நிரல்
நவ. 12 01:10

மாணவர் போராட்டமும் யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும்

(வவுனியா, ஈழம்) இந்தியப் பொதுத் தேர்தலில் இந்திரா காங்கிரஸ் என அழைக்கப்படும் இந்திய தேசிய காங்கிரஸ் தோல்வியடைந்து ராஜீவ் காந்தி பதவியிழந்த பின்னர் பிரதமராகப் பதவியேற்ற பி.வி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசாங்கம் 1989 செப்ரெம்பர் மாதம் இருபதாம் திகதியன்று இந்தியப் படைகளை இலங்கையில் இருந்து வெளியேறுமாறு உத்திரவிட்டிருந்தது. அதற்கு அடுத்த நாள் இருபத்தோராம் திகதி மனித உரிமைச் செயற்பாட்டாளரும் யாழ் பல்கலைக்கழக உடற்கூற்றியல் மருத்துவருமான கலாநிதி ராஜினி திராணகம (Rajani Thiranagama) இனம் தெரியாத ஆயுதக் குழு ஒன்றினால் படுகொலை செய்யப்பட்டார். ரஜினி திரணகம ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளுடன் நெருக்கமாகச் செயற்பட்டுப் பின்னர் விலகியிருந்தார்.
நவ. 05 05:11

புலிகள் பாசிசவாதிகளா? இலங்கை அரசை பார்த்துச் சொல்ல முடியுமா?

(முல்லைத்தீவு) 1920 இலங்கைத் தேசிய இயக்கம் பிளவுபட்டு 1921 தமிழர் மகாசபை உருவாவதற்குக் காரணம் யார்? ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை விவகாரத்தில் 'இலங்கை அரசு' என்ற கட்டமைப்பு 1948 இல் இருந்து 2009 மே மாதம் வரையும் நடந்து கொண்ட முறை சரியானதா? 2009 மே மாதத்திற்குப் பின்னரான கடந்த பதினான்கு வருடங்களில் அதாவது விடுதலைப் புலிகள் இல்லாதொழிக்கப்பட்ட பின்னரான சூழலில் செயற்பட்ட முறை நீதியானதா? இங்கே நீதி தவறியது யார் புலிகளா? இலங்கை அரசா? வன்முறையை முதலில் ஆரம்பித்தது யார? புலிகளா? இலங்கை அரசா? தமிழ் முற்போக்குவாதிகளுக்கும் தமிழ் மாற்றுக் கருத்தாளர்களுக்கும் புத்தி எங்கிருந்து பிறக்கிறது? பாதிக்கப்பட்டவன் பக்கம் நின்று பேசாமல் பாதிப்புக்கு உட்படுத்தியவன் பக்கம் நின்று நியாயம் கற்பிக்க முற்படுவது மாற்றுக் கருத்தா?
ஒக். 29 07:53

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர்

(கிளிநொச்சி, ஈழம்) 2009 மே மாதம் போர் இல்லாதொழிக்கப்பட்டு பதின் நான்கு ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில் சர்வதேச அரங்கில் ஈழத்தமிழர் விவகாரம் தொடர்ந்தும் பேசுபொருளாக இருக்கின்றது. ஆனால் புவிசார் அரசியல் பொருளாதார நிலைமைகளை ஆராய்ந்து அதற்கேற்ப நகர்வுகளை முன்னெடுக்கக்கூடிய தமிழ் அரசியல் கட்டமைப்புகள் ஒழுங்கான முறையில் இல்லை. குறிப்பாக ரசிய - உக்ரெயின் போர், இஸ்ரேல் பலஸ்தீனியப் போர் ஆகிய புவிசார் அரசியல் பொருளாதாரப் போட்டிச் சூழலுக்குள் ஈழத் தமிழர்கள் மிக நுட்பமாகக் கையாள வேண்டிய திட்டங்கள் பல உண்டு. தற்போதைய உலக அரசியல் ஒழுங்குக் குழப்ப நிலைமையை இலங்கை உரிய முறையில் பயன்படுத்தி வருகின்றது.
ஒக். 22 14:13

புலிகளை அழித்த பின்னர் தீர்வு என்ற கதை இப்போது பலஸ்தீனர்களுக்கு

(வவுனியா, ஈழம்) விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அவர்களை அழித்த பின்னர்தான் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்று ஜே.ஆர்.ஜயவர்த்தனாவில் இருந்து தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரையும் அன்று மார்தட்டியிருந்தனர். புலிகள் வேறு தமிழ் மக்கள் வேறு எனவும் நியாயம் கற்பித்திருந்தனர். இதனை உள்வாங்கியே புலிகளை அழிக்க 2002 பெப்ரவரியில் சமாதானப் பேச்சு ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் திட்டம் வகுப்பட்டிருந்தமை இஸ்ரேல் - பலஸ்தீன போர் ஆரம்பமானதில் இருந்து வெளிச்சத்துக்கு வருகிறது.
ஒக். 16 09:58

விடுதலைப் புலிகளும் கமாஸ் இயக்கமும்

(கிளிநொச்சி, ஈழம்) பலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமையும் பலஸ்தீனம் தனி நாடாக வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் பதினொரு வருடங்களுக்கு முன்னர் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. பலஸ்தீனத்திற்கு ஆதரவாக 139 நாடுகளும், எதிராக ஒன்பது நாடுகளும் அன்று வாக்களித்திருந்தன. 41 நாடுகள் வாக்களிப்பில் பங்கெடுக்கவில்லை. ஐரோப்பிய நாடுகள் உட்பட இந்திய, இலங்கை போன்ற பல நாடுகளும் ஐ.நா சபையில் இதனை ஏற்றுமுள்ளன. அமெரிக்கா, இஸ்ரேல் உட்பட ஒன்பது நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்திருந்தன. இஸரேலுக்கு ஆதரவாக அமெரிக்க செயற்பட்டு வரும் பின்னணியிலேயே மீண்டும் கமாஸ் இஸரேல் மீது போரைத் தொடுத்துள்ளது.
ஒக். 08 10:15

ரணில் சீனாவுக்கு செல்வது ஏன்? ஜேர்மன் பயணம் தோல்வியா?

(கிளிநொச்சி, ஈழம்) சீனாவைக் கடந்து இலங்கைக்கு நிதியுதவிகளை வழங்கும் விடயத்தில் அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மன் ஆகிய நாடுகள் முற்படுவதாகத் தெரிகின்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உதவிகளை எந்த வழியிலாவது பெற முற்படுகிறார். அதேநேரம் சீனாவிடமும் இருந்து அதிகளவு நிதியைப் பெறும் முயற்சிகளும் தீவிரமாக இடம்பெறுகின்றன. அமெரிக்கச் செய்தி ஊடகமான புளும்போர்க் (Bloomberg) தகவலின் பிரகாரம், ரணில் சீனாவிடம் சென்று உதவிகளைப் பெறுவதைவிடவும் அமெரிக்க, பிரான்ஸ், ஜேர்மன், மற்றும் இந்தியா போன்ற நாடுகளுடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்து நிதியுதவிகளைப் பெறுவதே மேல் என்ற தொனி தென்படுகின்றது.
ஒக். 02 05:24

இணையப் பாதுகாப்பு விதிகளும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைபும் இன ஒடுக்கலுக்கு மேலும் வழி வகுக்கும்

(முல்லைத்தீவு) இணையங்கள் ஊடாக ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்ப்பதாகக் கூறிக் கொண்டு அரசாங்கம் வர்த்தமானியில் வெளியிட்டுள்ள இணையவழிப் பாதுகாப்பு எனப்படும் "நிகழ் நிலைக்காப்புச் சட்ட வரைபு" (Online Safety Bill ) அரசியல் - பொருளாதார நோக்கில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற கருத்துக்கள் வலுப் பெற்றுள்ளன. இந்த வரைபு நடைமுறைக்கு வந்தால் விசேடமாக ஊடகத்துறை உள்ளிட்ட பேச்சுச் சுதந்திரம் மற்றும் கருத்துடைய பலரையும் கடுமையாக ஒடுக்கும் என்றே பொருள்கொள்ள முடியும். குறிப்பாகத் தமிழ் இன ஒடுக்கலுக்கு இந்த வரைபுகள் புதிய வியூகங்களில் வழி வகுக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.
செப். 24 18:54

அமெரிக்க இந்திய சமரசமும் கனடாவும்- ஈழத்தமிழர்கள் சிந்திக்க வேண்டியது

(யாழ்ப்பாணம், ஈழம்) இந்தோ - பசுபிக் பாதுகாப்பு விவகாரங்களில் இந்தியாவின் ஒத்துழைப்பை நாடிநிற்கும் அமெரிக்கா, மோடி அரசாங்கத்தால் தொடர்ச்சியாக இந்தியாவில் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் மனித உரிமை மீறல் செயற்பாடுகள் இந்து சமயம் அல்லாத ஏனைய சமயத்தவர்கள் மீதும் வேறு சமூகங்கள் மீதும் நடத்தி வரும் மிக மோசமான மனிதாபிமானமற்ற செயற்பாடுகளை இதுவரை கண்டித்ததாகத் தெரியவில்லை. தனக்குரிய புவிசார் அரசியல் - பொருளாதார நோக்கில் அமெரிக்கா, இந்தியாவுடன் இணைந்து பயணிக்க முற்பட்டு அதற்காக ஜனநாயக மற்றும் தாராளவாத நற்சான்றிதழ்களைச் சமரசம் செய்கிறது. சீன விகாரத்தில் இந்தியாவுக்கும் அமெரிக்கா தேவை.
செப். 18 08:44

உயிர்த்த ஞயிறுத் தாக்குதல் குற்றவாளிகளுக்கு மன்னிப்பா? 

(யாழ்ப்பாணம், ஈழம்) 1991 ஆம் ஆண்டு யூன் மாதம் பதினேழாம் திகதி தாங்கள் கொழும்பு துணைப் பேராயராக திருநிலைப்படுத்தப்பட்டுப் பின்னர் 1995 இல் இரத்தனபுரி மறை மாவட்ட ஆயராகவும் 1995 முதல் 2001 வரை இரத்தினபுரி ஆயராகவும் பணிபுரிந்தீர்கள். அதன் பின்னர் 2001 ஒக்ரோபர் முதலாம் திகதி உரோமை மறைபரப்பு பேராயத்தின் துணைச் செயலராகவும் நியமனம் பெற்றிருந்தீர்கள். வத்திக்கானில் உள்ள உலகக் கத்தோலிக்கத் திருத்தந்தையின் (Pope) இந்தோனேசிய மற்றும் கிழக்குத்தீமோர் நாடுகளுக்கான தூதுவராக 2004 ஏப்ரல் முதல் 2005 டிசம்பர் வரை பணியாற்றியபோதுதான் தாங்கள் பேராயராகவும் தரமுயர்த்தப்பட்டீர்கள் என்பது உலகம் அறிந்த உண்மை.
செப். 09 23:03

போர்க்குற்ற விசாரணைக்கு அழுத்தம் கொடுத்திருந்தால் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் நடந்திருக்காது

(வவுனியா, ஈழம்) 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சூத்திரதாரி யாராக இருக்கும் என்பது தொடர்பான சந்தேகங்கள், ஊகங்கள், தாக்குதல் நடந்த சில மாதங்களிலேயே எல்லோர் மனதிலும் அவரவர் தன்மைகளுக்கு ஏற்ப எழுந்தன. இப் பின்புலத்தில் சனல் 4 தொலைக்காட்சி முழு விபரங்களையும் ஆதாரத்துடன் வெளியிட்டிருக்கிறது. பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என்று பலர் மீது போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச் சாட்டுக்கள் ஏற்கனவே சுமத்தப்பட்டிருந்தன. ஜெனீவா மனித உரிமைச் சபை அறிக்கைகளிலும் குற்றச்சாட்டு விபரங்கள் உண்டு.