நிரல்
ஜன. 07 14:52

வெளிநாட்டு விமானம் தரையிறங்கியது - இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு அனுமதி- ஆனாலும் விசாரணைக்கு ஏற்பாடு

(யாழ்ப்பாணம், ஈழம் ) தமிழ் பேசும் தாயகப் பகுதியான கிழக்கு மாகாணம் திருகோணமலையில் இலங்கைப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள சீனக்குடா விமான நிலையத்திற்குச் சென்ற சர்வதேச விமானம் ஒன்று, அங்கிருந்து நேரடியாகச் சிங்கப்பூர் நாட்டுக்குச் சென்றமை தொடர்பாக விசாரணைகள் நடத்தவுள்ளதாக இலங்கைப் போக்குவரத்து சிவில் விமானச்சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. ஆனால் குறித்த விமானம் இலங்கையின் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்திற்கு கடந்த மூன்றாம் திகதி வந்ததாகவும் பின்னர் அங்கிருந்து சீனக்குடா விமான நிலையத்திற்குச் செல்வற்கு இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியிருந்ததாகவும் கொழும்பு அரசியல் தகவலகள் கூறுகின்றன. குறித்த விமானத்தில் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த வர்த்தக முதலீட்டாளர்கள் ஐந்து பேர் இருந்துள்ளனர்.
ஜன. 07 13:52

வவுனியா - புதூர் பகுதியில் ஆயுதங்கள் மீட்பு - சந்தேகத்தில் பெண் உட்பட இருவர் கைது

(வவுனியா, ஈழம்) வவுனியா - புதூர் பகுதியில் ஆயுதங்கள் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்தவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இருவர் கடந்த இரண்டாம் திகதி கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், வவுனியா - நெடுங்கேணி பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரும் சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஜன. 07 12:13

இன அழிப்பு போரின் போது கொல்லப்பட்டோர் தொடர்பான எண்ணிக்கையை உறுதிப்படுத்துவதற்கு உதவுமாறு கோரிக்கை

(கிளிநொச்சி, ஈழம்) தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு போரின் போது படுகொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பான எண்ணிக்கையை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளை ஆரம்பித்துள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு மற்றும் மனித உரிமைகள் தரவுகள் ஆய்வுக்குழு ஆகியன தமது இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளன. தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு உட்பட இலங்கையின் பல பகுதிகளிலும் புலம்பெயர்ந்து வெளிநாடுகளிலும் வசிப்போர் தங்களிடமுள்ள விபரங்களை வழங்கவேண்டும் என குறித்த இரண்டு அமைப்புக்களும் கோரியுள்ளன.
ஜன. 07 10:21

வடக்குக்கு தமிழரை ஆளுநராக நியமிப்பது தொடர்பில் பேச்சு? சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவரை நியமிப்பதற்கு மைத்திரி விருப்பம்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையில் கடந்த ஆண்டின் இறுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாட்டினால் அரசியல் நெருக்கடி ஏற்பட்டதாக பல தரப்பினரும் குற்றம்சுமத்திவரும் நிலையில் இலங்கை அரசியலில் தொடர்ச்சியாக பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. பிரதமர் மாற்றத்தில் ஏற்பட்ட குழறுபடியை அடுத்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது மாகாண ஆளுநர்கள் மாற்றப்பட்டு புதிய ஆளுநர்கள் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பதவிப்பிரமாணம் செய்தனர். இருந்த போதிலும் வடக்கு மாகாணத்துக்கான ஆளுநர் இதுவரை நியமிக்கப்படாத நிலையில் அப் பதவிக்கு தமிழர் ஒருவரை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜன. 06 10:38

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமையை ஏற்குமாறு சி.வி.விக்னேஷ்வரனுக்கு ஆனந்தசங்கரி அழைப்பு

(கிளிநொச்சி, ஈழம்) ஈழத்தமிழ் மக்களது பிரச்சனைக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்கப்போவது யார் என்ற கேள்வி தற்பாது அனைவர் மத்தியிலும் எழுந்துள்ள நிலையில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்க் கட்சிகளில் ஒன்றான தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமையை ஏற்குமாறு, வடக்கு மாகாண முன்னாள் முதலைமைச்சரான நீதியரசர் சி.வி.விக்னேஷ்வரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி இது தொடர்பாக நேற்று சனிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
ஜன. 06 10:01

வடக்கில் 43 ஆயிரத்து 48 ஏக்கர் பயிர்ச்செய்கை அழிவடைந்துள்ளது- கிளிநொச்சியில் 28 வரையான குளங்கள் பகுதியளவில் சேதம்

(கிளிநொச்சி, ஈழம்) வடக்கு மாகாணத்தில் பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ள நிலை தற்போது சீரடைந்துள்ள நிலையில், சுமார் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அகதி முகாம்களிலிருந்து வீடுகளுக்குத் திரும்பிச் சென்றுள்ள நிலையில், வெள்ள அனர்த்தத்தினால் 43 ஆயிரத்து 48 ஏக்கர் பயிர்ச்செய்கை அழிவடைந்துள்ளதாக, இலங்கை கிராமிய பொருளாதார விவசாய மற்றும் கால்நடை கமத்தொழில் நீர்ப்பாசன அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து ஆராயும் கலந்துரையாடல் நேற்றுச் சனிக்கிழமை முற்பகல் 10.30 அளவில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
ஜன. 05 13:32

தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளப் பிரச்சனை - மக்களை வெளியேற்றும் இனவாத செயற்பாடா? அருட்தந்தை சத்திவேல்

(முல்லைத்தீவு, ஈழம்) இலங்கையின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தைச் செலுத்தும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தமக்கான அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தி முன்னெடுத்துவரும் தொடர் போராட்டங்களுக்கு இதுவரை எவ்வித தீர்வும் வழங்கப்படாத நிலையில் பெருந்தோட்டக் கம்பனிகள் மக்களது கோரிக்கையைத் தட்டிக்கழிப்பதானது பெருந்தோட்டத் தொழிலாளர்களை அங்கிருந்து வெளியேற்றும் ஒரு இனவாத நடவடிக்கையா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக மனித உரிமைச் செயற்பாட்டாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்தார். பெருந்தோட்டத் தொழிலாளர்களது பேராட்டம் தொடர்பாக கூர்மை செய்தித் தளத்திற்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜன. 05 09:27

அரசியலில் தொடர் மாற்றம் - மாகாணங்களுக்கான ஆளுநர்கள் புதிதாக நியமனம்

(மன்னார், ஈழம்) இலங்கையில் கடந்த ஆண்டின் இறுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாட்டினால் அரசியல் நெருக்கடி ஏற்பட்டதாக பல தரப்பினரும் குற்றம்சுமத்திவரும் நிலையில் இலங்கை அரசியலில் தொடர்ச்சியாக பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. பிரதமர் மாற்றத்தில் ஏற்பட்ட குழறுபடியை அடுத்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது மாகாண ஆளுநர்கள் மாற்றப்பட்டு புதிய ஆளுநர்கள் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நேற்று வெள்ளிக்கிழமை பதவிப்பிரமாணம் செய்துள்ளனர்.
ஜன. 04 22:58

இராணுவத்தால் அபகரிக்கப்பட்டுள்ள நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி செட்டிகுளம் - இராமியன்குளம் மக்கள் ஆர்ப்பாட்டம்

(வவுனியா, ஈழம்) தமிழர் தாயகப் பகுதிகளில் இடம்பெற்ற இன அழிப்புப் போரைத் தொடர்ந்து தமிழ் பேசும் மக்களது காணிகளை அபகரித்துள்ள இலங்கை இராணுவம், அதில் விவசாயம் உட்பட பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், வவுனியா, செட்டிகுளம் - இராமியன்குளம் பகுதியில் மக்களின் காணிகளை கையகப்படுத்தியுள்ள இலங்கை இராணுவம், அதில் விவசாயம் செய்வதாவும் அதனை உடனடியாகத் தடுத்து நிறுத்தி குறித்த காணிகளை மக்களிடம் மீண்டும் ஒப்படைக்குமாறும் வலியுறுத்தி பாரிய கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜன. 04 14:06

தேசமான்ய விருதை உத்தியோகபூர்வமாக மைத்திரியிடம் திருப்பிக் கொடுத்தார் தேவநேசன் நேசையா

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையில் ஜனநாயகம் மீறப்பட்டமைக்காக கலாநிதி தேவநேசன் நேசையா தனக்கு வழங்கப்பட்ட தேசமான்ய விருதை அதனை தனக்கு வழங்கிய இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உத்தியோகபூர்வமாக நேற்று வியாழக்கிழமை கையளித்துள்ளார். ஜனநாயக கோட்பாடுகளுக்கும் நடைமுறைகளுக்கும் முரணான வகையில் மைத்திரிபால சிறிசேன செயற்பட்டு வருவதாக கவலை வெளியிட்டுள்ள ஓய்வுபெற்ற சிவில் சேவை அதிகாரி கலாநிதி தேவநேசன் நேசையா கடந்த வருடம் தனக்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட தேசமான்ய விருதுக்கான பதக்கத்தையும் சான்றிதழையும் திருப்பியனுப்பப் போவதாக அறிவித்திருந்தார்.