அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிரான ரசிய - சீன வியூகங்களுக்கு இடமளிக்காமல் நெழிவு சுழிவுகளோடு பிறிக்ஸ் கூட்டமைப்புக்குள் இந்தியா பயணிக்க முற்படும் நிலையில், மேற்கு ஆபிரிக்க நாடுகள், அமெரிக்கா - பிரான்ஸ் ஆகிய வல்லாதிக்க நாடுகளுடன் இராஜதந்திர உறவைத் துண்டித்து, ரசியாவுடன் கூட்டுச் சேருவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகின்றன. புர்கினோ பசோ, மாலி, கினி, நைஜர் ஆகிய சிறிய ஆபிரிக்க நாடுகள் கடந்த மாதம் ரசியாவுடன் கூட்டுச் சேர்ந்தமை, புவிசார் அரசியல் பொருளாதார நிலைமைகளில் பாரிய தாக்கத்தைச் செலுத்துமென சர்வதேச ஊடகங்கள் அச்சம் கலந்த தொனியில் வர்ணிக்கின்றன.