செய்தி: நிரல்
டிச. 20 00:26

தமிழ் பேசும் மக்களின் திருகோணமலை தற்காலிகமாகத் தப்பியது

(யாழ்ப்பாணம், ஈழம்) வடக்குக் கிழக்கு தாயகப் பிரதேசத்தின் திருகோணமலை நகரை கொழும்பு நகரின் உப நகரமாக மாற்றுவது உட்பட இலங்கைத் தீவின் அபிவிருத்தித் திட்டங்களை மையமாகக் கொண்ட அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனம் (Millennium Challenge Cooperation -MCC) இலங்கையோடு செய்யவிருந்த ஒப்பந்தத்தைக் கடந்தவாரம் ரத்துச் செய்துள்ளது. 480 மில்லியன் டொலர் நிதி உதவிக்கான இந்த ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடுவது தொடர்பாக 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கையோடு இணக்கம் ஏற்பட்டிருந்தது. ஆனால் கோட்டாபய ராஜபக்ச 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடும் ஏற்பாட்டில் காலதாமதம் ஏற்பட்டது.
டிச. 14 21:51

ஜெனீவா மனித உரிமைச் சபை அமர்வுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்த ஏற்பாடு

(வவுனியா, ஈழம்) ஜெனீவா மனித உரிமைச் சபை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் கூடுவதற்கு முன்னர் இலங்கைத் தீவில் வடக்குக் கிழக்குத் தாயகப் பகுதிகள் உள்ளிட்ட அனைத்து மாகாணங்களுக்குமான தேர்தலை நடத்த ராஜபக்ச அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன. இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று திங்கட்கிழமை கொழும்பு காலிமுகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் நடத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன், மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்குரிய யோசனையை முன்வைத்துள்ளார்.
டிச. 11 13:43

இலங்கைப் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதியும் இந்தோ- பசுபிக் நலனும்

(வவுனியா, ஈழம்) இலங்கைப் பாதுகாப்பு அமைச்சுக்கு அதிகளவு நிதி ஒதுக்கப்படுவதாக தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் நடைபெறும் வரவுசெலவுத் திட்ட அறிக்கை தொடர்பான விவாதத்தில் குற்றம் சுமத்தி வருகின்றன. குறிப்பாக 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான கடந்த பத்து ஆண்டுகளில் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழ்த்தேசியக் கட்சிகளின் வார்த்தையில் சொல்வதானால் போர் முடிவுறுத்தப்பட்ட பின்னரும் பாதுகாப்பு அமைச்சுக்கு ஏன் இவ்வளவு நிதியென்று மக்களும் கேட்கின்றனர்.
டிச. 09 22:11

தமிழ் அரசியல் கைதிகள் உருக்கமான வேண்டுகோள்

(வவுனியா, ஈழம்) இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், சிறைச்சாலைகளுக்குள் கொரோனா தொற்று பரவுமென ராஜபக்ச அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் இடநெருக்கடிக்குத் தீர்வு காணும் திட்டங்கள் எதுவுமே அரசாங்கத்திடம் இருப்பதாகத் தெரியவில்லையென பிரதான எதிர்க்கட்சியான ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ள நிலையில், கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலைக்கு உதவிபுரியுமாறு இலங்கை ஒற்றையாட்சி அரசின் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர். செய்தி ஊடகங்களுக்கு இன்று புதன்கிழமை இரவு அனுப்பியுள்ள மின் அஞ்சலில் இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
டிச. 08 22:19

தமிழ் அரசியல் கைதிகள் என்று எவருமேயில்லையாம்

(வவுனியா, ஈழம்) போரின் போதும் போரின் பின்னரான சூழலிலும் வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகப் பிரதேசங்கள் மற்றும் கொழும்பு, மலையகம் ஆகிய பகுதிகளில் இலங்கைப் பொலிஸார், இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் பலர் இன்றுவரை விடுதலை செய்யப்படவில்லை. ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைப் போராட்டத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இவர்களை தமிழ் அரசியல் கைதிகள் என்றே பலரும் கூறி வருகின்றனர். ஜெனீவா மனித உரிமைச் சபை உள்ளிட்ட சர்வதேச பொது அமைப்புகளும் தமிழ் அரசியல் கைதிகள் என்று கூறிவரும் நிலையில், இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகள் என எவருமே இல்லையென அமைச்சரவையின் இணைப் பேச்சாளர் உதய கம்பன்வில கூறியுள்ளார்.
டிச. 03 20:08

வடமாகாணத்தில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் அவலம்

தமிழர் தாயகம் வடமாகாணத்தில் புரவி புயல் தாக்கத்தினால் பெருமளவு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். போரினால் பாதிக்கப்பட்டு மீள் குடியேறிய மக்களே கூடுதலாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் 37ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆரம்ப மதிப்பீடுகள் கூறுகின்றன. யாழ். மாவட்டத்தில் தற்போதுவரை ஒன்பதாயிரத்து 346 குடும்பங்களைச் சேர்ந்த 31 ஆயிரத்து 703 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜா கூறுகிறார். பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாமெனவும் முழுமையான மதிப்பீடுகள் செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
டிச. 02 14:46

இலங்கை அரசு விடுதலைப் புலிகளை ஐ.நா. பயங்கரவாத பட்டியலில் சேர்க்கவேண்டும் என்கிறார் குணரட்ணா

(வவுனியா, ஈழம்) ஜே.வி.பியின் முடக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தைப் போல் அல்லாமல் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மீளுருவாக்கப்படுவதற்கு வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும், குறிப்பாக அவ்வியக்கத்தின் தலைவர் வே பிரபாகரன் அவர்களைப் போற்றுகின்ற மரபு புலம்பெயர் தமிழர்களாலும் அமைப்புகளாலும் முன்னெடுக்கப்படுவதால், இலங்கைத் தீவுக்குள்ளும் அடுத்த தலைமுறையினர் தீவிரமயமாக்கப்படும் வாய்ப்பு அதிகமாகியிருப்பதாகவும், அதனால் ஐ.நா. பாதுகாப்புச் சபையின் 1373 ஆம் தீர்மானத்துக்குள் அவ்வியக்கத்தை உட்படுத்தி உலகளாவியரீதியில் பயங்கரவாத பட்டியலில் சேர்த்துவிடுவதற்கு இலங்கை அரசு உடனடியாக ஆவன செய்தாக வேண்டும் என்று சிங்களவரும் பிரபல பயங்கரவாத பேராசிரியருமான றொஹான் குணரட்ணா தெரிவித்துள்ளார்.
நவ. 27 22:47

முப்படையினரின் அச்சுறுத்தல், தடைகளுக்கு மத்தியில் மாவீரர் நாள் நினைவேந்தல்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் முப்படையினரின் தடைகளுக்கு மத்தியிலும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை மக்கள் இன்று வெள்ளிக்கிழமை மாலை 6.05க்கு சுடரேற்றி உணர்வுபூர்வமாக அனுஷ்டித்துள்ளனர். சைவக் குருமார், அருட்தந்தையர்கள் உட்பட முக்கிய பிரமுகர்கள் தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இராணுவத்தின் கடுமையான அச்சறுத்தல்களுக்கு மத்தியில் தங்கள் இல்லங்கள், அலுவலகங்கள், பொதுக் கட்டங்களுக்கு முன்பாக சுடரேற்றினர். இதேவேளை, யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள மார்ட்டீனார் குருமடத்துக்கு முன்பாக சுடரேற்றிய குற்றச்சாட்டில், அந்தக் குருமடத்தின் பணிப்பாளர் அருட்தந்தை பாஸ்கரன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று வெள்ளிக்கிழமை இரவு அருட்தந்தை கைது செய்யப்பட்டதாக யாழ் ஆயர் இல்லம் தெரிவித்துள்ளது.
நவ. 21 22:47

முப்படையினருக்கும் கூடுதல் நிதி ஒதுக்கீட்டு- பாராளுமன்றத்தில் அங்கீகாரம்

(வவுனியா, ஈழம்) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சி அரசாங்கத்தின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 99 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச ஆகியோரை மையமாகக் கொண்ட இந்த அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தில், பாதுகாப்பு அமைச்சுக்கு 35ஆயிரத்து 515 கோடியே 91 இலச்த்து 50ஆயிரம் ருபா நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வரவு செலவுத் திட்டம் இன்று சனிக்கிழமை மாலை இலங்கைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
நவ. 10 22:56

பைடன் நிர்வாகம் கோட்டாபய அரசாங்கத்தை அரவனைக்கும்- இந்தியப் பத்திரிகையாளர் பாலச்சந்திரன்

(வவுனியா, ஈழம்) கோட்டபாய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்துடன் அமெரிக்க அரசாங்கம் இறங்கிச் செல்லுமெனவும் இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் சீன ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த இலங்கையை அரவனைக்க வேண்டியதொரு தேவை அமெரிக்காவுக்கு உண்டெனவும் எமது கூர்மைச் செய்தித்தளம் தொடர்ச்சியாகச் செய்திக் கட்டுரைகளை எழுதிவருகின்றது. கடந்த 28ஆம் திகதி கொழும்புக்கு வந்து சென்ற அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைப் பொம்பியோ ஒற்றை ஆட்சி இலங்கையை ஆரத்தழுவிச் சென்றிருக்கிறாரெனவும் கூர்மைச் செய்தித் தளத்தில் கட்டுரை ஒன்று பிரசுரமாகியிருந்தது.