கட்டுரை: செய்திக்கட்டுரை: நிரல்
ஜூன் 26 12:57

வரலாற்றுப் பாடநூல்களில் பௌத்த சமயத்திணிப்பும் பல்கலைக்கழகத் தமிழ்ச் சமூகத்தின் கவனயீனமும்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் கீழான இலங்கைத் தேசியம் என்பதற்குள், ஈழத்தமிழர்களையும் இணைத்துவிட வேண்டுமென்ற நோக்கம் 2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில், சிங்கள அரசியல் கட்சிகளிடையே மேலோங்கி வருகின்றது. இதன் உச்சத்தை 2015ஆம் ஆண்டு மைத்தரி- ரணில் அரசாங்கத்தில் காணமுடிந்தது. இலங்கைத் தேசியத்தை மையமாகக் கொண்டு தமிழ்த்தேசிய அரசியல் நீக்கத்துக்கான முதற்கட்ட ஏற்பாடாகவே ஜெனீவா மனித உரிமைச் சபையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணைக்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரனை வழங்கியிருந்தது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அதற்கு ஒத்துழைப்பும் கொடுத்திருந்தது. 
ஜூன் 19 13:39

மேற்குலகை நம்பிய இரு பிரதான சிங்களக் கட்சிகளும் இன்று பிளவுபட்டுக் கிடக்கும் அவலம்

(யாழ்ப்பாணம், ஈழம்) குறிப்பிட்ட நாடொன்றில் அமெரிக்கா தலையிட வேண்டுமெனக் கருதினால், அந்த நாட்டில் ஏதேனும் பிரச்சினையேற்படும்போது. அங்கு உதவி செய்வதாகக் கூறிக்கொண்டு அமெரிக்கா நுழைந்துவிடுமென நவோமி க்ளீன் என்ற கனேடிய எழுத்தாளர் எழுதிய த ஷொக் டொக்ரின் (The Shock Doctrine) என்ற நூலில் கூறுகிறார். அதாவது உதவி என்ற பெயரில் ஒரு நாட்டில் வாழும் இனங்களிடையே குழப்பங்கள், முரண்பாடுகள் உருவாக்கப்பட்டு அது ஆயுத மோதலாகக் கூட மாறிவிடலாம் என்பது ஒன்று, மற்றையது அந்த நாட்டில் உள்ள பிரதான அரசியல் கட்சிகள் பிளவுபடுவது அல்லது புதிய கட்சிகள் உருவாகுவது போன்றவற்றைக் குறிக்ககுமென அர்த்தப்படுத்தலாம்.
ஜூன் 11 15:12

பூகோள அரசியலுக்கு ஏற்ப ரணில் விக்கிரமசிங்கவை அணைக்க முற்படும் ராஜபக்ச ஆட்சி

(யாழ்ப்பாணம், ஈழம்) கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டு, மகிந்த ராஜபக்ச பிரதமராகப் பதவியேற்றதும் 2009ஆம் ஆண்டு இறுதிப் போரை நடத்திய ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டனரெனத் தமிழர்கள் அங்கலாய்க்கின்றனர். முற்போக்கான சிங்கள மக்கள் மத்தியில் அதிகாரத் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டனர் என்ற கவலையும், இஸ்லாமியர்கள் என்ற காரணத்தால் தம்மை ஒரங்கட்ட முற்பட்டவர்கள் மீண்டும் பதவிக்கு வந்துவிட்டனர் என்ற அச்சம் முஸ்லிம் மக்கள் மத்தியிலும் உருப்பெற்றதுவிட்டது எவ்வாறாயினும் தமிழ் முஸ்லிம் மக்களைவிட சிங்கள மக்களில் பெரும்பான்மையோர் ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததையிட்டு மகிழ்ச்சியடைந்தனர் என்பதை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியிருந்தன.
ஜூன் 04 22:09

தொல்பொருள் ஆராய்ச்சிக்கு ஜனாதிபதி செயலணி- இன அடையாளங்கள் அழிக்கப்படும் ஆபத்து

(மட்டக்களப்பு, ஈழம் ) இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச. தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள பதினொருபேர் கொண்ட ஜனாதிபதி செயலணி ஒன்றை உருவாக்கியுள்ளார். தமிழ், முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள அந்த மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எவரும் ஜனாதிபதி செயலணிக்குழுவில் இடம்பெறவில்லை. இது தொடர்பாக தமிழ் முஸ்லிம் கட்சிகள் அதிகாரபூர்வமாக கண்டனங்கள் எதனையுமே வெளியிடவில்லை. பௌத்த மகா சங்கத்தின் ஆலோசனைக் குழுவின் ஏற்பாட்டில் கடந்த வாரம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் இந்தச் செயலணி அமைக்கப்பட்டது
ஜூன் 02 21:04

சாதாரண கட்சி அரசியலில் ஈடுபட்டால், தேசம் என்பதைக் கட்டியெழுப்ப முடியுமா?

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் அரசியலமைப்புக்குள் நின்று கொண்டு அதுவும் சாதாரண கட்சி அரசியல் செயற்பாடுகளின் ஊடான தேர்தல் அரசியலில் மாத்திரம் தமிழ்க் கட்சிகள் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. இவ்வாறானதொரு நிலையில் தமிழ்த்தேசியப் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வைக் காண முடியும் என்ற கேள்விகள் எழுவது இயல்பானது. எழுபது ஆண்டுகளுக்கும் மேலான ஈழத்தமிழர் அரசியல் போராட்ட வரலாற்றில் அதுவும் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான ஒரு தசாப்த காலம் சென்றுவிட்ட நிலையில், தற்போது தேர்தல் அரசியல்தான் கதியென்ற நிலைப்பாட்டில் அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் இயங்குவதை வெளிப்படையாகவே அவதானிக்க முடிகிறது.