பில் மில்லரின் ஆராய்ச்சி: பிரித்தானியா உளவுத்துறை (MI5) சார்ந்த 1978-1980 வரையான

இலங்கை தொடர்பான ஆவணங்களை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு அழிப்பு

பிரித்தானிய அரசின் அக்கால செயற்பாடுகள் பற்றிய ஆவணங்கள் இப்போதில்லை
பதிப்பு: 2018 மே 25 11:51
புதுப்பிப்பு: செப். 09 09:57
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கை சார்ந்த ஏறக்குறைய 200 ஆவணங்களை, குறிப்பாக விடுதலைப்புலிகளின் எழுச்சிக்காலத்தில் பிரித்தானியாவின் உளவுத்துறையும் விசேட விமானத்துறையும் இலங்கை பாதுகாப்பு படைகளுக்கு அறிவுரைகள் கொடுத்தது பற்றிய ஆவணங்களை, பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சு அழித்துள்ளதென்பதை பில் மில்லர் எனும் மனித உரிமை ஆய்வாளர் பிரித்தானியாவின் பிரபல பத்திரிகையான கார்டியன் பத்திரிகையில் ஆதார பூர்வமாக அண்மையில் வெளியிட்டிருந்தார். இந்த ஆவணங்கள் அழிக்கப்பட்டதால், பிரித்தனியா அரசு இலங்கை அரசுடன் அக்காலத்தில் இணைந்து வேலை செய்தது பற்றிய ஆதாரங்களும் அழிக்கப்பட்டுவிட்டன. பில் மில்லரின் கட்டுரையின் உள்ளடக்கம் இங்கு தமிழில் தரப்படுகிறது.
 
பில் மில்லரின் மூலக்கட்டுரையை 23ம் திகதியன்று கார்டியன் பத்திரிகை வெளியிட்டிருந்தது.

முதலில் பில் மிலரைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு

சமூக ஆர்வலரான பில் மிலர், பிரித்தானிய அரசு, ஏனைய நாடுகளில் தலையிட்ட நடவடிக்கைகளை ஆய்வு செய்து அதுவரை அறியப்படாத பல தகவல்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறார். பிரித்தானியா, இலங்கையில் 1971ம் ஆண்டு ஜேவிபி எழுச்சியை அழிக்கவும், இந்தியாவில், 1984இல் அம்ரிஸ்தார் பொற்கோவில் தாக்குதலை திட்டமிட உதவி செய்தததை பற்றியும் ஆய்வு செய்து வெளியிட்டு இருக்கிறார். 1980களில் உகன்டாவில் பிரித்தானிய கூலிப்படைக்கு பிரித்தானியா ஆதரவு கொடுத்ததையும் வெளிக்கொண்டு வந்திருக்கிறார். விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு பிரித்தானியா செய்த உதவிகளை, “ஈழ இன அழிப்பில் பிரித்தானியா – 30 ஆண்டு கால துரோக வரலாறு” என்ற நூலாக வெளியிட்டு இருக்கிறார்.  
 2013 இல் ஜேர்மனியின் பிரேமன் நகரில் இடம்பெற்ற, நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் இலங்கை பற்றிய அமர்வில் இவரது ஆய்வுகளும் சமர்ப்பிக்கப்பட்டன. ஈழத்தமிழரின் இனவழிப்புக்கு பிரித்தானியா துணைபோனது என்று இவ் அமர்வு தீர்ப்பு வழங்கியதற்கு இவரது ஆய்வுகள் முக்கியமானவை.

தீர்ப்பாயம் பற்றியும் பில் மிலர் வெளியிட்ட ஏனைய ஆராய்வுகள் பற்றியும் அறிந்துகொள்ள பி ரி ஸ்ரீலங்கா என்ற இணையத்தளத்தைப் பார்வையிடுக.

கார்டியன் பத்திரிகையில் வெளியான அவரது கட்டுரையின் தமிழாக்கம்:

பிரச்சனைக்குரிய வரலாற்று ஆவணங்களை பாதுகாப்பதில், பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் அணுகுமுறை பற்றிய கரிசனைகள் இதனால் எழுந்துள்ளது. கென்யாவிலும் ஏனைய காலனிகளிலும், பிரித்தானிய பேரரசு முடிவுக்கு வந்த காலத்தில், பிரித்தானியாவின் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகள் பற்றிய ஆயிரக்கணக்கான ஆவணங்களை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு அழித்துவிட்டது என்று 2012ம் ஆண்டு மதிப்பாய்வு ஒன்று கண்டுள்ளது.

1958ம் ஆண்டு பொது ஆவணங்கள் சட்டத்தில், அரச திணைக்களங்கள் வரலாற்று ஆணவங்களை பாதுகாக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது. கார்டியன் பத்திரிகை, ஆவணங்கள் அழிக்கப்பட்டதை பற்றி, தகவலை பெறும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் வெளிவிவகார அமைச்சை கேட்டபோது, அவ்வாறு பாதுகாக்க வேண்டிய கடப்பாடு தமக்கில்லை என்று சொல்லியது.

கொள்கை மற்றும் நிர்வாக ரீதியானவையாகவே ஆவணங்கள் இருக்கும் என்றும், சிலசமயம் சில அக்காலத்து சிறு தேவைகளை பற்றியதாகவும் இருக்குமென்று சொல்லியது. 1978இலிருந்து 1980வரையான, இலங்கை சார்ந்த 195 ஆவணங்களை, இலங்கை சுதந்திரமடைந்து 30 ஆண்டுகளில் அழித்துவிட்டதாக வெளிவிவகார அமைச்சு ஏற்றுக்கொண்டுள்ளது.

எப்போது, எங்கே எப்படி இவை அழிக்கப்பட்டன என்பதை குறிப்பாக சொல்ல அது மறுக்கிறது. 'பாதுகாக்கப்படவேண்டும் என்று அடையாளப்படுத்தப்படாத ஆவணங்கள், இதற்காக தெரிவு செய்யப்பட்ட ஒரு கம்பனியால், வெளிவிவகார அமைச்சுக்கு வெளியே அழிக்கப்பட்டது' என்று அது சொன்னது.

'வெளிவிவகார அமைச்சின் பேப்பரும் ஆவணமும் அழிப்பது பற்றிய அக்காலத்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் அவை அழிக்கப்பட்டிருக்கும் என்று நாம் நம்புகிறோம்' என்றும் சொன்னது. மிடில்செக்ஸ் பல்கலைககழகத்தில் குற்றிவியல் நிபுணராக உள்ள ரேசல் சியோயா இதுபற்றி, 'ஆவணங்கள் அழித்தது மிகவும் கவலைக்குரியது. ஏனெனில் உள்நாட்டு போரின் ஆரம்ப காலத்தில், பிரித்தானியா இலங்கை பாதுகாப்பு படைகளுடன் வேலை செய்தது பற்றிய தகவல்கள் பொது மக்கள் மத்தியில் மிகவும் குறைவாகவே உள்ளது.' என்றார்.

உலக வரலாற்று பொருட்களை பாதுகாக்கும் அமைப்பான ஐநாவின் யுனேஸ்கோவிற்கு அவர் இதுபற்றி முறையீடு செய்திருக்கிறார்.

இவர் மேலும் 'கென்யா போன்ற வேறு இடங்களில் நடந்ததிலிருந்து, குற்றங்களை மறைப்பதற்றகாக ஆவணங்கள் அழிக்கப்பட்டன என்பது எமக்கு தெரியும்.

காணாமல் போதலும், சித்திரவதைகளும், பெரிய படுகொலைகளும் நடந்த போரில், இலங்கை ஈடுபட தயாராகும் போது, பிரித்தானியா எவ்வாறு உதவிகள் செய்தது என்பது பற்றி அறிவதற்கு பொதுமக்களுக்கு உரிமை உள்ளது' என்றார்.

வெளிவிவகார அமைச்சு, ஆவணங்களின் பெயர் பட்டியல் ஒன்றை வைத்திருக்கிறது. அதில் அழிக்கப்பட்ட ஆவணங்களின் பெயர்களும் உள்ளன. இவை பல முக்கியமான தரவுகளை உள்ளடக்கியிருந்தது. பாதுகாப்பு படைகளுடன் ஒத்துழைத்தது, ஆயுதங்கள் விற்பனை, வெளிநாட்டு உதவிகள், அகதி தஞ்சம் கோருதல் போன்ற பல தகவல்கள் அவற்றில் இருந்தன.

1978ம் ஆண்டு ஆவணங்களில் மூன்று ஆவணங்களே மிஞ்சி இருக்கின்றன. அதற்கு முதல் ஆண்டில் 38 ஆவணங்கள் இருக்கின்றன. ஆவணங்கள் அழிப்பு பெரியளவில் இடம்பெற்றிருக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம்.

ஆவணங்கள் தொலைந்தது தமிழ் வரலாற்றாசியர்களுக்கும் ஒரு பெரும் இழப்பு. உள்நாட்டு போரின் போது, இவர்கள் ஆவணங்களை காப்பதற்கு பெரிதும் போராடினார்கள். தமிழ் எதிரிகளால், யாழ்பாண நூலகம் 1981 எரியூட்டப்பட்டு, மீள பெறமுடியாத, 100,000 ஆவணங்களும் எரிக்கப்பட்டன.

'சுதந்திரத்திற்கு பின்னரான, வரலாறு மற்றும் மனித உரிமைகள் சார்ந்த ஆவணங்களை தேடி பாதுகாப்பதற்கு, தமிழ் சமூகம் பெரிதும் முயன்று வருகிறது. பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சு, முக்கியமான ஆவணங்களை, பல மனித உரமை மீறல்களை செய்த இல்ங்கை படைகளுக்கு பயிற்சியும் ஆயதமும் பிரித்தானிய அரசு வழங்கியது பற்றிய ஆவணங்களை, அழித்து விட்டது என்பது எமக்கு அதிர்ச்சி தருகிறது.' என்றார் 'தமிழ் தரவுகள் மையத்தின்' நிர்வாக செயலாளர் வரதகுமார் வைரமுத்து.

அழிக்கப்பட்ட ஆவணங்களில் முக்கியமான விடயங்கள் எதுவும் இல்லை என்று வெளிவிவகார அமைச்சு சொல்வது தமிழ் நிபுணர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. 'பிரித்தானிய அரசு பொதுமக்களை இவ்வாறு ஏமாற்றுவது பிழை. பொது மக்களுக்கு இதுபற்றி அறிய உரிமையுள்ளது.

வெளிவிவகார அமைச்சின் செயல், பிரித்தானிய உளவுத்துறையும் விசேட விமானப்படையும் இலங்கை படைகளுக்கு பயிற்சி அழித்தது பற்றி தகவல்களளை மறைப்பதற்காக எடுத்த முயற்சி என்றே தோன்றுகிறது. இத்தகவல்கள் பிரித்தானிய அரசியின் அரசசை வெட்கப்பட வைக்ககூடியதாக இருக்கலாம்.' என்றார் வரதகுமார்.

விசேட விமானப்படை இலங்கைக்கு சென்றது பற்றி தேசிய காப்பகத்திலுள்ள ஆவணங்களில் ஒருசில இடங்களிலேயே சொல்லப்படுகிறது. இவ்வாறான தகவல்களும் பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சால் பாதுகாக்கப்படும் ஆவணங்களிலேயே இருக்கிறது. அவற்றிலுள்ளவையும் இதற்கு முன்னர் வெளிவரவில்லை.

ஒரு பாதுகாப்பு அமைச்சின் ஆவணத்தில், 1978ம் ஆண்டின் பிற்பகுதியில், வலதுசாரி சனாதிபதி ஜயவார்தனா, பிரித்தானிய வெளிவிவகார அமைச்சை, தனி நாடு கேட்கும் தமிழ் கிளர்சிசயாளர்களை அடக்குவதற்கு, ஒரு பாதுகாப்பு நிபுணரை அனுப்புமாறு கேட்டார்.

இருந்தாலும், 'இல்ங்கை – பாதுகாப்பு கணிப்பு 1978' என்ற தலைப்பில் உள்ள வெளிவிவகார அமைச்சின் ஒரு ஆவணம், சனாதிபதியின் வேண்டுகோளுக்கு என்ன நடந்தது என்பது பற்றி தெளிவாக்கியிருக்கும். ஆனால், இது அழிக்கப்பட்டு விட்டது.

இனவாத கருத்துக்களை கொண்ட உளவுத்துறையின் தலைவர், 1979இல், இரண்டு முறை அறிவுரைகள் வழங்க இல்ங்கைக்கு சென்றிருக்கிறார் என்று மிஞ்சியிருக்கும் ஆவணங்களிலிருந்து தெரியவருகிறது.

ஜிம் கலஹானின் தொழிற்காட்சி ஆட்சியின் போதும், மார்கரெட் தச்சரின் பழமைவாதகட்சி ஆட்சியின் பேதும் சென்றிருக்கிறார். இதுபற்றிய முழுமையான தகவல்களை எடுப்பது இப்போது கடினமாக உள்ளது. ஏனெனில், வெளிவிவகார அமைச்சின், 1979ம் ஆண்டு ஆவணமான 'இலங்கை – பிரித்தானியாவின் பாதுகாப்பு சார்ந்த வருகைகள்' என்ற ஆவணம் அழிக்கப்பட்டு விட்டது.

உளவுத்துறை அதிகாரியின் பெயர், ஜான் பெர்சிவல் மோர்டன். இவர், CMG > OBE ஆகிய படைத்துறை சார்ந்த பதக்கங்களை பெற்றிருக்கிறார். ஜக் மோர்டன் என்றே இவர் அதிகமாக அறியப்பட்டவர்.

காலனிய இந்தியாவில் காவல்துறை அதிகாரியாக இருந்தவர். அன்றைய இந்திய விடுதலை போராட்ட அமைப்புக்களைப் பற்றி உளவு செய்தவர். இந்தியர்களை பற்றி 'முதிர்ச்சியற்றஇ பின்னடைந்த, தேவைகள் உள்ள மக்கள். இவர்களை பிரித்தானியவே ஆட்சி செய்து நிர்வகிக்க வேண்டும்' என்று இவர் விபரித்தார். பிற்காலத்தில், பிரித்தானிய உளவுத்துறையின் தலைவரானார். பலவிதமான பாதுகாப்புதுறை பதவிகளை வகித்தார்.

ஒரு பாதுகாப்பு அமைச்சு ஆவணம், மோர்டனின் முன்மொழிவிலேயே, விசேட விமானப் படை 1980இல், இலங்கைக்கு, ஒரு புதிய இராணுவ படைக்கு பயிற்சி கொடுக்க சென்றது என்கிறது. வெளிவிவகார அமைச்சு அழித்த ஒரு ஆவணம், 'பிரித்தானியா இலங்கை வழங்கிய இராணுவ உதவிகள் - 1980' என்ற தலைப்பில் உள்ளது.

விசேட விமானப் படை பிரித்தானியாவிலுள்ள இரானிய தூதரகத்தை முற்றுகை இட்டதை தொடர்நதே இல்ங்கைக்கு வருகை செய்கிறது. தொடர்ந்த நான்கு மாதங்களுக்கு, இவ்விசேட விமானப் படை இல்ங்கை இராணுவத்தினருக்கு பயிற்சி கொடுத்தது.

அவர்களில் 60 பேர்களை 'பயங்கரவாதத்திற்கு எதிரான சிறப்பு படைக்காக' தெரிவு செய்தது. வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் 'ஏனைய அரச அமைச்சுக்களை போல வெளிவிவகார அமைச்சும் அதன் ஆவணங்களை மீளாய்வு செய்து பொது ஆவணங்கள் சட்டத்திற்கு ஏற்ப எவையெல்லாம் பாதுகாக்கப்பட் வேண்டும் என்று முடிவு செய்யும்.

வெளிவிவதார அமைச்சு பாதுகாப்பதோ அழிப்பதோ என்று முடிவு செய்வதற்கு, தேசிய ஆவண காப்பகத்தின் அறிவுரையும் மேற்பார்வை இருக்கும். வெளிவிவகார அமைச்சின் முடிவுகள் தேசிய ஆவண காப்பகத்தின் கொள்கை சார்ந்தும் வெளிவிவகார அமைச்சின் கொள்கை சார்ந்தும் எடுக்கப்படும்.' என்றார்.

பில் மிலர்
கார்டியன் பத்திரிகையில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்