கட்டுரை: விளக்கக்கட்டுரை: நிரல்
நவ. 15 23:33

பேசுபொருளாகியுள்ள “நந்திக்கடல் பேசுகிறது” நூல்

(திருகோணமலை, ஈழம்) முள்ளிவாய்க்கால் இறுதிக்கண அனுபவங்களில் ஆரம்பித்து கடந்த பத்தாண்டுகளில் ஈழத்தமிழர் சந்தித்துவரும் சவால்கள் தொடர்பான நாற்பது கட்டுரைகளை நந்திக்கடல் பேசுகிறது எனும் நூலில் தொகுத்துள்ளார் வன்னியைச் சேர்ந்த விவரணவியலாளர் ஜெரா. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதை அந்தக் கூட்டமைப்பினருக்கே நினைவுபடுத்தும் இந்நூலுக்கு சாவகச்சேரியில் மாமனிதர் ரவிராஜ் நினைவுநிகழ்வில் சம்பந்தனின் கைகளாலேயே விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டமை சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. போராட்டத்தின் அறத்தைப் பேசுகிறது இந்நூல் என்கிறார் ஊடகத்துறைக் கலாநிதி ரகுராம். கட்சி விருதுகள் நூலின் மாண்பைக் குறைத்துவிடாதென்கிறார் மரபுரிமைச் செயற்பாட்டாளர் நவநீதன். விண்ணப்பித்து வழங்கப்படாத விருதென்கிறார் தொகுப்பாசிரியர் ஜெரா.
ஒக். 29 05:01

ஈழத் திரையுலகில் புதிய அத்தியாயம் திறக்கும் “சினம்கொள்”

(யாழ்ப்பாணம், ஈழம்) ஈழத்தமிழர்களின் பின்போர்க்கால வாழ்வியலைச் சித்தரிக்கும் அபூர்வமான திரைப்படைப்பாகப் பலத்த வரவேற்பை சினம்கொள் என்ற முழு நீளத்திரைப்படம் பெற்றுள்ளது. இதன் இயக்குநரான ரஞ்சித் ஜோசப் தனது மதிநுட்பமான திரையாடலால் (screenplay) இலங்கை ஒற்றையாட்சி அரசு தமிழ்க்கலைஞர்கள் மீது விதித்திருக்கும் மூன்று நிர்ப்பந்தங்களுக்கூடாகவும் சுழியோடியிருக்கிறார். அது மட்டுமல்ல, பதினோர் இடங்களில் ஒலியைச் சற்றே தணிக்கை செய்தால் போதும் என்ற நிபந்தனையோடு இந்தியாவின் தணிக்கைக் குழுவின் அங்கீகாரத்தை வென்றெடுத்த முதலாவது ஈழத்தமிழர் போராட்டம் சார்ந்த திரைப்படைப்பாகவும் சினம்கொள் விளங்குகிறது. முழுமையாக ஈழத்தமிழ்க் கலைஞர்களின் நடிப்பில் வடக்கின் மூன்று மாவட்டங்களில் எழுபது இடங்களில் சினம்கொள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
ஒக். 27 17:13

இலங்கையின் றொக்கற் மனிதனாக ராஜபக்ச பேரம் பேசுகிறார்

(மன்னார், ஈழம்) இலங்கைத் தீவின் பலமான மனிதன் (ஸ்ரோங் மான்) என்று வெளியுலக ஆங்கில ஊடகங்களால் வர்ணிக்கப்பட்டுவரும் மகிந்த ராஜபக்ஷ, வட கொரியாவின் விண்கலம் ஏவும் மனிதன் (றொக்கற் மான்) கிம் ஜொங்-உன் போல அமெரிக்காவுடன் இயைந்து போகும் மனப்பாங்குள்ளவன் என்ற அடிப்படையிலேயே வெள்ளிக்கிழமை மாலை கனகச்சிதமாக அரங்கேற்றப்பட்டிருக்கும் தென்னிலங்கை அரசியலின் அடுத்த கட்ட நகர்வுகள் அமைந்திருக்கின்றன. ராஜபக்ஷ சீனாவுடன் அல்ல அமெரிக்காவுடனே தனது ஆழமான அரசியலை மேற்கொண்டுள்ளார். இதையே அமெரிக்காவும் உசிதமாகப் பார்க்கிறது. ஆக, பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டி விடுகின்ற கேந்திர அரசியலுடன் சேர்ந்து விளையாடப்போகும் தென்னிலங்கைப் பேரினவாதிகளின் அடுத்தகட்ட விளையாட்டுத் தான் என்ன?
ஒக். 25 01:02

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதே பிறழ்வுக்கு பலியாகாது விலகி நடப்பது எவ்வாறு?

(மட்டக்களப்பு, ஈழம்) தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கொள்கை பிறழ்ந்த தேர்தல் விஞ்ஞாபனத்தை உச்சாடனம் செய்தவாறு தனது புதிய கட்சி தொடர்பான அறிவித்தலை புதனன்று தந்திருக்கிறார் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன். தாம் பிறழ்த்திய கொள்கையைக்கூடத் தாமே கடைப்பிடிக்காது திரிபுபடுத்தும் தமிழரசுக் கட்சியின் தலைமையை விட நீதியரசர் விக்னேஸ்வரன் ஆயிரம் மடங்கு நேர்மையானவர். ஆகவே தமிழர் தரப்பு அரசியற்கட்சிகளுக்குள் ஒரு நல்ல தலைமை தரவல்ல ஒரு தந்தையாகப் பரிணாமம் பெறும் அவரை மனமார்ந்து வரவேற்கவேண்டியது ஈழத் தமிழ்த் தேசியப் பற்றுள்ள அனைவரதும் கடன். அதேவேளை, நீதியரசரும் தமிழ் மக்கள் பேரவையும் இன்ன பிறரும் சேர்ந்து பிறழ்ந்திருக்கும் கொள்கை என்ன என்பதையும் ஈழத்தமிழ் மக்கள் விளங்கியிருந்தாலே தமது தலைமையை நேர்வழியில் ஆற்றுப்படுத்தமுடியும்.
செப். 30 14:37

சமூகநீதி வரலாற்றைச் சுமக்கும் தமிழ்நாடு கடந்துவந்த பாதை

(சென்னை, தமிழ்நாடு) இந்திய அளவில், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்குதல் தொடர்பாக ஆராய 1979 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு, 1983 இல் அறிக்கை வழங்கப்பட்டாலும், இந்திய ஒன்றியப் பிரதமர் வி.பி.சிங்க் தான் மண்டல் ஆணையப் பரிந்துரைகளை (50% இடஒதுக்கீடு) நிலைநாட்டினார். இந்திய ஒன்றியத்தின் பிற மாநிலங்கள் 35-50% இடஒதுக்கீட்டையே பின்பற்றி வருகிறபொழுதும் தமிழகத்தில் 69% இருந்து வருகிறது. இதற்கு எதிராக தொடர்ந்தும் நீதிமன்றங்களில் உயர்சாதி வகுப்பினர் வழக்குத் தொடுத்து வருகிறபொழுதும் வெல்லமுடியவில்லை. அடுத்தடுத்து வரவிருக்கிற ஆபத்துக்களை எதிர்கொள்ள முழு வரலாறை அனைவரும் அறிந்துக்கொள்ளும் நோக்கில் கூர்மை சமூகநீதி வரலாற்றைத் தொகுத்து வெளியிடுகிறது.
மே 25 11:51

இலங்கை தொடர்பான ஆவணங்களை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு அழிப்பு

இலங்கை சார்ந்த ஏறக்குறைய 200 ஆவணங்களை, குறிப்பாக விடுதலைப்புலிகளின் எழுச்சிக்காலத்தில் பிரித்தானியாவின் உளவுத்துறையும் விசேட விமானத்துறையும் இலங்கை பாதுகாப்பு படைகளுக்கு அறிவுரைகள் கொடுத்தது பற்றிய ஆவணங்களை, பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சு அழித்துள்ளதென்பதை பில் மில்லர் எனும் மனித உரிமை ஆய்வாளர் பிரித்தானியாவின் பிரபல பத்திரிகையான கார்டியன் பத்திரிகையில் ஆதார பூர்வமாக அண்மையில் வெளியிட்டிருந்தார். இந்த ஆவணங்கள் அழிக்கப்பட்டதால், பிரித்தனியா அரசு இலங்கை அரசுடன் அக்காலத்தில் இணைந்து வேலை செய்தது பற்றிய ஆதாரங்களும் அழிக்கப்பட்டுவிட்டன. பில் மில்லரின் கட்டுரையின் உள்ளடக்கம் இங்கு தமிழில் தரப்படுகிறது.