நிரல்
ஜன. 16 10:13

இலங்கையுடன் இந்தியா திருகோணமலை அபிவிருத்தி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட ஏற்பாடு

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கைக்குப் பயணம் செய்யவுள்ளார். இரண்டு நாள் பயணத்தில் இலங்கையுடன் இரண்டு புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படுமெனக் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. அமைச்சர் ஜெய்சங்கரின் வருகை உறுதிப்படுதியுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சு இந்தப் பணயம் இரு நாடுகளிடையேயான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்தும் எனக் கூறியுள்ளது.
ஜன. 14 21:07

சர்வதேச நீதியை முற்றாக மறுதலிக்கப்போகும் கனடாவின் தடை

(வவுனியா, ஈழம்) ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்காக நேர்த்தியாக மேற்கொள்ளப்பட வேண்டிய பல காரியங்கள் - கடமைகள் சர்வதேச சமூகத்துக்கு இருக்கும் நிலையில், அவசர அவசரமாகக் குறுக்குவழியில் ராஜபக்ச குடும்பத்தை மாத்திரம் தண்டிப்பதாகக் கூறிக் கொண்டு, இலங்கைக்கு ஆறுதலான சமிக்ஞையைக் கொடுத்திருக்கிறது கனடா. இறுதிப் போரில் ஒன்றரை இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்படுவதையும் பல இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்து அவலப்படுவதையும் ஐக்கிய நாடுகள் சபை தடுக்கத் தவறியது. வன்னியில் இருந்து ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச தொண்டு நிறுவனங்கள் இலங்கை இராணுவத்தால் பலாத்காரமாக வெளியேற்றப்பட்டுச் சாட்சியம் இன்றி நடந்த போர் என்று சம்பந்தன் 2010 இல் இலங்கை நாடாளுமன்றத்தில் வர்ணித்திருந்தார்.
ஜன. 13 21:59

சுதந்திர தின நிகழ்வுக்கு இருபது கோடி செலவு- ரணில் உரை ரத்து

(வவுனியா, ஈழம்) இலங்கையின் ஐம்பத்து ஐந்தாவது சுதந்திரதினக் கொண்டாட்டத்திற்கு இருபது கோடி ரூபா செலவாகுமென உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார். சுமார் ஐம்பத்து ஏழு கோடி ரூபா செலவாகுமென மதிப்பிட்டதாகவும், ஆனால் பொருளாதார நெருக்கடி நீடிப்பதால், செலவுகளைக் குறைத்துக்கொள்ள அரசாங்கம் ஆலோசனை வழங்கியதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் அசோக பிரியந்த இவ்வாறு கூறினார்.
ஜன. 11 09:47

மைத்திரி, விமல், டளஸ் புதிய கூட்டணி

(வவுனியா, ஈழம்) விமல் வீரவன்ச தலைமையிலான உத்தர லங்கா சபாகய, டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபை, அநுர பிரியதர்சன யாப்பா அணி மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணைந்து புதிய கூட்டணி ஒன்றை அமைத்துள்ளன. உள்ளூராட்சி சபைத் தேர்தலை நோக்கமாகக் கொண்டு இந்த அரசியல் கூட்டணி புதன்கிழமை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கூட்டணிக்கான அங்குராட்பன நிகழ்வு புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்தப் புதிய கூட்டணி, நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஹெலிகொப்டர் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜன. 09 08:30

மிலிந்த மொறகொடவும் புதுடில்லியும்

தமிழ் நாட்டுக்கு ஊடாக இந்தியாவை ஈழத்தமிழர்கள் ஒருபோதும் அணுகக்கூடாது. புதுடில்லியுடன் நேரடியாகத் தமது அணுகுமுறையை ஈழத்தமிழர்கள் கட்டமைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் இந்திய மத்திய அரசின் நிலைப்பாடு. குறிப்பாகச் சோனியாவை மையப்படுத்திய காங்கிரஸ், மோடியை மையப்படுத்திய இந்துத்துவவாத பி.ஜே.பி ஆகிய பிரதான அரசியல் கட்சிகள் ஈழத்தமிழர் தரப்பினருக்குத் தொடர்ந்து வலியுறுத்துகின்ற விடயம் இதுதான். மோடியின் காலத்தில் தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்களில் ஒருபகுதியினர் இந்துத்துவவாத சக்திகளின் வலைக்குள் வீழ்த்தப்பட்டு வருகிறார்கள் என்பது தற்போது பகிரங்கமாகி வருகின்றது.
ஜன. 05 21:00

ரணிலுடன் சம்பந்தன், செல்வம், சுமந்திரன், சித்தார்த்தன் சந்திப்பு

(வவுனியா, ஈழம்) வடக்கு கிழக்கு மாகாணங்களில் அதிகாரங்களைச் செயற்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய விடயங்களை ஆராய்ந்து எதிர்வரும் பத்தாம் திகதி பதிலளிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று வியாழக்கிழமை மாலை ஐந்து மணிக்கு ரணில் விக்கிரமசிங்கவுடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நடத்திய சந்திப்புத் தொடர்பாக சுமந்திரன் ஊடகங்களுக்கு விளக்கமளித்தார்.
ஜன. 04 10:19

ரணில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சந்திப்பார்- விக்கி அணி பதில் இல்லை

(வவுனியா, ஈழம்) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வியாழக்கிழமை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் சந்திப்பில் பங்குபற்றவுள்ளனர். வடக்கு மாகாண உறுப்பினர்களைச் சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்த ரணில் விக்கிரமசிங்க சென்ற மாதம் சர்வ கட்சி மாநாட்டைக் கூட்டியிருந்தார். இந்த நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தனியாகச் சந்திக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது. இதற்கான அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.
ஜன. 03 08:39

மின் பாவனையாளர்கள் கையெழுத்துப் போராட்டம்

(வவுனியா, ஈழம்) இலங்கைத்தீவில் மின்சார கட்டணம் அதிகரிப்புத் தொடர்பாகப் பல்வேறு எதிர்ப்புகள் ஏற்பட்டுள்ளதால், மின் பாவனையாளர்கள் சங்கம் அறுபத்து ஒன்பது இலட்சம் பாவனையாளர்களின் கையெழுத்தை சேகரிக்கும் போராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில், புதிய வர்த்த மானி அறிவிப்பு ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார். இலங்கையில் மின்சார சபை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் வைத்தியசாலை ஆகிய சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்தே விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
ஜன. 02 22:29

களனிப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் கைது

(மட்டக்களப்பு, ஈழம்) களனி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் கலும் முதன்நாயக்க மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதி டில்ஷன் ஹர்ஷன ஆகிய இருவரும் இன்று திங்கட்கிழமை பிற்பகல் தலங்கம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். விசாரணைக்காக தலங்கம பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு முதலில் அழைப்பு விடுக்கபட்டது. அழைப்பை ஏற்று இரண்டு மாணவர்களும் தலங்க பொலிஸ்நிலையத்திற்கு இன்று நண்பகல் சென்றனர். பல மணி நேர விசாரணையின் பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக களனி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
ஜன. 01 22:29

அமெரிக்க இருநூற்று நாற்பது மில்லியன் டொலர்களை 2022 இல் வழங்கியது- தூதுவர் விளக்கம்

(வவுனியா, ஈழம்) இலங்கைத்தீவு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியினால் கடந்த 2022 ஆம் ஆண்டு அமெரிக்கா வழங்கிய நிதியுதவிகள் தொடர்பாக கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் விளக்கமளித்துள்ளார். கடந்த ஆண்டில் மட்டும் இலங்கைக்கு இருநூற்று நாற்பது மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான நிதியுதவிகளை அமெரிக்கா வழங்கியுள்ளதாக ருவிற்றர் தளத்தில் அறிவித்துள்ளார். இது தொடர்பாக விளக்கமளித்துள்ள கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங், அடிப்படை உணவுப் பாதுகாப்பு, மாணவர்களுக்கான மதிய உணவு, விவசாயிகளுக்கு உரம் போன்றவற்றுக்கே உதவியளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.