நிரல்
ஜூலை 02 21:36

அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளையும் ஏன் விடுதலை செய்ய முடியாது? அனந்தி

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவினால் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என பாராளுமன்றத்தில் நிகழ்த்தப்பட்ட உரைக்கு அமைவாகத் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கைதிகளை விடுதலை செய்யமுடியுமாயின், ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளில் உள்ள ராஜபக்ச சகோதரர்களினால் பல வருடங்களாக இலங்கை சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை ஏன் முழுமையாக விடுதலை செய்ய முடியாதென முன்னாள் வட மாகாண சபை அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜூலை 01 21:48

சீன ஆதிக்கம்- பாதுகாக்க பௌத்த தேரர்களுக்கு அழைப்பு

(வவுனியா, ஈழம்) அதிகரித்து வரும் சீனர்களின் செயற்பாட்டிலிருந்து இலங்கைத் தீவைப் பாதுகாக்க பௌத்த மகா சங்கத்தினருக்கும் இலங்கைப் படை வீரர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் இந்த அழைப்பை விடுத்துள்ளார். சீனாவிடம் இருந்து இலங்கையைப் பாதுகாப்பது தொடர்பாக பௌத்த மகாநாயக்கத் தேரர்கள் மற்றும் பாதுகாப்பு உயர் அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளதாகக் கூறிய அவர் இது தொடர்பாக பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்களோடும் பேசவுள்ளதாகவும் கூறினார்.
ஜூன் 30 20:03

மீன்பிடிப் படகுகளை மீள ஒப்படைக்குமாறு ஈழத்தமிழ் மீனவர்கள் கோரிக்கை

(மன்னார், ஈழம் ) இலங்கையில் கடந்த காலங்களில் நிலவிய யுத்த சூழ்நிலைகளினால் இந்தியாவிற்கு கடல் வழியாக இடம்பெயர்ந்த தமிழ் மக்களை ஏற்றிச் சென்ற சுமார் அறுநூறுக்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகள் இந்தியா சுங்க அதிகாரிகள் வசம் உள்ள நிலையில் அதனை மீள வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும் என குறித்த மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கையில் கடந்த 1983 ஆம் ஆண்டு ஜூலை இனக்கலவரம் ஏற்பட்டு நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
ஜூன் 29 21:43

பருத்தித்துறை மருதங்கேணி வீதிப் புனரமைப்பில் ஈடுபட்ட நபர் சீனப் பிரஜை அல்ல- தூதரகம் விளக்கம்

(யாழ்ப்பாணம், ஈழம்) வடமாகாணம் யாழ்ப்பாணம் பருத்தித்துறை மருதங்கேணி வீதிப் புனரமைப்பில் ஈடுபட்டதாகக் கூறப்பட்ட நபர் சீனப் பிரஜை அல்ல என்று தெரியவந்துள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனினால் சீனப் பிரஜை என அடையாளப்படுத்தப்பட்ட நபர், கிழக்கு மாகாணத்தை சேர்ந்த இஸ்லாமியர் என கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் பலருக்கு வேலையில்லை என்றும், ஆனால் சீன பிரஜைகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் சுமந்திரன் சமூக வலைத்தளத்தில் குற்றம் சுமத்தியிருந்தார்.
ஜூன் 28 22:45

கொவிட் நோய்த் தொற்றினால் மடு மாதா பெருநாளில் மக்கள் கலந்துகொள்ளத் தடை

(மன்னார், ஈழம் ) இலங்கையின் வட மாகாணம் மன்னார் மாவட்டம் மடு மாதா திருத்தலத்தின் ஆடி மாத வருடாந்த பெருநாள் எதிர்வரும் இரண்டாம் திகதி நடைபெறும் நிலையில் கொவிட் -19 நோய் தொற்றுக் காரணமாக வெளி மாவட்டப் பக்தர்கள் குறித்த பெருநாளில் கலந்து கொள்வதற்கு அனுமதி இல்லையென மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரன்லி டி மெல் கூர்மை செய்தித் தளத்திற்கு தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள மடு மாதா ஆலயத்தின் ஆடி மாத பெருநாள், சென்ற 23 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்து ஆடி மாதம் 2ம் திகதி திருப்பலி மற்றும் திருச்சொரூபப் பவனியுடன் நிறைவடையும்.
ஜூன் 28 18:11

மாந்தை மேற்கு மக்களின் காணிகளை போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயற்சி

(மன்னார், ஈழம் ) வட மாகாணம் மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேசச் செயலகப் பிரிவில் வசிக்கும் பொது மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட காணிகளை வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் போலி ஆவணங்கள் மூலம் உரிமை கோரி அபகரிக்க முற்படுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மேற்படி அரச காணிகளில் அத்துமீறி அதில் உள்ள பெறுமதி வாய்ந்த காட்டு மரங்களையும் காணி அபிவிருத்தி எனும் பெயரில் டோசர் இயந்திரங்கள் மூலம் சட்டவிரோதமாக அழித்து வருவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முறையிடப்பட்டுள்ளது.
ஜூன் 27 23:50

புதிய டெல்டா கொவிட் பிறழ்வு, வேகமாகப் பரவும் அபாயம்

(வவுனியா, ஈழம்) இலங்கைத் தீவில் புதிய டெல்டா கொவிட் பிறழ்வு, மிக வேகமாக பரவும் அபாயமுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையை தவிர்ப்பதற்கு பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டியது அவசியமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். எதிர்காலத்தில் மேலும் பிறழ்வுகள் உருவாகக்கூடும் என தெரிவித்த விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இது தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றால் பாரதூரமான நிலைமையை இலங்கை மக்கள் சந்திக்க நேரிடுமெனவும் கூறினார்.
ஜூன் 26 21:45

ஒற்றையாட்சி பாதுகாக்கப்படும் என்கிறார் ஜனாதிபதி கோட்டாபய

(யாழ்ப்பாணம், ஈழம்) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கை மக்களுக்கு நேற்று வெள்ளிக்கிழமை இரவு இலத்திரனியல் ஊடகங்கள் மூலமாக உரையாற்றியிருந்தார். சுமார் ஒரு மணி நேரமும் பத்து நிமிடங்களும் நிகழ்த்தப்பட்ட அந்த உரையில் தமிழ் மக்கள் என்ற வார்த்தைகளோ, இனப் பிரச்சினைக்கான தீர்வு அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இடம்பெறவிருந்த கலந்துரையாடல் ஒத்திவைக்கப்பட்டமை பற்றியோ எதுவுமே பேசவில்லை. அத்துடன் ஐரோப்பிய ஒன்றியம் விதிக்கவுள்ள ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகைக்கான தடைகள் பற்றியோ, ஜெனீவா மனித உரிமைச் சபையின் தீர்மானம் குறித்தோ அவர் எதுவுமே கூறவில்லை.
ஜூன் 25 23:55

மன்னாரில் இரு கிராமசேவகர் பிரிவுகள் முடக்கம்

(மன்னார், ஈழம் ) வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் கொவிட்-19 நோய்த் தொற்று அதி தீவிரமாக பரவிவரும் நிலையில், தலைமன்னார் பியர் மேற்கு மற்றும் கிழக்கு ஆகிய இரண்டு கிராமசேவையாளர் பிரிவுகளும் இன்று வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் தர்மராஜன் வினோதன் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார். தலைமன்னார் பியர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொவிட்-19 நோய்த் தொற்றுடன் 33 பேர்கள் அடையாளம் காணப்பட்டனர். அத்துடன் கடந்த புதன் மற்றும் வியாழன் ஆகிய தினங்களில் சுகாதார அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட 80 பி.சிஆர் பரிசோதனைகளில் தலைமன்னார் பியர் பகுதிகளைச் சேர்ந்த 29 பேர்களுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது.
ஜூன் 25 23:13

றிஷாத் பதியூதீன் கைது தொடர்பான விசாரணைகளில் இருந்து தொடராக விலகும் நீதியரசர்கள்

(மன்னார், ஈழம் ) றிஷாத் பதியூதீன் மற்றும் அவர் சகோதரர் றியாஜ் பதியூதீன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களைப் பரிசீலிக்கும் இலங்கை உயர் நீதிமன்ற நீதியரசர் குழாமில் இருந்து இரண்டு உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஏலவே விலகியுள்ள நிலையில் குறித்த மனுக்கள் மீதான பரிசீலனையில் இருந்தன. தற்போது நீதியரசர் ஏ.எச்.எம்.ஏ. நவாஸ் விலகியுள்ளார். பதியூதீன் சகோதர்களின் அடிப்படை உரிமை மனுக்களைப் பரிசீலனை செய்வதற்கான அமர்வு கடந்த 23ஆம் திகதி புதன்கிழமை உயர் நீதிமன்றில் நடைபெற்றவேளையே தனது தனிப்பட்ட காரணங்களால் மேற்படி மனுக்கள் தொடர்பான அமர்வில் இருந்து தான் விலகுவதாக நீதியரசர் ஏ.எச்.எம்.ஏ.நவாஸ் தெரிவித்துள்ளார்.