கட்டுரை: செய்திக்கட்டுரை: நிரல்
பெப். 10 09:14

ராஜபக்ச அரசாங்கத்துக்கு மார்ச் மாதம் வாய்ப்பா, சவாலா?

(முல்லைத்தீவு) இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் புதுடில்லிக்குச் சென்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உட்பட பலரைச் சந்தித்துள்ள நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி இலங்கைக்கு பயணம் செய்யவுள்ளார். இலங்கையில் எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள பிம்ஸ்டெக் எனப்படும் பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார கூட்டுறவிற்கான வங்காள விரிகுடா முயற்சி (The Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation- BIMSTEC) மாநாட்டில் கலந்துகொள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட பிம்ஸ்டெக் அமைப்பின் தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளின் ஜனாதிபதி, பிரதமர்கள் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.
பெப். 06 22:50

கிட்டு பூங்கா பிரகடனத்தோடும் 13 ஐ கோரும் கடிதத்துடனும் முன்னணி உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகள் மௌனம்

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் உள்ள 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கோரி பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் அனுப்பிய தமிழ்த் தேசியக் கட்சிகளும், அதற்கு எதிராகவும் கண்டித்தும் பேரணி நடத்தி யாழ் கிட்டு பூங்காவில் பிரகடனம் நிறைவேற்றிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் அமைதியாக இருக்கும் நிலையில், எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனீவா மனித உரிமைச் சபையைக் கையாளும் உத்திகளை இலங்கை மிக நுட்பமாக மேற்கொண்டு வருகின்றது. வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இரண்டு நாள் பயணம் ஒன்றை மேற்கொண்டு இந்தியாவுக்குச் சென்றுள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை புதுடில்லி சென்றடைந்த அமைச்சர் பீரிஸை இந்திய வெளியுறவு அமைச்சின் இணைச் செயலாளர் அரிந்தம் பாக்சி வரவேற்றார்.
பெப். 02 08:04

இலங்கை ஒற்றையாட்சியை பலப்படுத்த அமெரிக்க- இந்திய அரசுகள் முயற்சி

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கைத்தீவில் ஆட்சி மாற்றம் ஏற்றபடுத்தப்பட வேண்டுமானால் அமெரிக்க- இந்திய அரசுகளும் அதனோடு இணைந்த உள்ளூர் மற்றும் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களும் கூட்டுச்சேர்ந்தே முன்னர் செயற்பட்டிருந்தன. இருந்தாலும் 2015 ஆம் ஆண்டு மைத்திரி- ரணில் அரசாங்கத்தை உருவாக்கி அதனால் ஏற்பட்ட தோல்வியின் பின்னரான சூழலில், ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதானால், வேறு வழிமுறைகளைக் கையாளும் உத்திகள் குறித்து மேற்கத்தைய நாடுகள் சிந்திக்க ஆரம்பித்துள்ளனபோல் தெரிகின்றது. சிங்கள மக்களும் சிங்கள ஆட்சியாளர்களும் விரும்புகின்ற இலங்கை ஒற்றையாட்சியைப் பலப்படுத்தித் தமது புவிசார் நலன்களைப் பெறுவதிலும் அமெரிக்க- இந்திய அரசுகள் கவனம் செலுத்துகின்றன. இதுவே இலங்கை விவகாரம் குறித்த தற்போதைய சர்வதேச அரசியல் வியூகமாகவுள்ளது.
ஜன. 30 03:55

இலங்கை தொடர்பான '13ஆம்' இராஜதந்திரம் பிரித்தானியாவில் இருந்தே கையாளப்படுகிறது

2021 செப்ரம்பரில் அவுஸ்திரேலியா, அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகள் இணைந்து AUKUS எனும் இராணுவ வியூகத்தை ஏற்படுத்தியுள்ளன. குவாட் (Quad) கூட்டில் இருக்கும் ஜப்பானும் இந்தியாவும் AUKUS கூட்டில் இல்லை. எனினும், அமெரிக்காவும் பிரித்தானியாவும் இந்தியாவுடன் நேரடியான இராணுவ ஒப்பந்தங்களை நெருக்கமாகப் பேணுகின்றன. இந்த நிலையில், இலங்கையில் இனப்பிரச்சனைக்கான தீர்வையும், சர்வதேச மனித உரிமை விடயத்தையும் இணைத்துக் கையாளும் 46/1 தீர்மானத்தின் அடுத்த கட்டத் தலைவிதி எதிர்வரும் செப்ரம்பர், ஒக்ரோபரில் தீர்மானிக்கப்பட முன்னர் அமெரிக்காவும் மனித உரிமைப் பேரவைக்குள் மீண்டும் 2022 இல் சேர்ந்துகொண்டுள்ளது.
ஜன. 30 03:39

விக்னேஸ்வரன், மோடியினதோ, இந்தியாவினதோ செல்லப்பிள்ளை அல்ல

வட மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் இந்தியாவின் அல்லது மோடியின் சொல்லுக்கும் விருப்புக்கும் மட்டும் இயங்கும் நிலையில் உள்ள ஓர் அரசியல்வாதி அல்ல. ஆனால், தனது கட்சியிலும், கூட்டிலும் கலந்தாலோசிக்காது, அதுவும் சம்பந்தனும் சுமந்திரனும் முடிவு எடுக்க முன்னதாக, அவர் ஏன் பதின்மூன்றை ஆரம்பப் புள்ளியாகக் கொள்வதாகத் திண்ணைக் கூட்டத்தில் தனது கட்சியைப் பங்கேற்கச் செய்தார், ஏன் கடைசிவரை காத்திருக்காது அவசரப் பட்டார் என்றும், இந்தியாவை விடவும் வேறு எங்கேனும் இருந்து அவருக்கு அறிவுறுத்தல் வந்தமையாற் தான் அவர் அவ்வாறு செய்தாரா என்றும் அரசியல் வட்டாரங்களிற் கேள்விகள் எழுந்துள்ளன.
ஜன. 30 03:07

எதிர்ப்பது சரி, ஆனால் முன்னணியின் இந்திய எதிர்ப்புப் பிரச்சாரம் ஆரோக்கியமானதல்ல

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பதின்மூன்றாம் திருத்தச் சட்டத்தை ஆரம்பப்புள்ளியாகக் கொண்டு தீர்வு நோக்கிப் பயணிப்பதற்கு எதிராகச் செய்யும் போராட்டம் வரவேற்கக் கூடியதே, ஆனால் இந்தியாவைப் பகைப்பது போல, அவர்களின் போராட்ட முறை அமைந்திருப்பது மூலோபாயத் தவறு என்பதை ஞாயிறு போராட்டம் நடைபெற ஒரு நாள் முன்பதாக, கூர்மை தொடர்பு கொண்டு வினவியபோது, அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம் தனது விமர்சனமாக முன்வைத்தார். அதேவேளை, இந்தியப் பிரதமருக்குக் கடிதம் வரைந்த தமிழர் தரப்புக்கான சுயாதீன அரங்கத்தை சொந்தக் காலில் நின்று உருவாக்காமல், இன்னுமொருவர் உருவாக்கியதில் இருந்து செயற்படுவதென்றால் முகவர் அரசியல் செய்யலாமே தவிர இந்தியா போன்ற சக்திகளைக் கையாளும் அரசியலைத் தமிழர்கள் ஒருபோதும் செய்ய முடியாது எனவும் அவர் விளக்கினார்.
ஜன. 29 19:26

முன்னணி, இந்தியாவை மட்டும் குறை கூறி, மக்களை அரசியல் மூடர் ஆக்குகிறது

ரெலோ-சுமந்திரன் குழு மோதலுக்கு அப்பாலும் மக்கள் முன்னணியின் "செருப்படி-வெறுப்பேற்றுப்" போராட்டங்களுக்கு அப்பாலும், வடக்கு கிழக்கை மையப்படுத்திய ஈழத் தமிழர் தேசிய அரசியலும், தென்னிலங்கைக்கான தமிழ் பேசும் மக்களின் அரசியல் நகர்வுகளும் நாகரீகமான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும். இதுவே காலத்தின் தேவை. பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய மூன்று இந்தோ-பசுபிக் சக்திகளுக்கும் ஒருசேரத் தமிழர் கட்சிகள் இணைந்து காத்திரமாகச் சொல்லவேண்டியதைத் தெளிவாகச் சொல்வதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். மீண்டும் தளர்வடையாத விக்கிரமாதித்தன் முயற்சிகளுக்கான காலம் இது.
ஜன. 27 21:33

இந்தியாவின் புவிசார் அரசியல் நலன்களுக்குள் ஈழத்தமிழர் விவகாரம்

(யாழ்ப்பாணம், ஈழம்) பாகிஸ்தான் தவிர்ந்த இலங்கை உள்ளிட்ட தெற்காசிய சார்க் (SAARC) நாடுகளின் பிம்ஸ்ரெக் (BIMSTEC) அமைப்பை மாத்திரம் இயக்குவதற்கு இந்தியா அண்மைய வருடங்களில் பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டு வரும் நிலையில் இலங்கை அதற்கான தயார்படுத்தலில் இருக்க வேண்டுமென்ற நோக்கில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர். இலங்கை வெளியுறவு அமைச்சர் பேராசியர் ஜி. எஸ். பீரிஸூடன் கலந்துரையாடியிருக்கிறார். சென்ற ஆறாம் திகதி தொலைபேசியில் உரையாடியபோதே இந்த விடயம் தொடர்பாகப் பேசியிருக்கிறார்.
ஜன. 22 06:29

இலங்கையில் நல்லிணக்கம் என்பது தமிழர் எதிர்ப்பு நிலையே

(மட்டக்களப்பு, ஈழம்) புவிசார் அரசியல் நலன் அடிப்படையில், பெருமளவு நிதிகளை இந்தியா இலங்கைக்கு வழங்கி வரும் சூழலில், சர்வதேசத்தைத் திருப்திப்படுத்த இலங்கை ஒற்றையாட்சி அரசு தனது மொழியில் கூறுகின்ற நல்லிணக்கம் என்பது தமிழர் எதிர்ப்பு நிலைதான் என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை விளக்கவுரை புடம்போட்டுக் காண்பித்துள்ளது. சர்வதேசம் கூறுகின்ற பொறுப்புக் கூறலைக்கூடச் செய்யமாட்டேன் என்பதையும் கோட்டாபய வெளிப்படுத்தியிருக்கிறார். அதாவது 'பொறுப்புக் கூறல்' என ஒன்று இல்லை, அது வெறுமனே உள்ளகப் பிரச்சனைதான் என்றே சர்வதேசத்தை நோக்கி அவர் சொல்லாமல் சொல்லியிருக்கின்றார்.
ஜன. 18 23:40

பௌத்த சிங்கள மக்களின் விருப்பத்தைப் பிரதிபலித்த கொள்கை விளக்கவுரை

(யாழ்ப்பாணம், ஈழம்) 2009 இல் இறுதிப் போரை நடத்திய இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இனப்பிரச்சனையை வெறுமனே பொருளாதாரப் பிரச்சனையாகச் சித்தரித்திருக்கும் நிலையில், தமிழரசுக் கட்சியை மையப்படுத்திய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரிடம் கடிதம் (ஆவணம்) ஒன்றைக் கையளித்துள்ளது. பிரதமர் நரேந்திரமோடிக்கு அனுப்புவதற்காக நான்கு கூட்டங்களை நடத்தித் தயாரிக்கப்பட்ட கடிதமே இன்று செவ்வாய்க்கிழமை கையளிக்கப்பட்டுள்ளது. 13 ஆவது திருத்தச் சட்டத்தை உடனடியாக அமுல்படுத்தி 13 இற்கு அப்பாலான அதிகாரப் பரவலாக்கத்தைக் கோருவதே கடிதத்தின் நோக்கம் என்று கூறப்பட்டாலும், கடிதத்தின் உள்ளடக்கத்தில் உள்ள உண்மையான விபரங்கள் எதுவும் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தப்படவில்லை.