நிரல்
ஜூன் 12 23:43

தமிழர்கள் 24 பேர் தமிழ் நாட்டின் மதுரை நகரில் கைது

(கிளிநொச்சி, ஈழம்) வட மாகாண மாவட்டங்களைச் சேர்ந்த 27 தமிழர்கள் கடந்த 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை இந்தியாவின் தமிழ் நாட்டு மாநிலம் மதுரை நகரில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர்களில் இரண்டு பெண்கள் உட்பட ஒரு குழந்தை அடங்குவதாகவும் அவர்கள் இந்தியாவின் குடியகல்வுக் குடிவரவுச் சட்டங்களை மீறி கடவுச்சீட்டுகள் இன்றி இந்தியாவிற்குள் நுழைந்த குற்றச்சாட்டில் இந்தியா கியு பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
ஜூன் 12 21:15

மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் சந்தையாகவும் மாறவுள்ள கொழும்பு போட் சிற்றி

(வவுனியா, ஈழம்) கொழும்பு போட் சிற்றியெனப்படும் கொழும்பு சர்வதேச வர்த்தக நிதி நகரத்தைச் சீனா வடிவமைப்பதால், எதிர்வரும் காலங்களில் இலங்கை சீனாவின் பக்கமே முற்று முழுதாகச் சாய்ந்துவிடுமென ஈழத்தமிழர்கள் பலரும் எதிர்பார்க்கின்றனர். நம்புகின்றனர். ஆனால் சிங்கள மக்கள் அவ்வாறான சிந்தனையில் இல்லையெனலாம். இலங்கையின் இறைமை சீனாவிடம் சிறிதளவேனும் பங்கிடப்படக் கூடாது. ஆனால் சீனாவிடம் உதவிகளைப் பெற வேண்டும் என்ற பகிரங்க நோக்கமே சிங்கள ஆட்சியாளர்கள் உள்ளிட்ட அனைத்துச் சிங்கள மக்களிடமும் விஞ்சிக் காணப்படுகின்றன. இந்த உள்நோக்கமே இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போட் சிற்றிக்கான பொருளாதார ஆணைக்குழுச் சட்ட மூலத்திற்குச் சிங்கள எதிர்க்கட்சிகள் எதிர்ப்புடன் கூடிய மறைமுக ஆதரவை வழங்கியிருந்ததாகவும் கூறலாம்.
ஜூன் 11 21:01

மன்னார் கடற்கரையில் ஒதுங்கும் பிளாஸ்ரிக் பொருட்கள்

(மன்னார், ஈழம் ) இலங்கையின் தமிழர் தாயகமான வட மாகாணம் மன்னார் மாவட்டத்தின் கரையோரக் தமிழ் கிராமங்களில் கடந்த புதன்கிழமை தொடக்கம் பிளாஸ்டிக் மூலப் பொருட்கள் மற்றும் குருணை வடிவிலான வெண்ணிறப் பிளாஸ்டிக் பொருட்கள் பெருமளவு கரையொதுங்கி வருவதாக உள்ளூர் மீனவர்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தனர். கொழும்பு கடலில் மூழ்கிவரும் எம். வி எக்ஸ்பிரஸ் பேர்ல் (MV- X Press Pearl) எனும் சரக்கு கப்பலில் எடுத்து வரப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் பிளாஸ்ரிக் மூலப் பொருட்களே மன்னார் மாவட்டத்தின் மீனவக் கிராமங்களில் கரையொதுங்குவதாக மீனவர்கள் கூர்மை செய்தித் தளத்திற்கு மேலும் தெரிவித்தனர்.
ஜூன் 10 23:25

ரணில் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகிக்க ராஜபக்ச அரசாங்கம் திரைமறைவில் ஏற்பாடா?

(வவுனியா, ஈழம்) ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராவதற்குரிய ஏற்பாடுகளை ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன அரசாங்கம் திரைமறைவில் மேற்கொண்டு வருவதாக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது. எதிர்வரும் 22 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை நாடாளுமன்ற உறுப்பினராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்கவுள்ள நிலையில் இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச தொடர்ந்தும் செயற்படுவாரென்றும் செவ்வாய்க் கிழமை பெரும்பான்மை உறுப்பினர்களின் கையொப்பத்துடன் பிரேரணை ஒன்றை சபாநாயகரிடம் கையளிக்க ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்வதாகவும் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.
ஜூன் 09 22:58

கொவிட் நோய்தாக்கம் ஒரு மாதத்தில் 28 சதவீதத்தால் அதிகரிப்பு- மருத்துவர் சங்கம் எச்சரிக்கை

(வவுனியா, ஈழம்) கொவிட் 19 நோய்த் தொற்று இலங்கையில் கடந்த ஒரு மாதத்தில் 28 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை மருத்துவர் சங்கத் தலைவர் விசேட மருத்துவ நிபுணர் பத்தமா குணரட்ன கொழும்பில் இன்று புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். சென்ற ஏழாம் திகதியில் தொற்றின் வேகம் அதிகமாகக் காணப்பட்டதாகவும் இந்த ஆபத்து மேலும் தொடரக்கூடிய நிலமை இருப்பதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
ஜூன் 08 23:36

பாராளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராகிறார்- ஆனால் சஜித் அணி மறுப்பு

(வவுனியா, ஈழம்) எதிர்க்கட்சித் தலைவராக ரணில் விக்கிரமசிங்கை அனுமதிக்க முடியாதென்றும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் எவரும் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணையப் போவதில்லையெனவும் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ஆனால் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலரோடு, ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் 15 பேர் இன்று செவ்வாய்க்கிழமை கலந்துரையாடியுள்ளதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
ஜூன் 07 23:55

ஜேர்மனி பேரம் பேசியுள்ளதா? பிரித்தானியாவுக்குப் பின்னரான ஐரோப்பிய ஒன்றிய அரசியல் சூழ்ச்சியா?

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை தொடர்பான விவகாரத்தைக் கையாள்வதற்கான ஜெனீவா மனித உரிமைச் சபையின் கருக்குழு நாடுகள் பட்டியலில் (Core Group on Sri Lanka) பிரதான அங்கம் வகிக்கும் ஜேர்மன் அரசு இலங்கைக்குச் சாதகமானதொரு போக்கையே பின்பற்றி வருகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்திலும் ஜேர்மனி அங்கம் வகிக்கின்றது. 2009 ஆம் ஆண்டுக்கு முன்னரான அதாவது நோர்வேயின் ஏற்பாட்டில் சமாதானப் பேச்சுக்கள் நடைபெற்றபோது ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகித்திருந்த பிரித்தானியா, ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான அனைத்துச் சூழ்ச்சிகளையும் அன்று வகுத்திருந்தது. தற்போது ஒன்றியத்தில் இருந்து விலகிய நிலையில், ஜேர்மன் அரசு மூலமாக ஈழத்தமிழர் அரசியல் விடுதலைக்கு எதிரான நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
ஜூன் 06 20:46

சிலாவத்துறை, கொண்டச்சிக்குடா, முள்ளிக்குளம் பிரதேசக் காணிகளை மக்களிடம் மீள ஒப்படைக்க மறுப்பு

(மன்னார், ஈழம் ) தமிழர் தாயகமான வட மாகாணம் மன்னார் மாவட்டத்தில் இலங்கை படையினர் வசமுள்ள பொது மக்களின் காணிகளை மீள வழங்குவதற்காக மைத்திரி- ரணில் ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் இலங்கையின் தற்போதைய ராஜபக்ச அரசாங்கத்தினால் காலவரையின்றி கிடப்பில் போடப்பட்டுள்ளதாகப் காணிகளின் உரிமையாளர்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தனர். மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலக பிரிவில் உள்ள சிலாவத்துறை, கொண்டச்சிக்குடா, முள்ளிக்குளம் ,ஆகிய பகுதிகளில் உள்ள தமது காணிகளே இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என காணி உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
ஜூன் 05 22:05

கொவிட் தொற்று- முல்லைத்தீவில் ஒருவர் மரணம்

(முல்லைத்தீவு, ஈழம் ) கொரொனா நோய்த் தாக்கத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதல் முறையாக கடந்த வெள்ளி இரவு ஒருவர் மரணமடைந்துள்ளார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மாணிக்கப்புரம் கிராமத்தைச் சேர்ந்த 44 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே மரணமடைந்ததாக முல்லைத்தீவு மாவட்டச் சுகாதார அதிகாரியொருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார். சிறுநீரகம் பாதிப்பு தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே குறித்த குடும்பஸ்தர் கொரோனா நோய் தொற்றினால் மரணமடைந்ததாக மேற்படி அதிகாரி கூர்மைக்கு மேலும் தெரிவித்தார்.
ஜூன் 04 22:07

கப்பல் நுழைய அனுமதியளித்தமை தொடர்பாக மனுத் தாக்கல்

(வவுனியா, ஈழம்) கொழும்பு துறைமுகக் கடல் பகுதியில் இருந்து சுமார் பத்து கிலோ மீற்றர் தொலைவில் தீக்கிரையாகிய கப்பலுக்கு இலங்கைக் கடல் எல்லைக்குள் வருவதற்கு அனுமதி வழங்கியமை தொடர்பாக விசாரணை நடத்துமாறு வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள் (MV X-Press Pearl) என்ற இந்தக் கப்பல் இலங்கை கடற்பரப்பில் தீக்கிரையாகி கடலில் மூழ்கிக் கொண்டிருக்கின்றமையினால் கொழும்புத் துறைமுகக் கடற்பரப்பான கொழும்பு முகத்துவாரத்தில் இருந்து பாணந்துறை வரையான சுமார் 50 கிலோ மீற்றர் தூரமுடைய கடற்பரப்பு மாசடைந்துள்ளதாகவும் இதனால் பொறுப்புள்ள அதிகாரிகள், மற்றும் அரசியல் தொடர்புள்ள அதிகாரிகள் மீது விசாரணை நடத்துமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.