செய்தி: நிரல்
பெப். 16 22:15

வயலிலிருந்து மண் அகழ்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை - கிளிநொச்சி கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் தகவல்

(கிளிநொச்சி, ஈழம்) விவசாய நிலமான கிளிநொச்சி ஊரியான் பகுதியில் வயல் நிலத்திலிருந்து மண் அகழ்வதற்கான எந்த அனுமதிகளும் வழங்கப்படவில்லை என்று கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் வே.ஆயகுலன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி கோரக்கன்கட்டு கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட ஊரியான் கமக்கார அமைப்பின் கீழுள்ள வயல் காணி ஒன்றிலிருந்து நேற்று முன்தினம் நீண்ட காலம் பழமை வாய்ந்த மரங்கள் மற்றும் பனை மரங்கள் என்பன அழிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த காணியில் இருந்து முரசுமோட்டை கமக்கார அமைப்பின் தலைவரால் மண் அகழ்ந்தெடுக்கப்பட்டு தனது காணிக்குள் நிரப்பப்பட்டுள்ளதாக கமக்கார அமைப்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெப். 16 21:40

வவுனியா - ஈச்சங்குளம் பகுதியில் தமிழ் இளைஞன் மீது இலங்கை இராணுவத்தினர் தாக்குதல் - இளைஞன் பொலிஸாரால் கைது

(வவுனியா, ஈழம்) வவுனியா ஈச்சங்குளம் இராணுவ முகாமுக்கு முன்னால் வைத்து தமிழ் இளைஞன் மீது இலங்கை இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றதாக கூர்மையின் வவுனியா செய்தியாளர் தெரிவித்தார்.
பெப். 16 14:30

ஐக்கிய தேசியக் கட்சியா, ஐக்கிய தேசிய முன்னணியா? இளம் உறுப்பினர்களிடையே குழப்பம் - இரகசியச் சந்திப்பு

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கை ஜனாதிபதித் தேர்தல் இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு முற்பகுதியில் நடைபெறவுள்ள நிலையில், ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்குள் வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டுள்ளன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியை மையப்படுத்திய ஐக்கிய தேசிய முன்னணிக்குள் இருந்தே வேட்பாளர் நியமிக்கப்பட வேண்டும் என முன்னணியில் அங்கம் வகிக்கும் சிறிய கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்களும் அதனை ஏற்றுள்ளனர். ஆனால் கட்சியின் இளைய உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருந்தே ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
பெப். 15 13:15

நந்திக்கடலில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையைக் கண்காணிக்கச் சென்றோர் மீது தாக்குதல்

(முல்லைத்தீவு, ஈழம்) இன அழிப்பு போரினால் அனைத்தையும் இழந்து தமது அன்றாட வாழ்வாதாரத்தின் ஊடாக பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பிவரும் முல்லைத்தீவு மீனவர்கள், அங்கு மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாவதாக தொடர்ச்சியாக விசனம் வெளியிட்டுவரும் நிலையில், நந்திக்கடல் நீரேரியில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையைக் கண்காணிக்கச் சென்றவர்கள் மீது நேற்று வியாழக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பெப். 15 09:41

தமிழீழ விடுதலை இயக்கம் பேரவையுடன் இணைந்திருந்தால் கூட்டமைப்பு இன்று இருந்திருக்காது - செல்வம் கருத்துக்கணிப்பு

(மன்னார், ஈழம்) சர்வதேசத்தின் துணையுடன் இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தினால் 2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கம் இல்லாது செய்யப்பட்டதன் பின்னரான நிலையில், தமிழ் மக்களது பிரதிநிதிகள் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் அடுத்த தலைமைப் பதவி யாருக்கு என்பது தொடர்பில் கேள்விகள் எழுந்துள்ளதுடன், இதற்காக பலரும் போட்டியிடுவதாக கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மாறி மாறிக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வரும் நிலையில், தமிழீழ விடுதலை இயக்கம், தமிழ் மக்கள் பேரவையுடன் இணைந்திருந்தால் கூட்டமைப்பு இன்று இல்லாது போயிருக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.