நிரல்
டிச. 06 23:03

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பான உயர் நீதிமன்ற விசாரணை சனிக்கிழமை வரை நீடிப்பு

நாடாளுமன்றத்தை கலைத்தமை தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான உயர் நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை எதிர்வரும் எட்டாம் திகதி சனிக்கிழமை வரை நீடிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தைக் கலைப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இலங்கை அரசியல் யாப்புக்கு முரணானது என்றும் அதனை இரத்துச் செய்யுமாறு கோரியும் உயர்நீதிமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு. ஜே.வி.பி ஆகிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீ;தான விசாரணை கடந்த மூன்று நாட்களாக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. நாளை வெள்ளிக்கிழமை இறுதித் தீர்;ப்பு வழங்கப்படும் என உயர் நீதிமன்ற நீதியரசர்கள் முன்னர் கூறியிருந்தனர்.
டிச. 06 22:27

உயிருக்கு ஆபத்துக்கு ஏற்பட்டால் ஜனாதிபதியே பொறுப்பேற்க வேண்டும் - றிசாட் பதியுதீன்

(மன்னார், ஈழம்) தனது கொலைச் சதி முயற்சி தொடர்பில் நாமல் குமாரவின் குரல்வழிப்பதிவு வெளிவந்த பின்னரும் தமக்கிருந்த பாதுகாப்பு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், உயிருக்கு ஆபத்து ஏற்படும் பட்சத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொலிஸ் திணைக்களத்திற்கு பொறுப்பானவர் என்ற வகையில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இலங்கை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அழைப்பிற்கிணங்க இன்று காலை அங்கு சென்ற அவர் சுமார் 3 மணி நேரம் கொலைச்சதி முயற்சி தொடர்பில் வாக்குமூலம் வழங்கிய பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்தார்.
டிச. 06 17:01

ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்குமாறு கோரி பெருந்தோட்டத்துறை தொழிலாளர்கள் தொடர் போராட்டம்

(வவுனியா, ஈழம் ) இலங்கையின் பொருளாதாரத்தி்ல் பிரதான பங்களிப்புச் செய்யும் பெருந்தோட்டத்துறை தொழிலாளர்கள் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்குமாறு கோரி இன்று வியாழக்கிழமை கவனயீர்ப்புப் போட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். ஏன் ஆயிரம் ரூபாவை வழங்க முடியாது என கேள்வி எழுப்பியுள்ள கொட்டகலை பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கும் கொட்டகலை ஸ்டோனிகிளிப் தோட்ட தொழிலாளர்கள் முதலாளிமார் சம்மேளனத்தின் செயற்பாடுகளைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
டிச. 06 08:01

நீதிமன்ற விசாரணை நடைபெறும்போது நாடாளுமன்ற அமர்வைக் கூட்ட முடியாது - மகிந்த தரப்பு சபாநாயகருக்கு கடிதம்

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுவதாலும், மகிந்த ராஜபக்ச பிரதமராக செயற்பட முடியாது எனவும் அமைச்சரவையும் இயங்க முடியாதெனவும் இடைக்கால தடை விதிக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருப்பதாலும் நாடாளுமன்ற அமர்வை நடத்த முடியாதென மகிந்த ராஜபக்ச தரப்பு சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கா சுத்திரக் கட்சியை மையப்படுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு புதன்கிழமை கூடி ஆராய்ந்த பின்னர் சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. நீதிமன்ற வழக்குகள் இருப்பதால் நாடாளுமன்ற அமர்வை நடத்துவது சட்டத்திற்கு முரணானது எனவும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
டிச. 05 18:19

மகிந்த ஆட்சிக்கு வந்தால் எமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - ஐ.நா பிரதிநிதிகளிடம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆதங்கம்

(முல்லைத்தீவு, ஈழம்) ஈழத்தமிழ் மக்கள் அநியாயமாக கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்டதற்கும் ஆயிரக்கணக்கில் காணாமல் ஆக்கப்பட்டதற்கும் காரணமாக இருந்த இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமராக பதவி வகித்தால் தமது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க முடியாது என்பதுடன் தமது உயிருக்கும் அச்சுறுத்தல் என்று கடந்த 1 வருடத்துக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஐ.நா பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
டிச. 05 11:13

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பான மனுக்கள் மீது இரண்டாவது நாளாகவும் விசாரணை

(கிளிநொச்சி, ஈழம்) இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிரான வர்த்தமானி அறிவித்தலை ரத்துச் செய்யுமாறு கோரும் மனு மீதான விசாரணை ஏழுபேர் கொண்ட நீதியரசர்கள் முன்னிலையில் இன்று புதன்கிழமை இரண்டாவது நாளாகவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கை உயர் நீதிமன்ற பிரதம நீதியரசர் நளின் பெரேர மற்றும் பிரியந்த ஜெயவர்த்தன, பிரசன்ன ஜயவர்தன, சிசிர டி ஆப்ரு, விஜித் மாலல்கொட, புவனேக அலுவிஹாரே மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய ஏழு நீதியரசர்கள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்றத்தை நான்கரை வருடங்களுக்கு முன்னதாக கலைப்பதற்கான அதிகாரம் அரசியல் அமைப்பில் ஜனாதிபதி்க்கு இல்லை என்று மனுதாரர்கள் சார்பில் முன்லையான சட்டத்தரணிகள் கூறியுள்ளனர்.
டிச. 05 08:45

வாள்வெட்டுக்குழுவின் அட்டகாசம் - இலங்கைப் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லையென முறைப்பாடு - அச்சத்தில் மக்கள்

(வவுனியா, ஈழம் ) வவுனியா மாவட்டத்தில் உள்ள வேப்பங்குளம் ஏழாம் ஒழுங்கைக்கு அருகில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு வாள்வெட்டுக் குழுவொன்று அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. இதனால் வர்த்தகர்கள் வர்த்தக நிலையங்களை அவசர அவசரமாக மூடிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இரவு 8.30 முதல் சுமார் ஒரு மணி நேரம் வரை அட்டகாசத்தில் ஈடுபட்டதுடன் பொதுமக்களையும் அச்சுறுத்தியுள்ளனர். இலங்கைப் பொலிஸாருக்கு உடனடியாக அறிவித்த போதும் தாமதித்தே பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்ததாக பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் தெரிவித்தனர். வேப்பங்குளம் ஏழாம் ஒழுங்கைக்கு அருகில் உள்ள வேப்பங்குளம் சிறுவர் இல்லத்திற்கு முன்பாகவே வாள்வெட்டுக்குழு அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது.
டிச. 04 15:23

புதிய பிரதமரை நியமிக்க மைத்திரி முயற்சி- ஆனால் ஏற்க முடியாதென ஐக்கிய தேசியக் கூறுகின்றது

(வவுனியா, ஈழம் ) மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவி வகிக்க முடியாதென கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ள நிலையில். புதிய பிரதமரை நியமிக்கும் விவகாரத்திலும் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. ஐக்கியதேசியக் கட்சியை மையப்படுத்திய ஐக்கிய தேசிய முன்னணி, ரணில் விக்கிரமசிங்கவை மாத்திரமே பிரதமராக நியமிக்க முடியும் என உறுதியாகக் கூறியுள்ளது. இந்த நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து ஒருவரை பிரதமராக நியமித்து ஐக்கியதேசிய முன்னணியின் ஆதரவையும் பெற ஜனாதிபதி மைத்திரி முற்படுகின்றார்.
டிச. 04 00:22

நீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பின் பின்னரும் ரணிலைப் பிரதமராக்க முடியாது என்கிறார் மைத்திரி- சட்டமா அதிபருடன் ஆலோசனை

(கிளிநொச்சி, ஈழம்) இலங்கை நாடாளுமன்றத்தின் 225 உறுப்பினர்களும் கையொப்பமிட்டுக் கொடுத்தாலும் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சியை மையப்படுத்திய ஐக்கிய தேசிய முன்னணி உறுப்பினர்களிடம் கூறியுள்ளார். மகிந்த பிரதமராகப் பதவி வகிக்க முடியாதென கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்றுத் திங்கட்கிழமை வழங்கிய இடைக்காலத் தீர்ப்பையடுத்து ஐக்கிய தேசிய முன்னணியின் உறுப்பினர்கள் திங்கட்கிழமை இரவு மைத்திரிபால சிறிசேவைச் சந்தித்து ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
டிச. 03 19:32

நீதிமன்றத் தீர்ப்பை ஏற்க முடியாதென மகிந்த அறிக்கை - சஜித்தைப் பிரதமராக்கும் மைத்திரியின் முயற்சி மீண்டும் தோல்வி

(மன்னார், ஈழம்) பிரதமராக பதவி வகிக்க முடியாதென கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்காலத் தடை உத்தரவை ஏற்க முடியாதென்று மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். தீர்ப்புக்கு எதிராக இலங்கை உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யவுள்ளதாகவும் மகிந்த கூறியுள்ளார். இடைக்காலத் தீர்ப்புத் தொடர்பாக மகிந்த இன்று திங்கட்கிழமை இரவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த அறிக்கை குறித்து ரணில் தரப்பு எதுவும் கூறவில்லை. இந்த நிலையில் இலங்கையில் கடந்த ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி மேலும் நீடித்துச் செல்லுகின்றது.