நிரல்
பெப். 17 23:34

அமெரிக்காவின் மிலேனியம் ஒப்பந்தம் பற்றி ஆராய்வதற்கான குழு கோட்டாவிடம் அறிக்கை சமர்ப்பித்தது

(வவுனியா, ஈழம்) இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளிடம் இருந்து பெறும் கடன்களை மீளச் செலுத்துவதற்கு எவ்விதமான திட்டங்களும் இல்லாமல் இறக்குமதிப் பொருளாதாரத்தில் மாத்திரமே தங்கியுள்ளது. இந்த நிலையில் மைத்திரி- ரணில் அரசாங்கத்தில் பெறப்பட்ட கடனுக்கான 367 மில்லியன்களுக்குக் குறை நிரப்புப் பிரேரணை ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன கூறியுள்ளார். இவ்வாறானதொரு சூழலில் அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனத்தின் (Millennium Challenge Cooperation) (MCC) நாநூற்றி எண்பது மில்லியன் டொலர்களைப் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது பற்றி ஆராய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட புத்திஜீவிகள் குழுவின் முதற் கட்ட அறிக்கை இன்று திங்கட்கிழமை கையளிக்கப்பட்டுள்ளது.
பெப். 17 11:06

பொருளாதார நெருக்கடி- 367 பில்லியன்களுக்குக் குறை நிரப்புப் பிரேரணை

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையின் பொருளாதாரம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் வெளிநாட்டுக் கடனுதவிகளும் மறுக்கப்பட்டு வருவதாக இலங்கை நிதியமைச்சின் தகவல்கள் கூறுகின்றன. மகிந்த ராஜபக்ச சென்ற வாரம் இந்தியாவுகுப் பயணம் செய்திருந்தால் ஏற்கனவே வழங்குவதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்த நாநூற்றி ஐம்பது மில்லியன்களைக் கையளிக்க இந்தியா இணங்கியுள்ளது. ஆனாலும் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற நிதி நிறுவனங்கள் நிதி வழங்க மறுத்துள்ளதாகக் கூறப்படுகின்றது. எதிர்வரும் ஏப்பிரல் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பாரிய நிதி நெருக்கடி ஒன்றை எதிர்நோக்கியுள்ளதாகவும் நிதியமைச்சின் தகவல்கள் கூறுகின்றன.
பெப். 16 23:17

மக்களின் உடனடித் தேவைகளை நிறைவு செய்ய வன்னித் தமிழ் மக்கள் ஒன்றியம் உதயம்

(கிளிநொச்சி, ஈழம்) வடமாகாணத்தில் வன்னித் தமிழ் மக்கள் ஒன்றியத்தின் தலைமைச் செயலகம் இன்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வு முற்பகல் 11 மணியளவில் பாரதிபுரம் பகுதியில் இடம்பெற்றது. ஒன்றியத்தின் ஸ்தாபகரு்ம, ஊடக பேச்சாளருமான எம்.ஏ.யோகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறிதத் நிகழ்வில் பலர் கலந்து கொண்டனர். குறிதத் அலுவலகத்தினை கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் இணைந்து திறந்து வைத்தனர். இவ்வலுவலகம் கிளிநொச்சி பாரதிபுரம் பிரதான வீதியில் திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வில் உரையாற்றிய குறித்த ஒன்றியத்தின் ஸ்தாபகரு்ம, ஊடக பேச்சாளருமான எம்.ஏ.யோகேஸ்வரன், தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அன்றாடப் பி்ரச்சினைகள் பற்றிக் குறிப்பிட்டார்.
பெப். 16 21:23

ஆட்சேபனை- அமைச்சர் தினேஸ் அமெரிக்கத் தூதுவரை அழைத்து விளக்கம்

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மற்றும் அவருடைய குடும்பம் மீது அமெரிக்கா விதித்த பயணத் தடை தொடர்பாக இலங்கை அரசாங்கம் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது. வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ், (Alaina B. Teplitz) தூதரக அதிகாரிகளைச் சந்தித்து பயணத் தடை தொடர்பாக இலங்கையின் ஆட்சேபனையை தெரிவித்துள்ளார். கொழும்பு வெளிவிவகார அமைச்சுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை அழைக்கப்பட்ட அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் மற்றும் தூதரக அதிகாரிகளுடன் உரையாடிய அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, இந்தப் பயணத் தடை புதிய அரசாங்கத்துக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளார்.
பெப். 15 22:38

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முரண்பாடுகள்- மகிந்த அணி மீது குற்றச்சாட்டு

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையின் எதிர்வரும் ஏப்பிரல் மாத இறுதியில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பான முரண்பாடுகள் நீடித்துச் செல்;கின்றன. நேற்று வெள்ளிக்கிழமை ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச ஆகியோரிடையே இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியளிக்கவில்லையெனக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. கட்சியின் யானைச் சின்னத்திலேயே போட்டியிடுவது என்றும் கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்கவே செயற்படுவாரென்றும் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் சஜித் பிரேமதாசவிடம் கூறியுள்ளனர்.
பெப். 14 10:59

மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள், துப்பாக்கி ரவைகள் மீட்பு

(முல்லைத்தீவு, ஈழம் ) தமிழர் தாயகம் வடமாகாணம் முல்லைத்தீவு மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று வியாழக்கிழமையும் மேலதிக அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன. முல்லைத்தீவு நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாகவே அகழ்வுப் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது. வைத்தியசாலை வளாகத்தில் புதிய கட்டடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான துப்பரவுப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோதே மனித எச்சங்கள் புதன்கிழமை கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. உடனடியாக மாங்குளம் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டுச் சம்பவ இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எஸ் லெனின்குமார் வருகை தந்து பார்வையிட்டிருந்தார். இந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமையும் அகழ்வுப் பணிகள் தொடர்கின்றன.
பெப். 13 23:05

ஒற்றையாட்சியைப் பலப்படுத்தும் முன்மொழிவுகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளிப்பு

(யாழ்ப்பாணம், ஈழம்) புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படும்போது இலங்கை அரசின் ஒற்றையாட்சிக் கட்டமைப்பை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பது தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை ஒன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. பௌத்த பிக்குமாரை உள்ளடக்கிய யுத்துகம என்ற சிங்கள அமைப்பு ஒன்று இந்த அறிக்கையைத் தயாரித்துக் கையளித்துள்ளது. பலமானதொரு அரசு- எமது அரசியல் யாப்புக்கான முன்மொழிவுகள் என்ற கருப்பொருளில் குறித்த பரிந்துரைகள் தயாரிக்கப்பட்டு அறிக்கையாகக் கையளிக்கப்பட்டுள்ளன. கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் உள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற சிறப்பு நிகழ்விலேயே இந்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.
பெப். 13 14:16

பௌத்த தேசியவாதக் கட்டமைப்பு அரசாங்கத்தை நிறுவும் முயற்சியில் கோட்டா

(வவுனியா, ஈழம்) ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து ரணில் விக்கிரமசிங்க ஒருபோதும் விலகப் போவதில்லையென கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவன்ச கூறியுள்ளார். புதிய அரசியல் அணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் கட்சியின் யானை சின்னத்திலேயே ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுமெனவும் அவர் கொழும்பில் நேற்று்ச் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கூறியுள்ளார். அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாகவும் இதனால் ஏனைய சிறிய கட்சிகளுடன் இணைந்து புதிய அரசியல் அணி ஒன்று விரைவில் உருவாக்கப்படுமெனவும் சஜித் பிரேமதாசவுக்கு நெருக்கமான உறுப்பினர்கள் கூறுகின்றனர்.
பெப். 12 12:53

மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள்- சம்பவ இடத்தைப் பார்வையிட்டார் நீதிபதி

(முல்லைத்தீவு, ஈழம் ) தமிழர் தாயகம் வடமாகாணம் முல்லைத்தீவு மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வைத்தியசாலை வளாகத்தில் புதிய கட்டடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான துப்பரவுப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோதே மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பணியாளர்கள் கூறுகின்றனர். உடனடியாக மாங்குளம் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டுச் சம்பவ இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எஸ் லெனின்குமார் வருகை தந்து பார்வையிட்டுள்ளார். நீதிபதியின் உத்தரவுக்கு அமைவாக தற்போது விசாரணைகள் இடம்பெறுகின்றன. வைத்தியசாலை வளாகத்தில் ஏற்கனவே கண்ணிவெடிகள் இருப்பதாகத் தெரிவித்து மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களினால் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன.
பெப். 11 23:17

காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு மரணச் சான்றிதழ்- கொழும்பில் ஆர்ப்பாட்டம்

(வவுனியா, ஈழம்) இலங்கை இராணுவத்தினரால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களையும் சரணடைந்தும் கையளிக்கப்பட்டும் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் எவ்வாறு மரணச் சான்றிதழ் வழங்க முடியுமென சமவுரிமை இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது. காலிமுகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது இவ்வாறு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. போரின் போதும் அதன் பின்னரான சூழலிலும் காணாமல் போனவர்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்கப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சமீபத்தில் கூறியிருந்தார். இதற்குக் கடும் எதிர்ப்பு வெளியிட்ட சமவுரிமை இயக்கம், ஜனாதிபதி அவ்வாறு கூறியதை ஏற்க முடியாதென்றும் தெரிவித்துள்ளது.