கட்டுரை: நிரல்
ஓகஸ்ட் 14 15:29

காஷ்மீர் பிரிப்பு- மகிந்தவுடன் பாகிஸ்தான் தூதுவர் பேசியதன் பின்னணி

(யாழ்ப்பாணம், ஈழம்) இந்தியாவின் ஜம்முகாஷ்மீர் மாநிலம் இரண்டு நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டமை சர்வதேசச் சட்டம் ஒன்றை மீறிய செயல் என்று கொழும்பில் உள்ள இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் மேஜர் ஜெனரல் ஷாஹிட் அஹமட் ஹஸ்மத் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் கூறியுள்ளார். ஜம்முகாஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டமை தொடர்பாக நேற்றுச் செவ்வாய்க்கிழமை சந்தித்து தூதுவர் விளக்கமளித்துள்ளார். ஜம்முகாஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டமை தொடர்பாக தனது அரசியல் கருத்தை வெளியிட்ட முதலாவது தலைவர் மகிந்த ராஜபக்ச என்றும் பாகிஸ்தான் தூதுவர் மேஜர் ஜெனரல் ஷாஹிட் அஹமட் ஹஸ்மத் பாராட்டியதாகக் கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஓகஸ்ட் 13 15:46

சஜித் பிரேமதாசவைப் பொது வேட்பாளராக அறிவிக்க மைத்திரி திட்டம்!

(வவுனியா, ஈழம்) இலங்கையில் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை நியமிக்க வேண்டுமென கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் பலரும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். மாத்தறை, அம்பாந்தோட்டை, பதுளை உள்ளிட்ட பல பிரதேசங்களில் கட்சி உறுப்பினர்கள் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவாகச் செயற்பட்டு வருகின்றனர். சஜித் பிரேமதாசாவை ஜனாதிபதியாக்குவதே தமது நோக்கமென அமைச்சர் ஹரின் பொர்ணான்டோ கூறியுள்ளார். பதுளைப் பிரதேசத்தில் நேற்றுத் திங்கட்கிழமை சஜித் பிரேமதாசவுக்கு மாபெரும் வரவேற்பு நிகழ்வு ஒன்றும் இடம்பெற்றது.
ஓகஸ்ட் 11 22:17

வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ச - அறிவிப்புக்கு முன்னர் மகிந்தவைச் சந்தித்த அமெரிக்கச் செயலாளர்

(வவுனியா, ஈழம்) இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடுவாரென கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கட்சியின் பொதுச் சபைக் கூட்டத்தில் மகிந்த ராஜபக்ச அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு முன்னதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியின் தலைவராக மகிந்த ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டார். கட்சியின் பொதுச் சபைக் கூட்டம் இன்று பிற்பகல் இடம்பெறுவதற்கு முன்னர் அமெரிக்காவின் மத்திய மற்றும் தென்னாசியாவிற்கான பதில் உதவி செயலாளர் அலைஸ் வெல்ஸ், கொழும்பிலுள்ள இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிஸ்ட் மஹிந்த ராஜபக்சவைச் சந்தித்து இரண்டு மணிநேரம் உரையாடினர்.
ஓகஸ்ட் 09 14:28

இந்தியாவின் உள் விவகாரமா? மோடியைப் பாராட்டும் ரணில்

(வவுனியா, ஈழம்) ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு நிர்வாக அலகுகளாகப் (Union) பிரிக்கப்பட்டு இந்திய மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதை இலங்கையில் சிங்கள ஆட்சியாளர்களும் கண்டியை மையப்படுத்திய பௌத்த பீடங்களின் மகாநாயக்கர்களும் வரவேற்றுள்ளனர். ஏனெனில் ஐக்கிய நாடுகள் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டே ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சுயநிர்ணய உரிமை வழங்கப்பட்டிருந்தது. 1947 ஆம் ஆண்டு அப்போதைய இந்தியப் பிரதமர் நேருவினால் பரிந்துரைக்கப்பட்டு இந்திய நாடாளுமன்றத்தில் சட்டமாக அங்கீகரிக்கப்பட்டு 1954 ஆம் ஆண்டு நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தது. இந்த நிலையில் நரேந்திரமோடி அரசு தன்னிச்சையாகப் பிரிந்துள்ளமை ஈழத் தமிழர்களின் சுயமரியாதைக்கு விழுந்த மற்றுமொரு அடியாகவும் சிங்களத் தேசம் கருதுகின்றது.
ஓகஸ்ட் 01 11:05

மகாநாயக்கத் தேரர்களைத் திருப்திப்படுத்தும் வேட்பாளர் தெரிவுகள் - பின்னணியில் அமெரிக்கா!

(யாழ்ப்பாணம், ஈழம்) பௌத்த மகாநாயக்கத் தேரர்களையும் பௌத்த குருமாரையும் திருப்திப்படுத்தும் ஜனாதிபதி வேட்பாளர்களையே பிரதான சிங்கள அரசியல் கட்சிகள் தெரிவு செய்ய முற்படுகின்றன. மகிந்த ராஜபக்சவின் ஆட்சியைக் கவிழ்த்து 2015 ஆம் ஆண்டு மைத்திரி - ரணில் அரசாங்கத்தை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்திருந்த அமெரிக்கா, தற்போது பௌத்த குருமாரின் விருப்பங்களுக்கு மாறாகச் செயற்பட விரும்பாத நிலையில் பிரதான சிங்கள அரசியல் கட்சிகளும் பௌத்தகுருமாரின் விருப்பங்களுக்குரிய ஜனாதிபதி வேட்பாளர்களை தெரிவு செய்வதில் ஆர்வம் காண்பிப்பதாக கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன. மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சி ஏற்கனவே சிங்கள பௌத்தர்களின் வாக்குகளை மாத்திரமே நம்பிச் செயற்படுன்றது.
ஜூலை 22 22:45

கன்னியா பற்றிய தொல்லியல் வர்த்தமானி சட்டவலு அற்றது - சுமந்திரன்

ஆதாரமற்ற அடிப்படைகளில் கன்னியா தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்கிறது. அரசியலமைப்பின் தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் 18 ஆம் பிரிவுக்கு அமைவாக தனியார் காணியையும் சுவீகரிக்கலாம் என்ற வாதத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆகவே தொல்பொருள் திணைக்களமே தனியார் காணி என்பதை ஒத்துக்கொள்கின்றது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் வாதிட முயல்கிறார். தற்போது எழுந்துள்ள சர்ச்சையில் தலையிடுவதற்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கோ, நாடாளுமன்றச் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கோ சட்ட ரீதியான எந்தவிதமான அதிகாரங்களும் இல்லையெனவும் அவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் திங்களன்று தெரிவித்தார்.
ஜூலை 19 16:20

பேச்சுவார்த்தைக் காலத்து நமது ஈழநாடு ஆசிரியர் தலைப்புகளின் தொகுப்பு

(யாழ்ப்பாணம், ஈழம்) விடுதலை வேண்டி நிற்கும் தேசிய இனங்களுக்கு ஊடகங்களின், குறிப்பாக பத்திரிகைகளின் பங்களிப்பு முக்கியமானது. செய்திப் பத்திரிகைகள் ஒவ்வொன்றும் உள்ளக மற்றும் உலக விவகாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதினாலும் தான் சார்ந்து நிற்கும் கமூகத்தின் உரிமைகளையும் தேசத்துக்கான அங்கீகாரத்தையும் கருத்தில் கொண்டே செயற்பட வேண்டும். ஆசிரிய பீடத்தின் கொள்கை அதுவாகவே இருக்கவும் வேண்டும். அந்த அடிப்படையில், யாழ்ப்பாணத்தில் வெளியாகிய நமது ஈழநாட்டின் ஆசிரியர் தலையங்கங்கள் முக்கியமாகிறது. 2002- 2003 ஆம் ஆண்டுகளில் ஈழநாடு பத்திரிகையின் பிரதம ஆசிரியராகப் பதவி வகித்திருந்த கலாநிதி எஸ். ரகுராம் எழுதிய ஆசிரியர் தலையங்கங்கள் தொகுக்கப்பட்டு உங்களை எதிர்பார்த்திருக்கிறது சமூகம் என்ற தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டுள்ளது.
ஜூலை 16 23:22

கன்னியா விவகாரம்- பிக்குகளின் பின்னணியில் தமிழ் இராவணசேனையுமா?

(திருகோணமலை, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் அனுமதியோடு, தமிழ் பேசும் கிழக்குத் தாயகத்தின் திருகோணமலை கன்னியா வெந்நீரூற்றுப் பிள்ளையார் ஆலயத்தை உடைத்துப் புத்த தாதுக் கோபுரம் கட்டும் நடவடிக்கைக்குப் பின்னணியில் நரேந்திர மோடியின் இந்துத்துவா அமைப்பின் கொள்கைகளை கிழக்கு மாகாணத்தில் முன்னெடுத்து வரும் புதிய தமிழ் அமைப்பான இராவணசேனையும் செயற்படுவதாக திருகோணமலை மக்கள் பலா் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக இராவணசேனை அமைப்பின் தலைமைச் செயலாளர் கு. செந்தூரனை கூர்மைச் செய்தித் தளம் தொடர்பு கொண்டு கேட்டபோது, இராவணசேனை அமைப்புக்கும் இந்துத்துவாவுக்கும் எதுவிதமான தொடர்புகளும் இல்லையென்று கூறினார்.
ஜூன் 29 09:37

போரால் பாதிக்கப்பட்ட பெண்களைப் பாதிக்கும் நுண்நிதிக் கடன்

(முல்லைத்தீவு, ஈழம்) போரின் தாக்கத்திலிருந்து தமிழ் சமூகம் படிப்படியாக மீண்டெழுந்துவரும் நிலையில், நுண்நிதிக் கடன் பிரச்சனை, தமிழ் மக்கள் குறிப்பாக தமிழ் குடும்பத் தலைவிகளை பெரும் நெருக்கடிகளுக்கு ஆளாக்கி வருவதுடன் தற்கொலைக்குத் தூண்டும் ஒரு நடவடிக்கையாக அமைவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில் மக்கள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர முன்னரே, நுண்நிதிக் கடன் நிறுவனங்கள் வடபகுதியை ஆக்கிரமித்துள்ளதாக கடந்த 10 வருடங்களாக பல தரப்பினராலும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
ஜூன் 23 16:55

அரசியல் குழப்பத்திற்குக் காரணம் 19 ஆவது திருத்தம்- மைத்திரி

(வவுனியா, ஈழம்) மகிந்த ராஜபக்சவின் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டால் இலங்கையில் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும். இனப்பிரச்சினைக்கும் தீர்வைக்காணலாம் என்ற நம்பிக்கைளை மக்கள் மத்தியில் விதைத்தே 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதி ஆட்சி மாற்றம் என்ற பெயரில் மைத்திரி- ரணில் அரசாங்கம் உருவாக்கப்பட்டது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகமும், இந்தியா போன்ற நாடுகளும் இணைந்து தமக்கு இசைவான ஆட்சியாளர்கள் என்று நம்பியே நல்லாட்சி என்று கூறி மைத்திரி- ரணில் கூட்டு உருவாக்கப்பட்டது. மாற்றம் என்ற சூடு காய்வதற்கு முன்னர், இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பில் 2014 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச உருவாக்கிய 18 ஆவது திருத்தச் சட்டத்தில் இருந்த ஜனாதிபதிக்குரிய சர்வாதிகாரத் தன்மைகள், 2016 ஆம் ஆண்டில் திருத்தியமைக்கப்பட்டன.