செய்தி: நிரல்
டிச. 25 23:50

மட்டக்களப்பு எல்லைக் கிராமங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு காணி உறுதிப் பத்திரம் வழங்கப்படவில்லையென முறைப்பாடு

(மட்டக்களப்பு, ஈழம்) மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மிகவும் தொன்மை வாய்ந்த தமிழ் கிராமங்களில் வாழும் மக்களுக்கு இதுவரை காணி உறுதிப்பத்திரம் வழங்கப்படவில்லை என கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் தி.கோணேசன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 1963ஆம் ஆண்டு 25 குடும்பங்களுடன் கிராம அபிவிருத்திச் சங்கம் பதிவு செய்யப்பட்ட தமிழ் கிராமங்களில் ஒன்று ஆலங்குளம் எனத் தெரிவிக்கும் கோணேசன் இன்று வரைக்கும் 287 குடும்பங்கள் வசித்து வருவதாகவும் கூறினார்.
டிச. 15 14:59

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக முறைப்பாடு

(வவுனியா, ஈழம்) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமது உறவுகளின் நிலை குறித்து அறியத்தருமாறு வலியுறுத்தி, கடந்த 2012 ஆம் ஆண்டு இலங்கை மனித உரிமை ஆணையகத்தில் தாம் செய்த முறைப்பாட்டுக்கு இதுவரை எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை எனவும், குறித்த முறைப்பாட்டுக்கு என்ன நடந்தது என்பதனை தமக்கு அறியத்தருமாறும் கோரி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
டிச. 15 12:20

50 நாட்களில் பிரதமர் பதவியிலிருந்து மகிந்த விலகினார்-நாளை மீண்டும் பதவியேற்கிறார் ரணில்

(முல்லைத்தீவு, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தன்னிச்சையாக பிரதமராக நியமிக்கப்பட்ட இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியான நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். கொழும்பு விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற சர்வமத அனுட்டானங்களைத் தொடர்ந்து தனது பதவி விலகல் கடிதத்தில் மகிந்த கையொப்பமிட்டுள்ளார். கடிதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
டிச. 15 10:45

இலங்கை நீதித்துறை சுயாதீனமானது என்பதை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மூலமாக சர்வதேசத்துக்கு ரணில் அறிவித்துள்ளார்

(அம்பாறை, ஈழம்) மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தால் இலங்கையில் ஒக்ரோபர் மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட அரசியல் நெருக்கடி முடிவுக்கு வந்தமைக்கு இலங்கை நீத்தித்துறையின் சுயாதீனமான செயற்பாடுதான் காரணம் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சமந்தா பவர் கூறியுள்ளார். அத்துடன் மக்கள், சிவில் சமூகம், சுதந்திர ஊடகங்கள், ஆகியவற்றின் செயற்பாடுகளும் பிரதான காரணம் எனவும் அவர் தனது ருவிட்டர் பதிவில் கூறியுள்ளார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பான இலங்கை அரச வர்த்தமானி அறிவிப்பு அரசியல் யாப்புக்கு முரணானது எனக் குறிப்பிட்டு இலங்கை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.
டிச. 14 21:40

மைத்திரியால் வழங்கப்பட்ட பிரதமர் பதவியை இராஜினாமா செய்கிறார் மகிந்த - ரணில் மீண்டும் பிரதமராக பதவியேற்கிறார்

(கிளிநொச்சி, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தன்னிச்சையாக பிரதமராக நியமிக்கப்பட்ட இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியான நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதுடன் மைத்திரி - ரணில் தலைமையிலான கூட்டரசாங்கத்தில் பிரதமராக அங்கம் வகித்த ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ளதாக கொழும்பு அரசியல் செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.