நிரல்
டிச. 22 20:55

ஜெனீவா 30/1 தீர்மானத்திற்கு மீண்டும் சாயம் பூச முற்படும் அரசசார்பற்ற நிறுவனங்கள்

(மட்டக்களப்பு, ஈழம் ) கொழும்பை மையமாகக் கொண்டு செயற்பட்டு வரும் மாற்றுக்கொள்கை மையம் (Centre for Policy Alternatives-CPA) மற்றும் தேசிய சமாதானப் பேரவை (National Peace Council-NPC) போன்ற சில தன்னார்வ நிறுவனங்கள் சர்வதேச சக்திகளோடு சேர்ந்து 2015 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சவின் ஆட்சியைக் கவிழ்த்து மைத்திரி - ரணில் அரசாங்கத்தை அமைப்பதற்குப் பாடுபட்டிருந்தன என்பது எல்லோருக்கும் தெரிந்த கதை. சிங்கள அரசியல்வாதிகள் பலர் அவ்வாறு குற்றம் சுமத்தியுமிருந்தனர். இந்த அமைப்புகள் 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவா மனித உரிமைச் சபையில் 30/1 தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கும் இலங்கை அரசாங்கம் அதற்கு இணை அணுசரனை வழங்குவதற்கும் (co-sponsorship) ஆதரவளித்தவை என்பதும் தெரிந்ததே.
டிச. 20 00:26

தமிழ் பேசும் மக்களின் திருகோணமலை தற்காலிகமாகத் தப்பியது

(யாழ்ப்பாணம், ஈழம்) வடக்குக் கிழக்கு தாயகப் பிரதேசத்தின் திருகோணமலை நகரை கொழும்பு நகரின் உப நகரமாக மாற்றுவது உட்பட இலங்கைத் தீவின் அபிவிருத்தித் திட்டங்களை மையமாகக் கொண்ட அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனம் (Millennium Challenge Cooperation -MCC) இலங்கையோடு செய்யவிருந்த ஒப்பந்தத்தைக் கடந்தவாரம் ரத்துச் செய்துள்ளது. 480 மில்லியன் டொலர் நிதி உதவிக்கான இந்த ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடுவது தொடர்பாக 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கையோடு இணக்கம் ஏற்பட்டிருந்தது. ஆனால் கோட்டாபய ராஜபக்ச 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடும் ஏற்பாட்டில் காலதாமதம் ஏற்பட்டது.
டிச. 16 17:20

ஜெனீவாவை நோக்கிய தமிழர் தரப்பின் "கண்மூடிப் பூனை" அரசியல்

(யாழ்ப்பாணம், ஈழம்) சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இயங்கும் ஐ.நா. மனித உரிமைச் சபையில், ஒபாமாவின் காலத்து அமெரிக்க அரசினால், மேற்குலகின் இதர பத்து நாடுகளின் அனுசரணையுடன், மைத்திரி-ரணில் அரசாங்கத்துடன் இணைந்த வகையில் மொத்தம் பன்னிரண்டு நாடுகளால் 2015 ஒக்ரோபரில் முன்வைக்கப்பட்டதே முப்பது/ஒன்று (30/1) என்ற தீர்மானம். சபையில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்தத் தீர்மானம் அமெரிக்காவும் இலங்கையும் கருத்தொருமித்த கட்டமைப்பு (consensual framework) என்று அழைக்கப்பட்டது. இரண்டு வருடங்களுக்குள் சாதித்திருக்கவேண்டியவற்றை மைத்திரி-ரணில் அரசு செய்துமுடிக்கத் தவறியதால் 2017 ஆம் ஆண்டு மார்ச்சில் ஒரு முறையும் (34/1), 2019 மார்ச்சில் ஒரு முறையுமாக (40/1) ஏற்கனவே இரு முறை ரொல்-ஓவர் (roll-over) முறையில் இது நீடிக்கப்பட்டிருந்தது.
டிச. 14 21:51

ஜெனீவா மனித உரிமைச் சபை அமர்வுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்த ஏற்பாடு

(வவுனியா, ஈழம்) ஜெனீவா மனித உரிமைச் சபை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் கூடுவதற்கு முன்னர் இலங்கைத் தீவில் வடக்குக் கிழக்குத் தாயகப் பகுதிகள் உள்ளிட்ட அனைத்து மாகாணங்களுக்குமான தேர்தலை நடத்த ராஜபக்ச அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன. இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று திங்கட்கிழமை கொழும்பு காலிமுகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் நடத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன், மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்குரிய யோசனையை முன்வைத்துள்ளார்.
டிச. 11 13:43

இலங்கைப் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதியும் இந்தோ- பசுபிக் நலனும்

(வவுனியா, ஈழம்) இலங்கைப் பாதுகாப்பு அமைச்சுக்கு அதிகளவு நிதி ஒதுக்கப்படுவதாக தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் நடைபெறும் வரவுசெலவுத் திட்ட அறிக்கை தொடர்பான விவாதத்தில் குற்றம் சுமத்தி வருகின்றன. குறிப்பாக 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான கடந்த பத்து ஆண்டுகளில் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழ்த்தேசியக் கட்சிகளின் வார்த்தையில் சொல்வதானால் போர் முடிவுறுத்தப்பட்ட பின்னரும் பாதுகாப்பு அமைச்சுக்கு ஏன் இவ்வளவு நிதியென்று மக்களும் கேட்கின்றனர்.
டிச. 09 22:11

தமிழ் அரசியல் கைதிகள் உருக்கமான வேண்டுகோள்

(வவுனியா, ஈழம்) இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், சிறைச்சாலைகளுக்குள் கொரோனா தொற்று பரவுமென ராஜபக்ச அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் இடநெருக்கடிக்குத் தீர்வு காணும் திட்டங்கள் எதுவுமே அரசாங்கத்திடம் இருப்பதாகத் தெரியவில்லையென பிரதான எதிர்க்கட்சியான ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ள நிலையில், கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலைக்கு உதவிபுரியுமாறு இலங்கை ஒற்றையாட்சி அரசின் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர். செய்தி ஊடகங்களுக்கு இன்று புதன்கிழமை இரவு அனுப்பியுள்ள மின் அஞ்சலில் இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
டிச. 08 22:19

தமிழ் அரசியல் கைதிகள் என்று எவருமேயில்லையாம்

(வவுனியா, ஈழம்) போரின் போதும் போரின் பின்னரான சூழலிலும் வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகப் பிரதேசங்கள் மற்றும் கொழும்பு, மலையகம் ஆகிய பகுதிகளில் இலங்கைப் பொலிஸார், இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் பலர் இன்றுவரை விடுதலை செய்யப்படவில்லை. ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைப் போராட்டத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இவர்களை தமிழ் அரசியல் கைதிகள் என்றே பலரும் கூறி வருகின்றனர். ஜெனீவா மனித உரிமைச் சபை உள்ளிட்ட சர்வதேச பொது அமைப்புகளும் தமிழ் அரசியல் கைதிகள் என்று கூறிவரும் நிலையில், இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகள் என எவருமே இல்லையென அமைச்சரவையின் இணைப் பேச்சாளர் உதய கம்பன்வில கூறியுள்ளார்.
டிச. 03 20:08

வடமாகாணத்தில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் அவலம்

தமிழர் தாயகம் வடமாகாணத்தில் புரவி புயல் தாக்கத்தினால் பெருமளவு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். போரினால் பாதிக்கப்பட்டு மீள் குடியேறிய மக்களே கூடுதலாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் 37ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆரம்ப மதிப்பீடுகள் கூறுகின்றன. யாழ். மாவட்டத்தில் தற்போதுவரை ஒன்பதாயிரத்து 346 குடும்பங்களைச் சேர்ந்த 31 ஆயிரத்து 703 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜா கூறுகிறார். பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாமெனவும் முழுமையான மதிப்பீடுகள் செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
டிச. 02 14:46

இலங்கை அரசு விடுதலைப் புலிகளை ஐ.நா. பயங்கரவாத பட்டியலில் சேர்க்கவேண்டும் என்கிறார் குணரட்ணா

(வவுனியா, ஈழம்) ஜே.வி.பியின் முடக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தைப் போல் அல்லாமல் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மீளுருவாக்கப்படுவதற்கு வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும், குறிப்பாக அவ்வியக்கத்தின் தலைவர் வே பிரபாகரன் அவர்களைப் போற்றுகின்ற மரபு புலம்பெயர் தமிழர்களாலும் அமைப்புகளாலும் முன்னெடுக்கப்படுவதால், இலங்கைத் தீவுக்குள்ளும் அடுத்த தலைமுறையினர் தீவிரமயமாக்கப்படும் வாய்ப்பு அதிகமாகியிருப்பதாகவும், அதனால் ஐ.நா. பாதுகாப்புச் சபையின் 1373 ஆம் தீர்மானத்துக்குள் அவ்வியக்கத்தை உட்படுத்தி உலகளாவியரீதியில் பயங்கரவாத பட்டியலில் சேர்த்துவிடுவதற்கு இலங்கை அரசு உடனடியாக ஆவன செய்தாக வேண்டும் என்று சிங்களவரும் பிரபல பயங்கரவாத பேராசிரியருமான றொஹான் குணரட்ணா தெரிவித்துள்ளார்.
நவ. 29 20:26

நினைவுத் திறத்தை நிலைநாட்ட ஈழத் தமிழர்களுக்கு வினைத்திறன் தேவை

(வவுனியா, ஈழம்) மாவீரர் நாளைப் பகிரங்கக் கூட்டு நினைவெழுச்சியாக இல்லாது மாற்றிவிடவேண்டும் என்று இலங்கை ஒற்றையாட்சி அரசு கங்கணம் கட்டி நிற்கிறது. நினைவேந்தலை நீர்த்துப்போகச்செய்யும் இந்தச் செயற்பாட்டில் உலக, பிராந்திய வல்லாதிக்கங்களும் இணைந்துள்ளன. பல தரப்புகளால் பல அடுக்குகளில் நகர்த்தப்படும் இந்த நகர்வுகளை ஈழத்தமிழர்கள் உணர்வுரீதியான முனைப்புகளூடாக மட்டும் முறியடித்துவிடமுடியாது. தர்க்கீக அடிப்படையில் நினைவுத்திறத்தை (memorialisation) முன்னெடுக்கவேண்டும். இதைச் செய்வதில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு முக்கியமான பொறுப்பு இருக்கிறது. இந்தப் பொறுப்பை மாவீரர் நினைவு நாளில் இவர்கள் சரிவரச்செய்திருக்கிறார்களா என்பதை உணர்வுத் தளத்துக்கு அப்பால் அறிவுரீதியாக ஆராயவேண்டியிருக்கிறது.