நிரல்
மார்ச் 23 23:14

வடக்குக்- கிழக்குப் பகுதிகளில் சுத்தம் செய்யும் பணிகள் ஆரம்பம்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதையடுத்து வடக்குக்- கிழக்குத் தாயகப் பகுதிகளில் சுகாதாரப் பணியாளர்கள் பிரதேசங்களைச் சுத்தம் செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இலங்கை அரசாங்கம் போதிய வசதிகளைச் செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதால் குறைந்த பட்சம் பிரதேசத்தில் உள்ள வளங்களைக் கொண்டும் சொந்த முயற்சியினாலும் துப்பரவுப் பணிகள் ஆரமப்பிக்கப்பட்டுள்ளன. திட்டமிடப்பட்ட முறையில் யாழ்ப்பாணம், கொடிகாமம், கிளிநொச்சி இரணைமடுக்குள்ம், மட்டக்களப்பு, வவுனியா, மன்னார், ஆகிய தாயகப் பி்ரதேசங்களில் இலங்கை அரசாங்கம் கொரேனா தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைத்து வெருகின்றது.
மார்ச் 22 21:41

சிங்கள யாத்திரிகர்கள் இரணைமடு, கொடிகாமம் நிலையங்களில் பராமரிப்பு

(யாழ்ப்பாணம், ஈழம்) கொரோனா வைரஸ் தொற்று மேலும் பரவி வருவதையடுத்து இலங்கையில் இருந்து இந்தியாவுக்குச் சென்றிருந்த சிங்கள யாத்திரிகர்கள் அழைத்து வரப்பட்டு தமிழர் தாயகமான வடமாகாணம் யாழ்ப்பாணத்தில் உள்ள கொடிகாமம் பிரதேசத்திலும் கிளிநொச்சி இரணைமடுப் பிரதேசத்திலும் 14 நாட்களுக்குத் தங்கவைக்கப்பட்டுப் பராமரிக்கப்படுகின்றனர். இந்தப் பிரதேசங்களில் உள்ள இலங்கை விமானப் படையினரின் முகாம்களில் தனிமைப்படுத்தும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கொழும்பு கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட தென்நூற்றுக்கும் அதிகமான யாத்திரிகர்கள் இங்கு தனிமைப்படுத்தப்பட்டுப் பராமரிக்கப்படுகின்றனர்.
மார்ச் 21 21:26

அனுராதபுரம் சிறைச்சாலையில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு- மூன்று கைதிகள் உயிரிழப்பு

(வவுனியா, ஈழம்) இலங்கையின் வடமத்திய மாகாணம் அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள சிறைச்சாலையில் இலங்கைப் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று கைதிகள் உயிரிழந்துள்ளனர். தமிழ் அரசியல் கைதிகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த சிறைச்சாலையில் இன்று சனிக்கிழமை மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறைச்சாலையில் கொரோனா அச்சம் காரணமாக கைதிகள் சிறை உடைப்பு முயற்சியில் ஈடுபட்டதாகவும் இதனால் கைதிகளை நோக்கித் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாலேயே மூன்று கைதிகள் உயிரிழந்ததாக சிறைச்சாலைத் தகவல்கள் கூறுகின்றன. ஆனாலும் இலங்கைச் சிறைச்சாலை அதிகாரிகள் கைதிகள் உயிரிழந்ததை உறுதிப்படுத்தவில்லை.
மார்ச் 20 23:40

விமானப்படைத் தளங்களில் கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தும் நிலையங்கள்

(முல்லைத்தீவு, ஈழம் ) இல்ங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாகச் சந்தேகிக்கப்படும் மக்களைத் தனிமைப்படுத்தும் நிலையங்களை அமைத்து வருகின்றது. ஏலவே மட்டக்களப்பு, வவுனியா, மன்னார் பிரதேசங்களில் தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது முல்லைத்தீவு கேப்பாப்பிலவு பிரதேசத்தில் கொரோனா வரைஸ் தனிமை்ப்படுத்தும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் உள்ள இலங்கை விமானப்படையினரின் முகாமிலேயே கொரோனா தடு்ப்புத் தனிமைப்படுத்தும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து வருகை தந்த 41 பேர் அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மார்ச் 19 21:44

கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க தமிழ் இளையோரின் விழிப்புணர்வு நடவடிக்கைகள்

(மட்டக்களப்பு, ஈழம் ) தாயகப் பிரதேசமான வடக்குக் கிழக்கு மாகாணங்களில் உள்ள யாழ்ப்பாணம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க விசேட செயலணி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பிரித்தானியாவில் இருந்து மட்டக்களப்புக்கு வருகை தந்த 61 வயதான நபர் ஒருவருக்குக் கொரேனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், விசேட சிகிச்சை நிலையம் ஒன்றை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நிர்வாகம் உருவாக்கியுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு விசேட சிகிச்சை நியைலம் எனப் பெயரிடப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில அமைக்கப்பட்டுள்ளது.
மார்ச் 18 22:19

இலங்கையுடன் சீன அபிவிருத்தி வங்கி ஒப்பந்தம்- 500 மில்லியன்கள் அமெரிக்க டொலர் நிதியுதவி

(யாழ்ப்பாணம், ஈழம்) கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச ஆகியோரை மையமாகக் கொண்ட இலங்கை அரசாங்கம், சீன அபிவிருத்தி வங்கியுடன் (China Development Bank) (CDB) ஐநூறு மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியுதவியாகப் பெறக் கூடிய ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது. இது தொடர்பாக இலங்கை அரசாங்கம் இன்று புதன்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பத்து ஆண்டுகள் கடன் திட்ட அடிப்படையிலேயே இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு சீன அபிவிருத்தி வங்கி ஒரு பில்லியன் நிதியை கூட்டுக் கடன் (syndicated loan) திட்ட அடிப்படையில் வழங்கியிருந்தது. ஆனாலும் அ்ந்தக் கடனு்க்கான கால எல்லையும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் மேலும் எட்டு ஆண்டுகள் நீடிக்கப்பட்டுள்ளன.
மார்ச் 17 22:05

மட்டக்களப்பில் ஒருவருக்கு கொரோனா வைரஸ்- மேலும் பலருக்கு ரத்தப் பரிசோதனைகள்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு வரை 43 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக சுகாதார இலங்கை ஒற்றையாட்சி அரசின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. 267 பேருக்கு ரத்தப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இத்தாலி, பிரான்ஸ், தென்கொரிய, ஈரான் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தந்தவர்களினாலேயே கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கத்தின் சுகாதா அமைச்சர் பவித்திரா வன்னியராட்சி கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
மார்ச் 16 21:55

நாடாளுமன்றத் தேர்தலில் ஞானசார தேரர் தலைமையிலான பிக்குமார் குழு போட்டி

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ஞானசார தேரர் தலைமையிலான பொதுபல சேன போட்டியிடவுள்ளது. ஜாதிக ஹெல உறுமயவின் முன்னாள் தலைவர் அத்துரலியே ரத்தன தேரர் உள்ளிட்ட பௌத்த குருமார் குழு ஒன்று ஞானசார தேரருடன் இணைந்து தேர்தலில் போட்டியிடவுள்ளது. எங்கள் மக்கள் சக்தி (Ape Jana Bala Pakshaya) என்ற புதிய அரசியல் கட்சியின் மூலம் இவர்கள் தேர்தலில் போட்டியிடவுள்ளனர். கட்சியின் சின்னமாக இலங்கை தேசியக்கொடி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேசியக் கொடியை கட்சியின் சின்னமாகப் பயன்படுத்த முடியாதென்று இலங்கைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன.
மார்ச் 15 22:42

சீனப் பயணிகளுக்கு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனையில்லை

(மன்னார், ஈழம் ) கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதைத் தடுக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்தாலும், சீனாவில் இருந்து இலங்கைக்கு வருகின்ற சீனப் பயணிகளுக்கு கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் எந்தவொரு பரிசோதனைகளும் இன்றி நேரடியாகக் கொழும்பு நகருக்குள் வருவதற்கு அனுமதியளிக்கப்படுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் பயணிகளைச் சோதனையிட்டுப் பின்னர் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்களில் 14 நாட்கள் தங்க வைக்கப்படுகின்றனர். சீனாவுக்கு அடுத்ததாகக் கொரோனா வைரஸ் தாக்கத்துக்குள்ளான இத்தாலி நாட்டில் இருந்து வரும் பயணிகள், சிறப்பு முகாம்களில் 14 நாட்கள் தடுத்து வைக்கப்படுகின்றனர்.
மார்ச் 14 21:40

கிளிநொச்சி. முல்லைத்தீவு ஆடைத் தொழிற்சாலைகளை மூடுமாறு கோரிக்கை

(முல்லைத்தீவு, ஈழம் ) இலங்கையில் கடந்த சில வாரங்களாக ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் தமிழர் தாயகமான வடமாகாணம் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இயங்கி வரும் ஆடைத்தொழிற்சாலைகளின் பணிகளை உடனடியாக இடைநிறுத்தமாறு கிளிநொச்சி, முல்லைத்தீவு அரச அதிபர்களிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 15 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் அங்கு பணியாற்றி வருகின்றனர். இதனால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படலாமென்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.