நிரல்
ஓகஸ்ட் 01 18:54

சேதமடைந்த கிராமங்கள், வீதிகள் புனரமைக்கப்படவில்லை- வாகரை இறால்ஓடைக் கிராம மக்கள் கவலை

(மட்டக்களப்பு, ஈழம்) தமிழ் பேசும் மக்களின் தாயகப்பகுதியான மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட இறால்ஓடைக் கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதி நீண்டகாலமாக சேதமடைந்து காணப்படும் பிரதான வீதியை செப்பனிடுமாறு கிராம மக்கள் பலதடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் அரச அதிகாரிகளின் அசமந்தப் போக்கினால் வீதியால் பயணிக்கும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக பிரதேச சபையின் உறுப்பினர் சிறில் அன்டன் தெரிவித்தார். இந்த வீதியால் பயணம் செய்ய முடியாத நிலை காணப்படுகி்ன்றது. மழைக்காலங்களில் நீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடுகளும் ஏற்பட்டுள்ளன.
ஓகஸ்ட் 01 16:12

கள்ளு உட்பட போதைப்பொருள் விற்பனைக்கு மக்கள் எதிர்ப்பு- சமூகத்தை திட்டமிட்டு சீரழிப்பதாகவும் குற்றச்சாட்டு

(மன்னார், ஈழம்) தமிழர் தாயகமான மன்னார் மாந்தை மேற்குப் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாப்பாமோட்டை, ஆக்காட்டிவெளி ஆகிய இரு கிராமங்களில் உள்ள கள்ளு விற்பனை நிலையங்களை அகற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது. அத்துடன் பிரதேசத்தில் போத்தல் கள்ளு விற்பனையை முற்றாகத் தடை செய்யுமாறு வலியுறுத்தியும் ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்ட மக்கள் கோஷம் எழுப்பினர். கிராமங்களில வாழும் இளைஞர்கள் பாடசாலை மாணவர்கள் மத்தியில் குடிப்பழக்கம் உருவாக்கி வருவதாகவும் பாரம்பரிய பண்பாடுகளை சிதைக்கும் நோக்கில், அனுமதியற்ற கள்ளு விற்பனை நிலையங்கள் அமைக்கப்படுவதாகவும் பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இன்று புதன்கிழமை காலை 10 மணிக்கு நெடுங்கண்டல் பிரதான வீதியில் பேரணி ஆரம்பமானது.
ஜூலை 31 15:27

காணிகளை மீள ஒப்படைக்குமாறு முல்லைத்தீவு கோப்பாப்புலவு மக்கள் தொடர் போராட்டம்- பகிரங்கக் கோரிக்கை

(முல்லைத்தீவு, ஈழம்) முல்லைத்தீவு கோப்பாப்புலவு பிரதேசத்தில் இலங்கைப் படையினரால் அபகரிக்கப்பட்ட தமது பாரம்பரியக் காணிகளை கைளிக்குமாறு கடந்த ஐநூற்றிப் 18 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஐநூறு நாட்களையும் தண்டி வீதியில் இருந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், உடனடியாகத் தீர்வு வழங்குமாறு வலியுறுத்தி இன்று செவ்வாய்க்கிழமை, கவனயீர்ப்புப் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலமீட்பு போராட்டம், இன்று ஐநூற்றிப் 18 ஆவது நாளாக கோப்பாப்புலவு பிரதேசத்தில் உள்ள இலங்கை இராணுவ முகாமிற்கு முன்பாக தொடர்ந்து நடைபெறுகின்றது.
ஜூலை 31 09:27

இறக்குமதி செய்து அச்சமான சூழலை ஏற்படுத்தும் இலங்கைப் படையினர்- மக்கள் குற்றச்சாட்டு

(மட்டக்களப்பு, ஈழம்) தமிழர் தாயகத்தில் தேவையற்ற கொதிநிலையை ஏற்படுத்தி, பிரதான அரசியல் சிந்தனையில் இருந்து மக்களைத் திசை திருப்புவதே இலங்கைப் படையினரின் முக்கிய நோக்கம் என அவதானிகள் கூறுகின்றனர். யாழப்பாணம் அராலியில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் மக்கள் குடிமனைகளுக்குள் நடமாடும் மர்ம நபர்களினால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த மர்ம மனிதர்கள் மிகவும் உயரம் குறைந்தவர்கள். பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அவர்களைத் துரத்தினால், ஒரே தடவையில் மதில்கள், வேலிகளினால் ஏறிப் பாய்ந்து தப்பிச் செல்கின்றனர். கறுப்பு உடையணிந்து முகத்திற்கு கறுப்புச் சாயமும் பூசியுள்ளனர். இரவு 7 மணி முதல் இரவு 11 மணி வரையில் மர்ம நபர்களுடைய நடமாட்டம் அதிகமாகக் காணப்படுவதாக மக்கள் கூறுகின்றனர்.
ஜூலை 30 15:25

தாயுடன் இணைந்த நிலையில் குழந்தையின் எலும்புக்கூடும் மீட்பு- அகழ்வுப் பணியாளர்கள் கூறுகின்றனர்

(மன்னார், ஈழம்) வடமாகாணத்தின் மன்னார் நகர நுழைவாசலில் உள்ள இலங்கை அரசாங்கத்தின் சதொச விற்பனை நிலைய வளாகத்தில் உள்ள போர்க்கால மனிதப் புதைகுழியில் இருந்து தாய் மற்றும் குழந்தையின் எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. முதிர்ந்த ஒருவரின் எலும்புக் கூட்டுடன் ஒட்டியிருந்த களிமணல்களை அகற்றியபோது குழந்தைப் பிள்ளையின் சிறிய எலும்புக்கூடு ஒன்றும் இணைந்து காணப்பட்டது. இதனால் தாயும் குழந்தையும் அருகருகே புதைக்கப்பட்டிருக்கலாம் என அகழ்வுப் பணியில் ஈடுபடும் நிபுணர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இன்று திங்கட்கிழமை 43 ஆவது நாளாகவும் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றன. இன்று வரை சுமார் 60 மனித எலும்புக்கூடுகள் மற்றும் பல மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஜூலை 29 23:27

மீட்கப்பட்ட எலும்புக் கூடுகளை மேலதிக ஆய்வுக்காக அமெரிக்காவுக்கு அனுப்ப ஏற்பாடு- அதிகாரிகள் கூறுகின்றனர்

(யாழ்ப்பாணம், ஈழம் ) தமிழர் தாயகமான வடமாகாணத்தின் மன்னார் நகர நுழைவாசலில் உள்ள இலங்கை அரசாங்கத்தின் சதொச கட்டட விற்பனை நிறுவன வளாகத்தில், போர்க்கால மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூட்டுகள். மனித எச்சங்கள், மேலதிக ஆய்வுக்காக அமெரிக்காவின் புளொரிடா மாநிலத்தில் உள்ள எலும்புகள் ஆய்வு கூடம் ஒன்றுக்கு அனுப்பப்படவுள்ளன. மன்னார் நீதிமன்றத்தின் அனுமதியுடன் எலும்புக் கூடுகள் அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் என அகழ்வுப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் கூறுகின்றனர். ரேடியோ கார்பன் ஆய்வுகளை செய்வதற்காக எலும்புக்கூடுகள் உரிய முறைப்படி பொதி செய்யப்பட்டு கொழும்புக்குக் கொண்டு செல்லப்படும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஜூலை 29 14:57

அரசியல் யாப்பு உருவாக்கத்தில் சுமந்திரன், ஜயம்பதி விக்ரமரட்ன பிரதான பங்குதாரர்கள்- அமைச்சர் லக்ஸ்மன்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையின் புதிய அரசியல் யாப்புத் தொடர்பாக பல்வேறு முரண்பட்ட கருத்துக்கள் வெளிவரும் நிலையில், இந்த புதிய யாப்பு உருவாக்க விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரன். ஐ்க்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை ஜனாதிபதி சட்டத்தரணியுமான கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன ஆகிய இருவருமே ஈடுபடுவதாக மைத்திரி- ரணில் அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் என்று கூறி வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனங்களிடம் இருந்து பெருமளவு நிதியை இந்த இருவரும் பெறுவதாகவும் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு விசுவாசமாகச் செயற்படுவதாகவும் மஹிந்த அணியைச் சேர்ந்த 16 உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.
ஜூலை 28 14:37

முல்லைத்தீவில் குடும்பங்களின் விபரங்களை இலங்கைப் படையினர் கோருவதாக முறைப்பாடு- படிவங்களும் கையளிப்பு

(முல்லைத்தீவு, ஈழம்) தமிழர் தாயகமான முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழும் பொதுமக்களிடமும் அங்குள்ள வர்த்தக நிலையங்களிலும் இலங்கை இராணுவத்தினர் தகவல்களை திரட்டி வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இலங்கைப் படையின் 572 ஆவது படைப்பிரிவே இந்த தகவல்களைச் சேகரிப்பதாக மக்கள் கூறுகின்றனர். உடையார் கட்டு, சுதந்திரபுரம், கைவேலி, ரெட்பானா, மாணிக்கபுரம் ஆகிய பிரதேசங்களில் உள்ள வீடுகளுக்குச் செல்லும் இராணுவத்தினர், வீட்டில் வாழும் மக்களின் விபரங்கரளைக் கேட்டுள்ளனர். விண்ணப்பப் படிவம் ஒன்றைக் கையளித்து, அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்குமாறும் இலங்கை இராணுவம் மக்களுக்குக் கட்டளையிட்டுள்ளது.
ஜூலை 28 07:52

எதிர்க்கட்சித் தலைவர் பதவி கூட்டு எதிர்க்கட்சிக்கு வழங்கப்பட வேண்டும்- மஹிந்த அணி கோரிக்கை

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமக்கு வழங்கப்பட வேண்டும் என மஹிந்த ராஜபக்க்ஷவை மையப்படுத்திய கூட்டு எதிர்க்கட்சி மீண்டும் வலியுறுத்தியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் பதவி கூட்டு எதிர்க்கட்சிக்குரியது எனக் கூறி கடந்த ஆண்டும் இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து சென்ற 16 பேர் கூட்டு எதிர்க்கட்சியில் இணைந்ததால், தமது தரப்பில் தற்போது 70 உறுப்பினர்கள் இருப்பதாகவும், ஆகவே எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கூட்டு எதிர்க்கட்சிக்கு வழங்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சம்பந்தன் வகிக்க முடியாதெனவும் தினேஸ் குணவர்த்தன கூறியுள்ளர்.
ஜூலை 27 22:40

கைது செய்யப்பட்ட சைவக் குருக்கள் 12 ஆண்டுகளின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்றதால் விடுதலை

(வவுனியா, ஈழம் ) இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ கொலை முயற்சி வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு 12 ஆண்டுகளுக்கும் மேலாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சைவக் குருக்கள் ஒருவரை கொழும்பு மேல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறீஸ்கந்தராஜ சர்மா என்ற குக்களே விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு கொள்ளுப்பிட்டி பித்தல சந்தி வழியாக கோட்டபய ராஜபக்ச, ஜனாதிபதி செயலகம் நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்தபோது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. 2006ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் கோட்டபய ராஜபக்ச உயிர் தப்பினார். ஆனால் அவரது பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த மூன்று இலங்கைப் படையினர் கொல்லப்பட்டனர்.