கட்டுரை: செய்திக்கட்டுரை: நிரல்
மார்ச் 19 23:37

தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து சர்வகட்சி மாநாடாக அனைத்துக் கட்சிகளோடும் பேசத் திட்டம்

(வவுனியா, ஈழம்) அமெரிக்க- இந்திய அரசுகளின் நகர்வுகளின் அடிப்படையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்து 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான அதிகாரப் பரவலாக்கம் பற்றி உரையாடவிருந்த நிலையில், சர்வகட்சி மாநாட்டுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். சென்ற 15 ஆம் திகதி புதன்கிழமை சந்திக்கவிருந்த நிலையிலேயே சந்திப்புத் திடீரென பிற்போடப்பட்டு எதிர்வரும் 25 ஆம் திகதி சந்திப்பதென கூறப்பட்டிருந்தது. இந்தவொரு நிலையில் எதிர்வரும் 23 ஆம் திகதி இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களையும் அழைத்துக் கோட்டாபய ராஜபக்ச உரையாடவுள்ளதாகக் கொழும்பு உயர்மட்டத் தகவல்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தன.
மார்ச் 17 23:41

வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்கள் அடகுவைக்கப்பட்ட நிலையில் இலங்கைக்கு இந்தியா நிதியுதவி

(யாழ்ப்பாணம், ஈழம்) புதுடில்லிக்குச் சென்ற இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரைச் சந்தித்து உரையாடிய பின்னர் தமிழ்- முஸ்லிம் மக்களின் தாயகமான வடக்குக் கிழக்கில் உள்ள வளமுள்ள பிரதேசங்களை இந்தியா கையாள்வதற்குரிய வசதிகளுக்கான வாக்குறுதிகளை நேரடியாகவே வழங்கியுள்ளார். இதன் பின்னரே இலங்கைக்கு ஒரு பில்லியன் நிதியுதவி வழங்கும் ஒப்பந்தத்தில் இந்தியா இலங்கையுடன் கைச்சாத்திட்டிருக்கின்றது. ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக புதுடில்லியும் கொழும்பும் செய்திக் குறிப்பை வெளியிட்டிருந்தாலும் முழுமையான விபரங்கள் அதில் இல்லை. ஆனாலும் டில்லி உயர்மட்டத்தில் இருந்து சில விடயங்கள் கசிந்திருக்கின்றன.
மார்ச் 16 07:55

பொருளாதார நெருக்கடியில் இருந்து காப்பாற்றும் திட்டம்

(முல்லைத்தீவு) இலங்கை ஒற்றையாட்சிக்குள் ஈழத் தமிழர்களையும் இணங்கி வாழவைக்கும் அமெரிக்க- இந்திய நகர்வுகளின் மற்றுமொரு கட்டமாகவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கடந்த வாரம் தமிழகத்துக்குச் சென்று வந்திருக்கிறார். ரெலோ இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தனிப்பட்ட காரணங்களுக்காகக் கடந்த வாரம் தமிழகம் சென்று வந்தாலும், நிகழ்ச்சி நிரல் ஒன்றுதான். அதாவது அறிவுறுத்தும் அரசியலுக்கு (Instruction politics) உட்பட்டதே.
மார்ச் 14 10:29

இன ஒடுக்கலை மூடிமறைக்கும் மேற்குலக ஜனநாயகம்

(யாழ்ப்பாணம், ஈழம்) அமெரிக்கா, கனடா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அதாவது அமெரிக்கச் சார்பு நாடுகள் கூறுகின்ற ஜனநாயகம் என்ற கோட்பாட்டுக்குள் ரசியா இல்லை என்ற கருத்தியலின்படியே, உக்ரெயன் மீது ரசியா நடத்தும் போரைச் சர்வதேச ஊடகங்கள் வர்ணிக்கின்றன. ஆனால் ரசியாவில் தற்போது கம்யூனிசச் சாயல் மாத்திரமே உண்டு. ரசியாவும் ஒரு வகையான முதலாளித்துவமுறை (Capitalism) கொண்ட பேரரசுதான். ஜனநாயகக் கட்டமைப்பு இருப்பது போன்றதொரு தோற்றப்பாடுகளும் ரசியாவில் உள்ளன. ஆனால் ரசிய- சீன உறவு கம்யூனிச அடிப்படையிலானதல்ல. அமெரிக்கச் சார்பு நாடுகளை எதிர்க்கும் மையம் கொண்ட இராணுவ அரசியல் அது. பொருளாதாரப் பிணைப்புகளும் இந்த இரு நாடுகளிடம் உண்டு.
மார்ச் 11 00:55

பயங்கரவாதத் தடைச் சட்டத் தந்தையின் வாரிசு, சுமந்திரனிடம் கையளித்த கடிதம்

(வவுனியா, ஈழம்) இலங்கை அரசியல் யாப்பில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டிய அவசியம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனிடம் கடிதம் ஒன்றைக் கையளித்துள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டுமென்பதே தனது ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்தக் கடிதத்தை சஜித் பிரேமதாச, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடமே கையளித்திருக்க வேண்டும். ஏனெனில், சிங்களவர்களை மையப்படுத்திய இலங்கை அரசு என்ற கட்டமைப்பே பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க முழு அதிகாரமும் கொண்டிருக்கின்றது. மாறாகச் சுமந்திரனோ தமிழரசுக் கட்சியோ அல்ல.
மார்ச் 06 13:32

அமெரிக்க- இந்தியக் கூட்டு நிகழ்ச்சி நிரல் ஜெனீவாவில் அம்பலம்

(முல்லைத்தீவு) ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைச் சபை அமர்வு ஆரம்பமாகியுள்ள நிலையில், இலங்கை ஒற்றையாட்சி அரச கட்டமைப்பை பாதுகாக்கும் இரண்டு முக்கியமான கருத்துக்கள் வெளிவந்துள்ளன. ஓன்று இலங்கையின் புதிய அரசியல் யாப்பு முயற்சிக்கு ஆணையாளர் மிச்செல் பச்லெட் எதிர்பார்ப்புடன் கூடிய பாராட்டை வெளியிட்டுள்ளமை. அதாவது புதிய யாப்புக்கான நகல் வரைபு வெளிவர முன்னரே ஆணையாளர் பாராட்டியிருக்கிறார். இரண்டாவது, தமிழ் மக்களிற்குப் 13 ஆவது திருத்தத்தின் ஊடாக அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை இலங்கை அரசாங்கம் வழங்கவேண்டுமென ஜெனீவாவுக்கான இந்தியப் பிரதிநிதி இந்திராமணி பாண்டே கூறியமை.
பெப். 28 11:22

போலியான கனடா விசா- ஏமாற்றப்பட்டு வரும் தமிழ் இளைஞர்கள்

(மன்னார், ஈழம்) கனடாவுக்கு வேலை வாய்ப்பு, கல்வி, மற்றும் சுற்றுலா விசாவில் செல்ல முடியுமெனக் கூறிய கும்பல் ஒன்றிடம் தமிழ் இளைஞர்கள் பலர் ஏமாந்துள்ளதாகப் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கூறுகின்றனர். மேலும் பல இளைஞர்கள் ஏமாற்றமடையும் ஆபத்துகள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. கொழும்பு கொள்பிட்டி கீதாஞ்சலி பிளேஸில் உள்ள கனடா விசாவுக்கு விண்ணப்பிக்கும் அங்கீகாரம் பெற்ற தனியார் நிறுவனத்திற்கு (Accredited Private Company) நேரடியாகச் சென்று விண்ணப்பங்களைக் கையளித்த பின்னரே இந்த ஏமாற்று வேலை இடம்பெறுகின்றது. இந்த ஏமாற்று நடவடிக்கைகளில் கனடா விசாவுக்கு விண்ணப்பிக்கும் அங்கீகாரம் பெற்ற குறித்த தனியார் நிறுவன உயர் அதிகாரிகள் சிலருக்கும் தொடர்பிருப்பதாகவும் பாதிக்கப்படட இளைஞர்கள் சந்தேகிக்கின்றனர்.
பெப். 20 00:19

மூன்றாவது புதிய யாப்புக்கான நகல் வரைபில் 13 இல்லை

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் மூன்றாவது புதிய அரசியல் யாப்பில் 13 ஆவது திருத்தச் சட்டம் நீக்கப்பட்டு பதிலாக மாவட்ட சபை முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன. ஜெனீவா மனித உரிமைச் சபை அமர்வு நடைபெறவுள்ள நிலையில், எதிர்வரும் மார்ச மாதம் புதிய அரசியல் யாப்புக்கான நகல் வரைபு அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. 1987 இல் இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் படி உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனப் புதுடில்லி 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரானதொரு சூழலில் இலங்கையிடம் அவ்வப்போது கூறி வருகின்றது.
பெப். 14 10:49

தமிழர்களிடம் எதிரான கருத்து நிலை உருவாகாமல் அடக்கி வாசிக்கும் புதுடில்லி

(மட்டக்களப்பு, ஈழம்) புவிசார் அரசியல், பொருளாதார நலன்களை அடிப்படையாகக் கொண்டு, இலங்கையை மையப்படுத்தி இந்தியா வகுக்கும் வியூகம், அமெரிக்கா, பிரித்தானியா, ஆகிய நாடுகளின் பின்னணியோடு வெளிப்பட்டு வருகின்றது என்பதை இலங்கையின் சமீபத்திய நகர்வும் அதன் மீதான நம்பிக்கைகளும் கோடிகாட்டுகின்றன. நிதி மாத்திரமே இலங்கையின் குறிக்கோள் என்பது வல்லாதிக்க நாடுகளின் பிரதான அவதானிப்பு. அத்துடன் ஒற்றையாட்சியைப் பாதுகாக்க வேண்டுமென்ற அடிப்படை நிலைப்பாட்டோடுதான், இலங்கை கன கச்சிதமாகச் செயற்பட்டு வருகின்றது என்பதையும் இந்த வல்லாதிக்க நாடுகள் நன்கு அறிந்திருக்கின்றன.
பெப். 10 09:14

ராஜபக்ச அரசாங்கத்துக்கு மார்ச் மாதம் வாய்ப்பா, சவாலா?

(முல்லைத்தீவு) இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் புதுடில்லிக்குச் சென்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உட்பட பலரைச் சந்தித்துள்ள நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி இலங்கைக்கு பயணம் செய்யவுள்ளார். இலங்கையில் எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள பிம்ஸ்டெக் எனப்படும் பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார கூட்டுறவிற்கான வங்காள விரிகுடா முயற்சி (The Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation- BIMSTEC) மாநாட்டில் கலந்துகொள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட பிம்ஸ்டெக் அமைப்பின் தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளின் ஜனாதிபதி, பிரதமர்கள் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.