நிரல்
ஏப். 02 16:16

ரணில் விக்கிரமசிங்கவினால் ஏமாற்றப்படுவதை சொல்வதற்கு வெட்கப்படும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு

(யாழ்ப்பாணம், ஈழம் ) ஈழத் தமிழர் விவகாரத்தில் நிரந்த அரசியல் தீர்வுகள் பற்றிய எந்தவொரு பேச்சுக்களையும் ஆரம்பிக்காமல் வெறுமனே அபிவிருத்தி நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாடுகளில் ஏமாற்றமடைந்துள்ளது. ஆனால் ஏமாற்றமடைந்து வருவதைக் கூட மக்களுக்கு வெளிப்படையாகக் கூற வெட்கப்படுவதாக தமிழரசுக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. வடக்கு, கிழக்கு துரித அபிவிருத்திச் செயலணிக் கூட்டம் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்றுத் திங்கட்கிழமை மாலை நடைபெற்றபோது சிறிது நேரம் மாத்திரமே ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டார். இலங்கை அரசின் உயர் அதிகாரிகள் மாத்திரமே கூட்டத்தில் கலந்துகொண்டு விளக்கமளித்தனர்.
ஏப். 02 15:12

ஜெனீவாவில் உள்ள இலங்கைத் தூதுவரை அழைத்து விளக்கம் கோருமாறு மகிந்த தரப்பு அழுத்தம் - மைத்திரியும் இணக்கம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைச் சபையின் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியமை தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் எதிர்ப்பை வெளியிட்டு வரும் நிலையில், மகிந்த ராஜபக்ச தரப்பும் இணை அனுசரணை வழங்கியமை குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ளது. அத்துடன் ஜெனிவா தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கி கையெழுத்திட்ட ஜெனீவாவில் உள்ள இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஏ.எல்.ஏ அசீசை, கொழும்புக்கு அழைத்து விளக்கம் கோர வேண்டுமெனவும் மகிந்த ராஜபக்ச தரப்பு வலியுறுத்தி வருகின்றது. ஆனால் கொழும்புக்கு அழைத்து விளக்கம் கோர வேண்டிய அவசியம் இல்லையென ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் கூறி வருகின்றது.
ஏப். 01 23:16

சிங்களக் கட்சிகளிடையே மோதல் - ஜனாதிபதித் தேர்தலில் ரணில், சந்திரிக்கா ஓரணியில்! மைத்திரி, மகிந்த பனிப்போர்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கை ஒற்றையாட்சி அரசின் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் சமர்ப்பித்த நடப்பு நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்து தோல்வியடைச் செய்ய வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கூறியுள்ளது. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிபதி மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொது ஜனபெரமுன கட்சி, வரவு செலவுத் திட்டத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் எதிராக வாக்களிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைத் தலைவராகக் கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் பலர் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பதில்லையென முடிவு செய்துள்ள நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இவ்வாறு கூறியுள்ளது.
ஏப். 01 10:08

மன்னார் மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக் கூடுகளின் கார்பன் அறிக்கை தொடர்பான சந்தேகங்கள்

(யாழ்ப்பாணம், ஈழம் ) மன்னார் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தொடர்பான ஆய்வு அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாதென வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார். அமெரிக்காவின் புளோரிடாவில் நடத்தப்பட்ட கார்பன் ஆய்வு அறிக்கை தொடர்பாக பல்வேறு கருத்துக்கள், சந்தேகங்கள் வெளிவரும் நிலையில், விக்னேஸ்வரன் இவ்வாறு கூறியுள்ளார். மன்னார் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக் கூடுகள் 1499 ஆம் ஆண்டுக்கும் 1719 ஆண்டுக்கும் இடைப்பட்டதென கார்பன் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஆனால் அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்ட எலும்புக் கூடுகள் மன்னார் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்டவை அல்ல என்று மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.
மார்ச் 31 14:34

மன்னாரில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 28 வருடங்களுக்கும் மேலாக இழப்பீடுகள் வழங்கவில்லையென முறைப்பாடு

(மன்னார், ஈழம்) தமிழர் தாயகப் பகுதியான மன்னார் மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு இதுவரையும் இலங்கை அரசாங்கத்தினால் உரிய நஷ்டஈடுகள் வழங்கப்படவில்லை. இலங்கை அரசாங்கத்தினால் 1994ம் ஆண்டு உருவாக்கப்பட்ட புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சும் நஷ்டஈடுகளை வழங்க எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்றும் மன்னார் மக்கள் கூறுகின்றனர். 1984ம் ஆண்டு தொடக்கம் 2009ம் ஆண்டு வரை மன்னார் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இலங்கை இராணுவம் நடத்திய முப்பதுக்கும் அதிகமான இராணுவ நடவடிக்கைகள், தாக்குதல்கள் மற்றும் முற்றுகைச் சமர்களின் போது ஆயிரத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். சுமார் இருநூறுக்கும் அதிகமானவர்கள் தமது அவயவங்களை இழந்து நிரந்தர அங்கவீனர்களாகியுள்ளனர்.
மார்ச் 30 22:50

மன்னாரில் மேலும் பல போர்க்கால மனிதப் புதைகுழிகள்- காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சந்தேகம்

(மன்னார், ஈழம்) தமிழர் தாயகம் வடமாகாணம் மன்னார் மாவட்டத்தில் கடந்த 1990ம் ஆண்டிலிருந்து 2009ம் ஆண்டு வரை இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டு பகுதியென பிரகடனப்படுத்தப்பட்டு அப்பகுதிகளில் படைமுகாம்களாக காணப்பட்ட இடங்களில், மனிதப்புதை குழிகள் இருக்கலாம் என காணமல் போனவர்களின் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். அத்துடன் இலங்கைக் கடற்படையின் சனிவிலேஜ் முகாமினுள் இவ்விதம் புதைகுழிகள் இருக்கலாம் என அவர்கள் கூறுகின்றனர். மன்னாரில் கடந்த 1990ம் ஆண்டிலிருந்து 2009ம் ஆண்டு வரை இதுவரை எண்ணூற்றுக்கும் அதிகமான தமிழர்கள் காணமல் போயுள்ளனர் என்று கூறியுள்ள காணமல் போனவர்களின் உறவினர்கள், இதனால் மனித புதைகுழிகள் தொடர்பாக சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.
மார்ச் 30 16:45

வவுனியா மாவட்டத்தில் தமிழரின் இன விகிதாசாரத்தைக் குறைக்க முயற்சி-

(வவுனியா, ஈழம் ) வடமாகாணம் வவுனியா மாவட்டத்தில் தற்போது தமிழர்கள் 83 வீதம் முஸ்லீம்கள் ஏழு வீதம் சிங்களவர்கள் பத்து வீதமும் உள்ளனர். மகிந்த ராஜபக்ச ஆட்சியின் பின்னரு வவுனியாவில் குடிப்பரம்பலில் மாற்றங்களை ஏற்படுத்தும் அளவுக்கு சிங்களக் குடியேற்றங்கள் ஆரம்பிக்கப்பட்டன. 2015 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த மைத்திரி- ரணில் அரசாங்கமும் சிங்களக் குடியேற்றத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் வவுனியா மாவட்டத்தை இலக்கு வைத்து குடியேற்றங்கள் இடம்பெறுவதாக தமிழ் உறுப்பினர்கள் பலரும் இலங்கை நாடாளுமன்றத்தில் கூறியிருந்தனர்.
மார்ச் 29 23:09

இலங்கையின் வரவுசெலவுத் திட்டம் தோற்கடிக்கப்படுமா? மகிந்த அணிக்கு சவால் விடும் ஐக்கிய தேசியக் கட்சி

(யாழ்ப்பாணம், ஈழம் ) நடப்பு நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முடியுமானால் தோற்கடிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி மகிந்த ராஜபக்சவின் பொதுஜன பெரமுன கட்சிக்கு சவால் விடுத்துள்ளது. இலங்கையின் நடப்பு நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதம் இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற்றது வருகின்றது. இந்த விவதத்தின்போது அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, வஜிர அபேவர்தன ஆகியோரின் கீழ் உள்ள அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் இ;டம்பெற்ற வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டன.
மார்ச் 28 22:15

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பத்திரிகையில் வெளியான கட்டுரையின் விபரங்களை படையினர் கோரலாமா?

(யாழ்ப்பாணம், ஈழம் ) குற்றம் ஒன்றும் இழைக்கப்படாத நிலையில், இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பின் குற்றவியல் சட்டக் கோவையின் கீழ் பிரிவு 124 பிரகாரம் பத்திரிகையில் எழுதப்பட்ட கட்டுரை ஒன்றை எழுதியவரின் பெயர் விபரங்களை எவ்வாறு கோர முடியுமென சட்டத்தரணி நடராஜர் காண்டீபன் யாழ் பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை கேள்வி எழுப்பியுள்ளார். கட்டுரை வெளியான பத்திரிகையின் அலுவலகம் கொழும்பில் செயற்படுகின்றது. ஆனால் அந்தப் பத்திரிகையில் வெளியான கட்டுரையை எழுதியவரின் பெயர் விபரங்களைக் கோருவதற்கான கட்டளையை இலங்கைப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் யாழ் பிரதான நீமன்றத்தில் பெற்றதன் நோக்கம் என்னவென்றும் அவர் வினா எழுப்பினார்.
மார்ச் 28 16:51

இலங்கைத் தீவில் பன்னாட்டுப் பொருளாதார, பூகோள அரசியல் வலையில் தமிழக அரசியல்வாதிகள் ஏன்?

(சென்னை, தமிழ்நாடு) வரவிருக்கின்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்கள் மிகவும் வீரியம் பெற்றிருக்கும் நிலையில், தி.மு.கவின் வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ஜகத்ரட்சகன் அவர்களின் குடும்ப நிறுவனம் அம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத் திட்டத்தில் பெரு முதலீடு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. முன்னதாக, இலங்கை ஒற்றையாட்சி அரசின் முதலீட்டுக் குழுமம் (Board of investment) தெரிவித்த கருத்தினை முன்வைத்து தமிழகத்தின் இந்து ஆங்கிலப் பத்திரிகையில் மீரா சிறீனிவாசன் எழுதிய கட்டுரையினால் இக்கருத்து தமிழக வட்டத்தில் பேசும் பொருளாய் மாறியிருக்கின்றது. தேர்தல் காலத்தில் திட்டமிடப்பட்டு பரப்பப்பட்டதா எனவும் தமிழக அரசியல் வட்டாரங்களில் சர்ச்சை எழுந்துள்ளது.