செய்தி: நிரல்
மே 23 23:06

கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் ஆய்வுகளை மேற்கொள்ள இராணுவ அதிகாரி தலைமையில் செயலணி

(மட்டக்களப்பு, ஈழம் ) கிழக்கு மாகாணத்தில் தொல்லியல் ஆய்வு என்ற போர்வையில் தமிழ் பேசும் மக்களின் தாயகப் பிரதேசங்களை அபகரிக்கும் நோக்கில் இலங்கைப் பாதுகாப்பு படைகளின் பிரதானி மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன தலைமையில். விசேட செயலணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் ஏலவே சிங்களக் குடியேற்றங்கள் செய்யப்பட்டு பௌத்த விகாரைகளும் கட்டுப்பட்டுள்ள நிலையில் இந்த விசேட செயலணி குறித்து சந்தேகம் எழுந்துள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு இணை;ப்பாளர் தா்மலிங்கம் சுரேஸ். தமிழ்த தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் மற்றும் கிழக்கு மாகாணத்தில் உள்ள பொது அமைப்புகள் குற்றம் சுமத்தியுள்ளன.
மே 22 20:37

நாடாளுமன்றத் தேர்தல்- கட்சிகளிடம் ஆலோசனை கோரல்

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பாக இழுபறி நிலை நீடித்துச் செல்கிறது. நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பாக ஆலோசனைகளை முன்வைக்குமாறு தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்களிடம் இலங்கைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய வேண்டுகோள் விடுத்துள்ளார். நேரடியாகச் சந்தித்து ஆலோசனை வழங்குமாறு அவர் அனைத்துக் கட்சிகளுக்கும் சுயேற்சைக் குழுக்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். சுகாதாரத் திணைக்களத்துடன் பேச்சு நடத்த முன்னர் ஆலோசனைகளை வழங்க வேண்டுமென மகிந்த தேசப்பிரிய அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
மே 21 23:25

ஐக்கிய தேசியக் கட்சியும் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

(வவுனியா, ஈழம்) நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கலைத்தமை தொடர்பான அரச வர்த்த மானியை சட்ட வலுவற்றதாக்குமாறு கோரி ஐக்கிய தேசியக் கட்சி இன்று வியாழக்கிழமை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. ஜீன் மாதம் 20 ஆம் திகதி தேர்தலை நடத்துவது தொடர்பாக அறிவிக்கப்பட்டிருந்த அரச வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட எட்டு அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை உயர்நீதிமன்றில் இன்று நான்கவது நாள்களாகவும் இடம்பெற்று வரும் நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவன்ச இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
மே 20 23:09

யூன் மாதம் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியாது- உயர் நீதிமன்றத்திற்கு அறிவிப்பு

(வவுனியா, ஈழம்) எதிர்வரும் யூன் மாதம் 20 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியாதென இலங்கைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு இன்று புதன்கிழமை உயர் நீதிமன்றத்திறகு; அறிவித்துள்ளது. ஜூன் மாதம் 20 ஆம் திகதி தேர்தலை நடத்துவது தொடர்பாக அறிவிக்கப்பட்டிருந்த அரச வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட எட்டு அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை உயர்நீதிமன்றில் இன்று மூன்று நாள்களாகவும் இடம்பெற்று வரும் நிலையில் தேர்தலை நடத்தக் கூடிய சுகாதாரச் சூழல் இல்லையென தேர்ல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் நீதிமன்ற நீதியரசர்களிடம் இந்த அறிவித்தலைக் கைளளித்தார்.
மே 18 23:41

இனப்படுகொலைக்கு நீதிகோரி முள்ளிவாய்காலில் மக்கள் ஒன்று கூடல்

(முல்லைத்தீவு, ஈழம் ) ஈழத் தமிழர்கள் மீதான இனப்படுகொலைகள் செய்யப்பட்டமைக்கான நீதி பதினொரு ஆண்டுகள் சென்றுவிட்ட நிலையிலும் கிடைக்கவில்லையென முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்துகொண்ட மக்கள் கவலை வெளியிட்டனர். சர்வதேசம் நீதயைப் பெற்றுத்தர வேண்டுமெனவும் மக்கள் கோரிக்கை விடுத்தனர். கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவது என்ற போர்வையில் இலங்கை இராணுவம் கடுஐமயான தடையுத்தரவுகளைப் பிறப்பித்திருந்தும் மக்கள் துணிவோடு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளனர். உலக சுகாதார நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு ஏற்ப சமூக இடைவெளிகளைப் பின்பற்றி மக்கள் பங்கெடுத்தனர்;. துமிழ்த் தரப்பு அரசியல் பிரதிநிதிகள் பலர் நிகழ்வுகளில் கலந்துகொள்ளவிடாமல் தடுக்கப்பட்டனர்.