செய்தி: நிரல்
செப். 11 21:38

ராஜபக்ச குடும்பத்தை ரணில் காப்பாற்றுகிறார்- சஜித் குற்றச்சாட்டு

(வவுனியா, ஈழம்) சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை வெளிப்படுத்த ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் தயங்குவதாகக் குற்றம் சுமத்தியுள்ள பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் பல விடயங்கள் அதில் உள்ளதாகவும் தெரிவித்திருந்தது. இந்த ஒப்பந்தத்தில் ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்காப் பொதுஸனப் பெரமுனக் கட்சிக்கும் உடன்பாடில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைகளை பொருட்படுத்தாமல், ரணில் விக்கிரமசிங்க பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அடிபணிந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
செப். 07 09:13

ரணில் அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சர்கள் நியமனம்

(வவுனியா, ஈழம்) ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன. முப்பத்து ஐந்து இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியுடன் ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இராஜாங்க அமைச்சர்கள் பதவிக்காக சிறிலங்கா பொதுஜன பெரமுன பரிந்துரைத்த தமது தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியல் ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் சமர்ப்பித்துள்ளதாக பெதுஜன பெரமுனக் கட்சி கூறியுள்ளது.
செப். 05 21:40

சர்வதேச விசாரணைப் பொறிமுறை நிராகரிக்கப்படும்- வெளியுறவு அமைச்சர் அமைச்சர் அலி சப்ரி அறிவிப்பு

(வவுனியா, ஈழம்) போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விசாரணை செய்வதற்கான சர்வதேசப் பொறிமுறையை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாதென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அறிவித்துள்ளார். கொழும்பில் இன்று திங்கட்கிழமை முற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஜெனீவா மனித உரிமைச் சபை அமர்வு தொடர்பாக விளக்கமளித்தபோதே அமைச்சர் அலி சப்ரி இவ்வாறு கூறினார். இலங்கையின் மீது ஜெனீவா மற்றும் சர்வதேச நாடுகளினால் வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் எந்தவொரு தீர்வுகளையும் இலங்கை அரசியல் யாப்புக்கு முரணான நடவடிக்கைகளையும் அரசாங்கம் எதிர்க்கும் என்றும் அமைச்சர் கூறினார்.
செப். 02 22:10

நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்டம் நிறைவேற்றம்

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அடுத்த நான்கு மாதங்களுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் நூற்றுப் பதினைந்து வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்ற ஓகஸ்ட் மாதம் முப்பதாம் திகதி வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது. முப்பத்து ஒராம் திகதி ஆரம்பித்த விவாதம் வெள்ளிக்கிழமை இரண்டாம் திகதி வரை மூன்று நாட்கள் நடைபெற்றன. நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஆதரவாக 120 வாக்குகளும், எதிராக ஐந்து வாக்குகளும் பெறப்பட்டன.
ஓகஸ்ட் 31 09:18

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்

(வவுனியா, ஈழம்) நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைத்தீவுக்கான அவசரகால கடன் சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படவுள்ளது. இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை வியாழக்கிழமை விடுக்கப்படுமென கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுப் பெற்ற கடன்களைச் சுமையாகக் கொண்டுள்ள இலங்கை, நாணய நிதியத்திடமிருந்து மூன்று பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கோரியிருந்தது. அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அவசரகாலக் கடன் உதவிகள் கோரப்பட்டுள்ளதால், அது குறித்துப் பரிசீலிக்கப்பட்டு வருவதாகக் கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.
ஓகஸ்ட் 30 22:09

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சர்வதேச நீதிகோரிப் போராட்டம்- பெருமளவு மக்கள் பங்கேற்பு

(முல்லைத்தீவு) இலங்கைத்தீவில் வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகப் பிரதேசங்களில் இலங்கை இராணுவத்தினரால் 2009 இற்கு முன்னரும் அதன் பின்னரான சூழலிலும் கடத்தப்பட்டும் சரணடைந்தும் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குச் சர்வதேச நீதி கோரி இப் போராட்டம் நடத்தப்பட்டது. வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முன்னெடுத்த போராட்டம் இரண்டாயிரம் நாட்களைத் கடந்த நிலையில் இன்றும் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
ஓகஸ்ட் 30 20:56

கொழும்பில் பேரணி-பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுத் தாக்குதல்

(வவுனியா, ஈழம்) கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்ணீர்ப்புகைக் குண்டுத் தாக்குதல்கள் மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்ட கலகமடக்கும் பொலிஸார், வீதிகளை வழிமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் யுவதிகள் மீது சரமாரியாகத் தாக்கினர். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தியும் அந்தச் சட்டத்தின் கைது செய்யப்பட்ட காலிமுகத் திடல் போராட்டக்காரர்கள் மூன்று பேரையும் விடுதலை செய்யுமாறு வற்புறுத்தியுமே இன்று முற்பகல் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
ஓகஸ்ட் 27 17:20

மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித எலும்புக்கூடுகளை மேலதிக ஆய்வுக்காக அமெரிக்காவுக்கு அனுப்ப ஏற்பாடு

வடமாகாணம் மன்னார் மாவட்டத்தின் திருக்கேதிஸ்வரம் மனித புதைகுழியில் மீட்கப்பட்டு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள மனித எலும்புகள் அடங்கிய பொதிகளை மன்னார் நீதிவான் முன்னிலையில் பிரித்தெடுத்து அமெரிக்க புளொரிடா மாநிலத்திற்குப் பகுப்பாய்வுகுக்கு அனுப்பிவைக்க மன்னார் நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார். மன்னார் திருக்கேதிஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைகள் புதன்கிழமை மன்னார் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. குறித்த வழக்கு விசாரணையின் போதே மன்னார் நீதவான் மேற்படி கட்டளையை வழங்கியுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் தெரிவித்தார்.
ஓகஸ்ட் 25 08:36

நிதியைப் பெறவே தேசிய அரசாங்கம்- எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கும் என்கிறார் பேராசிரியர் நாலக

(வவுனியா, ஈழம்) சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேசத்தின் உதவிகளைப் பெற வேண்டுமானால். சா்வகட்சி அரசாங்கம் அல்லது தேசிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டுமென்ற கருத்துக்கள் கொழும்பில் சிங்கள அரசியல் தலைவா்கள் மத்தியில் அதிகமாகப் பேசப்படுகின்றன. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தேசிய அரசாங்கத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டாலும், அரசாங்கத்துடன் இணையாமல் ஒத்துழைப்பு வழங்குவது குறித்து பரிசீலிப்பதாகக் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. குறிப்பாகச் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளைப் பெறுவதற்கு இலங்கையில் தேசிய அரசாங்கம் ஒன்று இருக்க வேண்டுமென்பதை சஜித் பிரேமதாச உணர்ந்துள்ளதாகவும் அவருடைய கட்சித் தகவல்கள் கூறுகின்றன.
ஓகஸ்ட் 24 21:50

சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகள் ரணில் விக்கிரமசிங்க சந்திப்பு

(வவுனியா, ஈழம்) சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகள் கொழும்பில் சந்திப்புக்களை நடத்தியபோதும், விதிக்கப்பட்ட நிபந்தனைகள் பலவற்றை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள மறுப்பதாக அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் புதன்கிழமை பிற்பகல் நடத்தப்பட்ட உரையாடல்களில் திருப்தி இல்லையென நிதியமைச்சின் தகவல்கள் கூறுகின்றன. கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கமோ, சர்வதேச நாணய நிதியமோ அதிகாரபூர்வமாக ஊடகங்களுக்கு எதுவுமே தெரிவிக்கவில்லை.