செய்தி: நிரல்
ஜூன் 12 22:56

தேர்தல் பிரச்சாரத்தில் அரச வளங்கள் துஸ்பிரயோகம்- ஆணைக்குழுவிடம் முறைப்பாடு

(வவுனியா, ஈழம்) ஒற்றையாட்சி அரசின் இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின்போது அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் அரச சொத்துக்களை பயன்படுத்துவதாக தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் அரசசார்பற்ற நிறுவனங்கள் குற்றம் சுமத்தியுள்ளன. அரச திணைக்களங்கள். அரச கூட்டுத்தாபனங்கள் ஆகியவற்றுக்குச் சொந்தமான வாகனங்கள், தளபாடங்கள், மண்டபங்கள் அனுமதியின்றிப் பயன்படுத்தப்படுவதாகவும் தற்போது காபாந்து அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் பலர் இவ்வாறு அரச வளங்களைத் துஸ்பிரயோகம் செய்வதாகவும் தேசிய சமாதானப் பேரவை, மாற்றுக் கொள்கை மையம் ஆகிய நிறுவனங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
ஜூன் 09 21:10

முகமாலையில் போர்க்கால மனிதப் புதைகுழி- எலும்புக்கூடுகள் மீட்பு

(கிளிநொச்சி, ஈழம்) தமிழர் தாயகமான யாழ்ப்பாணம் முகமாலைப் பிரதேசத்தில் போர்க்கால மனித எலும்புக்கூடுகளென அடையாளம் காணப்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறைவு செய்யப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் மேலும் மனித எச்சங்கள், மனித எலும்புகள் அடையாளம் காணப்பட்டால் மீள ஆரம்பிக்கப்படும் என இலங்கைப் பொலிசார் தெரிவிக்கின்றனர். குறித்த பகுதியில் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி த.சரவணராஜா முன்னிலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. மூன்றாம் நாள் அகழ்வு பணிகள் இன்று செவ்வாயக்கிழமை இடம்பெற்றது. இன்று புதிதாக மனித எச்சங்கள் அடையாளம் காணப்படாததை அடுத்து அகழ்வு பணிகள் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
ஜூன் 08 20:01

நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்களில் அரச அதிகாரிகள்

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத் தேர்தலில், அரச அதிகாரிகள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகப் பல முறைப்பாடுகள் பொது அமைப்புகளினால் முன்வைக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர்கள்; பலருக்கும் எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கும் தற்போது கடமையில் உள்ள அரச அதிகாரிகள் பலர் தேர்தல் பிரச்சாரங்களுக்கு உதவியளிப்பதாகவும் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேசிய சமதானப் பேரவை, மாற்றுக்கொள்கை மையம் ஆகிய அரசார்பற்ற நிறுவனங்கள் இவ்வாறு தமது முறைப்பாட்டை இலங்கைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முன் வைத்துள்ளன.
ஜூன் 07 22:42

நாடாளுமன்றத் தேர்தலைக் கண்காணிக்க சர்வதேசக் கண்காணிப்பாளர்கள் அழைக்கப்படுவார்களா?

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இரண்டாம்வரத்தில் வரவுள்ள சனிக்கிழமை நடைபெறுமென இலங்கைச் சுயாதீனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தகவல்கள் கூறுகின்றன. தேர்தலை எப்போது நடத்துவது என்பது தொடர்பான திகதி இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. ஆனாலும் இன்னும் சில நாட்களுக்குள் திகதி அறிவிக்கப்பட்டு வடும் என்றும் ஓகஸ்ட் மாத நடுப் பகுதியிலேயே தேர்தலை நடத்துவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் அந்தத் தகவல்கள் கூறுகின்றன.
ஜூன் 05 22:02

நாடாளுமன்றத் தேர்தலில் சஜித் அணி போட்டியிட முடியுமா? நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

(வவுனியா, ஈழம்) சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அணியின் வேட்புமனுக்களை நிராகரிக்குமாறு கோரி கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் அன்னம் சின்னத்தில் போட்டியிடவுள்ள சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அணியின் உறுப்பினர்கள் பலர் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் என்பதோடு கட்சியின் மத்திய குழுவிலும் அங்கம் வகித்திருந்தனர்.
ஜூன் 01 23:38

நாடாளுமன்றத் தேர்தல்- புதிய திகதியைத் தீர்மானிப்பதில் இழுபறி

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத் தேர்தல்களை நடத்துவதற்காக பல்வேறு முயற்சிகள் இடம்பெற்று வரும் நிலையில், சுகாதாரத் திணைக்களத்தின் ஆலோசனையோடு நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியுமென இலங்கைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய கொழும்பில் இன்று திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தேர்தலுக்கான திகதியை தீர்மானிப்பதில் சட்டச் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், அந்தச் சட்டச் சிக்கல் முடிவுக்கு வந்த பின்னர் உடனடியாகவே தேர்தலுக்கான புதிய திகதியை அறிவிக்க முடியும் என்றும் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
மே 29 16:22

நாடாளுமன்றத் தேர்தல் மேலும் மூன்று மாதங்கள் ஒத்திவைக்கப்படலாம்

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான சர்ச்சை தொடர்ந்து செல்கிறது. தோ்தலை நடத்த மேலும் மூன்று மாதங்கள் வரை ஒத்திவைக்கப்படக் கூடிய நிலை காணப்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கருத்து வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை இன்று எட்டாவது நாளகவும் நடைபெற்ற நிலையில் அந்த விசாரணை மேலும் நீடிக்கப்படலாமென அமைச்சர்கள் சிலர் சந்தேகம் வெளியிட்டிருந்த நிலையிலேயே தேர்தல் மேலும் மூன்று மாதங்கள் வரை பிற்போடப்படலாமென கோட்டாபய ராஜபக்ச கூறியதாக அறிய முடிகிறது.
மே 26 23:03

ஆறுமுகன் தொண்டமான் கொழும்பில் காலமானார்

(வவுனியா, ஈழம்) இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் மகிந்த ராஜபக்ச, கோட்டபாய ராஜபக்ச ஆகியோரை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சி அரசாங்கத்தின் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் இன்று செவ்வாய்க்கிழமை இரவு காலமாகிவிட்டார். கொழும்பின் புநகர் பகுதியான தலங்கம பிரதேசத்தில் உள்ள அமைச்சருக்குரிய உத்தியோகபூர்வ இல்லத்தில் மயங்கி விழுந்த நிலையில் தலங்கம பிரதேச வைத்தியசாலையில் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் அனுமதித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக அவரது அமைச்சின் செயலாளர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
மே 25 23:45

கொழும்பு, கம்பகா மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு- போக்குவரத்துகள் இல்லை

(வவுனியா, ஈழம்) இரண்டு மாதங்களின் பின்னர் நாளை செவ்வாய்க்கிழமை முதல் கொழும்பு, கம்பகா ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கச் சட்டம் தளர்த்தப்படுகின்றது. கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த இலங்கை முழுவதிலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுப் பின்னர் கொழும்பு, கம்பகா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில், தளர்த்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் நாளை ஊரடங்குச் சட்டத் தளர்த்தப்பட்டாலும் கொழும்பில் இருந்து கம்பகா தவிர்ந்த ஏனைய வெளி மாட்டங்களுக்கு எவரும் செல்ல முடியாதென்றும் போக்குவரத்துகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருக்கும் எனவும் அரசாங்கம் அறிவித்தள்ளது.
மே 23 23:06

கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் ஆய்வுகளை மேற்கொள்ள இராணுவ அதிகாரி தலைமையில் செயலணி

(மட்டக்களப்பு, ஈழம் ) கிழக்கு மாகாணத்தில் தொல்லியல் ஆய்வு என்ற போர்வையில் தமிழ் பேசும் மக்களின் தாயகப் பிரதேசங்களை அபகரிக்கும் நோக்கில் இலங்கைப் பாதுகாப்பு படைகளின் பிரதானி மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன தலைமையில். விசேட செயலணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் ஏலவே சிங்களக் குடியேற்றங்கள் செய்யப்பட்டு பௌத்த விகாரைகளும் கட்டுப்பட்டுள்ள நிலையில் இந்த விசேட செயலணி குறித்து சந்தேகம் எழுந்துள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு இணை;ப்பாளர் தா்மலிங்கம் சுரேஸ். தமிழ்த தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் மற்றும் கிழக்கு மாகாணத்தில் உள்ள பொது அமைப்புகள் குற்றம் சுமத்தியுள்ளன.