நிரல்
மே 30 00:24

கிளிநொச்சியில் வாள்வெட்டு- கர்ப்பிணிப் பெண் உட்பட 9 பேர் காயம்

(கிளிநொச்சி, ஈழம்) இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலை அடுத்து தமிழர் தாயகப் பகுதிகளெங்கும் பாதுகாப்பு என்ற பெயரில் இராணுவம் குவிக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் கிளிநொச்சி - செல்வாநகர் பகுதியில் வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதன் போது 9 பேர் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கர்ப்பிணிப் பெண் ஒருவர் உட்பட ஆறு பெண்களும் ஆறு ஆண்களுமாக ஒன்பது பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர். நேற்றுப் புதன்கிழமை மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மே 29 22:34

கொழும்புத்துறைமுக அபிவிருத்தி- இந்தியா, ஜப்பான் ஒப்பந்தம்

(யாழ்ப்பாணம், ஈழம்) ஈழத் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் இல்லாதொழிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில், பூகோள அரசியல் தந்திரோபாயங்களுக்குள் சிக்குண்டுள்ள இலங்கை அரசாங்கம் பத்து ஆண்டுகளில் இலங்கைத் துறைமுகங்களையும் கடற் பிரதேசங்களையும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளுக்கு தாரைவார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முல்லைத்தீவுக் கடற்பரப்பில் இருந்து திருகோணமலைக் கடற்பிரதேசம் வரையான பகுதி எண்ணெய் வயல் ஆய்வுக்காக அமெரிக்க நிறுவனம் ஒன்றிடம் கையளிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி அதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு செப்ரெம்பர் மாதம் இரண்டாம் திகதி எண்ணெய் வயல் ஆய்வு ஆரம்பிக்கப்பட்டது.
மே 29 14:57

புதிய தேசிய பாதுகாப்புச் சபை - பரிந்துரைகள் மகாநாயக்க தேரர்களிடம்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்பின் தேசிய பாதுகாப்பு, அரசியல் ஸ்திரத்தன்மை ஆகியவற்றை சர்வதேசத்துக்கும் மக்களுக்கும் காண்பிப்பதற்காக மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க, மகிந்த ராஜபக்ச ஆகியோரை உள்ளடக்கிய புதிய பாதுகாப்புச் சபையொன்றை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் தேசிய வழி என்ற தலைப்பில் பரிந்துரைகள் அடங்கிய ஆவணம் ஒன்று மகாநாயக தேரர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. மல்வத்து, அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களிடம் இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க நேற்றுச் செவ்வாய்க்கிழமை இந்த ஆவணத்தைக் கையளித்தார். ஜாதிக ஹெல உறுமயவின் பௌத்த தேரர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மே 28 23:06

பாகிஸ்தான், ஆப்கானிஸ்த்தான் அகதிகளுக்கு உலர் உணவு வழங்க முல்லைத்தீவு மக்கள் ஏற்பாடு

(வவுனியா, ஈழம்) கொழும்பு, நீர்கொழும்பு பிரதேசங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மக்களை சிங்கள மக்கள் தாக்குவார்கள் என்ற அச்சத்தினாலேயே இலங்கை அரசாங்கம் அவர்களில் ஒரு தொகுதியினரை வடமாகாணம் வவுனியா - பூந்தோட்டம் முகாமில் தங்கவைத்தது. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் இந்த மக்களை வேறு பிரதேசங்களுக்கு மாற்றுமாறு கோரி நீர்கொழும்பில் சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். அம்பாந்தோட்டையில் தங்க வைக்கப்பட்டபோதும் அங்கும் சிங்கள மக்கள் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில் மனிதாபிமான அடிப்படையில் வவுனியாவில் தங்க வைப்பதற்கு தமிழ் அரசியல் பிரதிநிதிகள் சிலர் அனுமதித்தனர்.
மே 28 10:31

அமெரிக்காவுக்கு எழுந்துள்ள சந்தேகம் - மகிந்த அணியோடும் பேச்சு

(யாழ்ப்பாணம், ஈழம்) சீன-இலங்கை பாதுகாப்பந்தம் ஒன்றைச் செய்வதற்கான முன்நகர்த்தல் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள விடயங்கள் முழமையாக வெளிப்படுத்தப்படவில்லையென கொழும்பில் உள்ள மேற்குலக நாடுகள் மற்றும் இந்தியா,ஜப்பான் ஆகிய நாடுகளின் தூதுவர்கள் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் மூத்த அமைச்சர்களிடம் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளுடன் செய்யப்படுகின்ற ஒப்பந்தங்களின் பிரதிகள் இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவது வழமை. குறிப்பாக ஜே.வி.பி அந்த விடயத்தில் கடும் பிடியாகவே இருக்கும். ஆனால் சீனாவுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செய்து கொண்ட முன் நகர்த்தல் ஒப்பந்தம் குறித்து ஜே.வி.பியோ, மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியோ இதுவரை கேள்வி எழுப்பவில்லை.
மே 28 00:13

முல்லைத்தீவில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது பொலிஸார் தாக்குதல் - புகைப்படக் கருவியும் சேதம்

(முல்லைத்தீவு, ஈழம்) முல்லைத்தீவு மாவட்டத்தில் மிக நீண்டகாலமாக சர்ச்சைக்குரியதாக காணப்படும் நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமராக்களை உடனடியாக அகற்றுமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் முல்லைத்தீவு மாவட்ட பொலிஸாருக்கு இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பாக சம்பவ இடத்துக்கு செய்தி சேகரிக்கச் சென்ற முல்லைத்தீவு மாவட்ட சுயாதீன ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை குமணன் மீது கொக்கிளாய் பொலிஸ் நிலைய பொலிஸார் தாக்குதல் நடத்தியதாக பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் கூர்மை செய்தித் தளத்திற்கு குறிப்பிட்டார்.
மே 27 23:20

ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான பிரேரணைக்கு ஜே.வி.பி.ஆதரவு

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையில் ஏப்பிரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறுத் தற்கொலைத் தாக்குதலின் பின்னரான சூழலில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஒற்றையாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள். முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் அதிரித்து வருகின்றன. அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டுமென மூத்த அமைச்சர்கள் கூட அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இவ்வாறான நிலையில் மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய கூட்டு எதிர்க்கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை கடந்த வாரம் சமர்ப்பித்திருந்தது. ஆனால் அந்தப் பிரேரணைக்கு ஆதுரவு வழங்க முடியாதெனக் கூறிவந்த மக்கள் விடுதலை முன்னணி எனப்படும் ஜே.வி.பி தற்போது ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
மே 27 15:05

கொழும்பு உள்ளிட்ட பிரதேசங்களில் முஸ்லிம் இளைஞர்கள் கைது

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான சூழலில் வடக்கு- கிழக்கு உள்ளிட்ட அனைத்துப் பிரதேசங்களிலும் இலங்கைப் படையினரும் இலங்கைப் பொலிஸாரும் நடத்தும் தேடுதல், சோதனை நடவடிக்கைகளில் முஸ்லிம் இளைஞர்கள் பலர் கைது செய்யப்படுன்றனர். பயங்கரவாத தடைச் சட்டத்த்தின் கீழ் கைது செய்யப்படும் இளைஞர்களில் பலர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படாமலேயே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவருகின்றனர். தமிழ் பேசும் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் ஐ.எஸ் இஸ்லாமிய அமைப்புடன் தொடர்புள்ளவர்கள் என்ற சந்தேகத்தில் இதுவரை 63 பேர் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மே 26 21:41

அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டாமென மைத்திரி உத்தரவு

(யாழ்ப்பாணம், ஈழம்) சீனாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் எதனையும் செய்ய வேண்டிய அவசியமில்லையென இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சர் திலக் மாரப்பனவிடம் கூறியுள்ளார். இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்துடன் அமெரிக்கா செய்யவுள்ள ஒப்பந்தங்களுக்கு கண்டி, மல்வத்து பௌத்த பீடாதிபதிகள் எதிர்ப்பு வெளியிட்டிருந்த நிலையில் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் சென்ற 23 ஆம் திகதி வியாழக்கிழமை சந்தித்து விளக்கமளித்திருந்தார். ஒப்பந்தங்கள் செய்யப்படும் போது இலங்கையின் ஒற்றையாட்சித் தன்மை மாறுபடாதெனவும் அமெரிக்கத் தூதுவர் கூறியிருந்தார்.
மே 26 12:48

யாழ்ப்பாணத்தில் 27 ஆயிரத்து 261 குடும்பங்கள் வீடின்றி நிர்க்கதி - 52 குடும்பங்கள் சிறுவர்களை தலைமைத்துவமாக கொண்டுள்ளன

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கம் சர்வதேச நாடுகளின் துணையுடன் தமிழ் மக்கள் மீது இன அழிப்புப் போர் ஒன்றை கட்டவிழ்த்து விட்டிருந்தது. முப்பது ஆண்டுகால போரில், 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இன அழிப்புத் தீவிரமடைந்தது. அதன் பின்னர் பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களில் பல்லாயிரம் பேர் தொடர்ந்தும் அகதி வாழ்க்கையே வாழ்ந்து வருகின்றனர். கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட 30 ஆண்டு போர்க்காலம் முதல் இன்று வரை ஈழத்தமிழ் மக்கள் உடைமைகள், சொந்த வீடுகள், நிலங்கள், சொத்துக்கள், என அனைத்தையும் இழந்து நிராதரவான நிலையிலேயே வசிக்கின்றனர்.