கட்டுரை: செய்திக்கட்டுரை: நிரல்
மே 15 22:42

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது எப்படி?

(யாழ்ப்பாணம், ஈழம்) சந்திரிகாவின் ஆட்சியில் 1999. 2000 ஆம் ஆண்டுகளில் நான் வீரகேசரியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது ஈபிஆர்எல்எப் செயலாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன். ரெலோ இயக்க முதல்வர் சிறிகாந்தா, புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தாத்தன். ஈபிடிபி செயலாளர் டக்ளஸ் தேவானந்தா, தமிழர் விடுதலைக் கூட்டணியின் உப தலைவர் ஆனந்த சங்கரி ஆகியோரை நேர்காணல் செய்து தொடர்ச்சியாக ஒவ்வொரு வாரமும் எழுதினேன். அதே காலப்பகுதியில் தினக்குரல் பத்திரிகையில் ரவிவர்மன் என்ற செய்தியாளர் இவர்களைத் தொடர்ச்சியாகப் பேட்டி கண்டு எழுதினார். விடுதலைப் புலிகளை விமர்சிப்பதைவிட சந்திரிகா ஆட்சியின் ஏமாற்றுக்களையே இவர்கள் தமது நேர்காணல்களில் கூடுதலாகக் குறிப்பிட்டிருந்தனர்.
மே 11 19:49

இலங்கை நீதித்துறையை விமர்சிக்க முடியுமா?

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் நீத்துறையை விமர்சிக்க ஊடக ஒழுக்க விதிகளில் இடமில்லை எனவும் இலங்கை அரசியலமைப்புக்கு அமைவாக ஊடகங்களில் நீதித்துறையை விமர்சித்தால் அது சட்டச் சிக்கலை ஏற்படுத்தும் என்றும் ஊடகவியலாளர்கள் பலர் கருதுகின்றனர். ஆனால் நீதித்துறையை விமர்சிக்க முடியும். எந்த அடிப்படையில் என்றால்...? ஈழத் தமிழர் அரசியல் வாழ்வுரிமைகளோடு கூடிய நியாப்பாடுகளைச் சுட்டிக்காட்டி எழுதும்போது, இலங்கை நீதித்துறையை விமர்சிக்கவும், குற்றம் சாட்டவும் முடியும். நீத்துறையின் நம்பகத் தன்மை குறித்த விடயங்களையும் கேள்விக்கு உட்படுத்த முடியும்.
ஏப். 10 22:55

கெல்ப்பிங் அம்பாந்தோட்டை நிதியமும் கோவிட்- 19 நிதியமும்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையில் 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி சுனாமிப் பேரலை ஏற்பட்டபோது பல்வேறு நாடுகள் நிதியுதவி வழங்கியிருந்தன. உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட பல சர்வதேசப் பொது நிறுவனங்களும் உதவியளித்திருந்தன. அதனையும் தாண்டி அப்போது பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச சுனாமியால் பாதிக்கப்பட்டிருந்த தன்னுடைய சொந்த ஊரான அம்பாந்தோட்டைப் பிரதேச மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் பிரதேசத்தை அபிவிருத்தி செய்யவும் கெல்ப்பிங் அம்பாந்தோட்டை என்ற பெயரில் நிதியம் ஒன்றை அமைத்திருந்தார். அப்போது ஜனாதிபதியாக சந்திரிகா பதவி வகித்திருந்தார்.
மார்ச் 18 22:19

இலங்கையுடன் சீன அபிவிருத்தி வங்கி ஒப்பந்தம்- 500 மில்லியன்கள் அமெரிக்க டொலர் நிதியுதவி

(யாழ்ப்பாணம், ஈழம்) கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச ஆகியோரை மையமாகக் கொண்ட இலங்கை அரசாங்கம், சீன அபிவிருத்தி வங்கியுடன் (China Development Bank) (CDB) ஐநூறு மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியுதவியாகப் பெறக் கூடிய ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது. இது தொடர்பாக இலங்கை அரசாங்கம் இன்று புதன்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பத்து ஆண்டுகள் கடன் திட்ட அடிப்படையிலேயே இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு சீன அபிவிருத்தி வங்கி ஒரு பில்லியன் நிதியை கூட்டுக் கடன் (syndicated loan) திட்ட அடிப்படையில் வழங்கியிருந்தது. ஆனாலும் அ்ந்தக் கடனு்க்கான கால எல்லையும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் மேலும் எட்டு ஆண்டுகள் நீடிக்கப்பட்டுள்ளன.
மார்ச் 15 22:42

சீனப் பயணிகளுக்கு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனையில்லை

(மன்னார், ஈழம் ) கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதைத் தடுக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்தாலும், சீனாவில் இருந்து இலங்கைக்கு வருகின்ற சீனப் பயணிகளுக்கு கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் எந்தவொரு பரிசோதனைகளும் இன்றி நேரடியாகக் கொழும்பு நகருக்குள் வருவதற்கு அனுமதியளிக்கப்படுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் பயணிகளைச் சோதனையிட்டுப் பின்னர் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்களில் 14 நாட்கள் தங்க வைக்கப்படுகின்றனர். சீனாவுக்கு அடுத்ததாகக் கொரோனா வைரஸ் தாக்கத்துக்குள்ளான இத்தாலி நாட்டில் இருந்து வரும் பயணிகள், சிறப்பு முகாம்களில் 14 நாட்கள் தடுத்து வைக்கப்படுகின்றனர்.