதுவரை உரிய தீர்வை சரியான முறையில் முன்வைக்கவில்லை.

ஆனாலும் இலங்கை அரசு மீது குறிப்பாக ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் மீது நம்பிக்கை வைத்து, அந்த அரசாங்கத்தை தொடர்ந்து காப்பாற்றுவதே சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடு.

பிரித்தானிய முன்வைக்கவுள்ள இலங்கை குறித்த பிரேரணைக்கு இலங்கை அரசாங்கம் ஏன் இணை அனுசரணை வழங்க வேண்டும்? அதன் பின்னணி என்ன? சரவதேச நிலைப்பாட்டுக்கு அமைவாகவே இலங்கை அந்தப் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்குகின்றது. இதுதான் உண்மை.

ஜெனீவா ஈழத் தமிழர்களிடம் இருந்து முறைப்பபாடுகளைக் கேட்கிறது ஆனால் விடை இலங்கை அரசாங்கத்துக்குச் சாதகமானதாகவே இருக்கும் என்பது அரசியல் அவதானிகளின் கருத்து.

இந்த நிலையில் அந்தப் பிரேரணை தொடர்பாக தேவையற்ற சந்தேகங்களை எழுப்பி சிங்கள மக்களுக்கு உணர்ச்சிகளை ஊட்டி, அதன் மூலம் இலங்கையின் இறைமை அதிகாரம் பிரிக்கப்படாமல், அதற்கான சர்வதேசப் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் உறுதிப்படுத்துவதே சிங்கள அரசியல் கட்சிகள், சிங்கள பொது அமைப்புகளின் பிரதான இலக்கு என்று அவதானிகள் கருதுகின்றனர்.

அதேவேளை, ஜெனீவா மனித உரிமைச் சபையின் விதப்புரைகளுக்கு ஏற்ப போர்க்குற்ற விசாரணை ஆரம்பிக்கப்பட்டாலும் தமிழர்களின் அரசியல் சிந்தனைகளை ஓரம் கட்டுகின்ற அதாவது புலி நீக்கம் செய்யப்படுகின்ற அரசியல் வேலைத் திட்டங்கள் மாத்திரமே அந்த விசாரணையின் மூலமாக முன்னெடுக்கப்படக் கூடிய வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளதாக ஜெனீவா உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் ஜெனீவாவை மாத்திரம் நம்பி அரசியல் செய்த தமிழ்த் தரப்புகள், இன்று வரைகூட ஜெனீவா எந்த அடிப்படையில் போர்க்குற்ற விவகாரத்தில் திட்டங்களை முன்வைக்கின்றது என்பதை அறியாதவர்களாக அல்லது தெரிந்தும் தெரியாதவர்களாக இருப்பதும், இலங்கை அரசு என்ற கட்டமைப்பைக் காப்பாற்றுவதற்கான மறைமுக உதவிதான்.

முப்பது ஆண்டுகால ஆயுதப் போரை இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளின் ஒத்துழைப்புடன் இலங்கை அரசாங்கம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் அழித்தது.

ஆனால், இன்று பத்து ஆண்டுகள் சென்றுவிட்ட பின்னரும் கூட பூகோள அரசியல் நகர்வுகளுக்கு ஏற்ப தமிழ்த் தரப்பு உரிய அரசியல் செயற்பாடுகளை முன்வைக்கவில்லை.

மாறாக ஜெனீவா மனித உரிமைச் சபையை மையப்படுத்திய நம்பிக்கை கொள்ளக் கூடிய அரசியல் நகர்வுகளுக்கு மாத்திரமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றது.

ஆனால் 2009 ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலிலும் இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் தங்கள் அரசியல், பொருளாதார நலன் சார்ந்து வடக்கு- கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளை நோக்கி மேற்கொண்டு வருகின்ற செயற்திட்டங்களை அறியாதவர்களாக அல்லது தெரிந்தும் தெரியாதவர்களாக தமிழ்த் தரப்புகள் இயங்குவதுதான் வேடிக்கை.

ஜெனீவா ஈழத் தமிழர்களிடம் இருந்து முறைப்பபாடுகளைக் கேட்கிறது ஆனால் விடை இலங்கை அரசாங்கத்துக்குச் சாதகமானதாகவே இருக்கும் என்பது அரசியல் அவதானிகளின் கருத்து.