கட்டுரை: செய்திக்கட்டுரை: நிரல்
மே 01 06:51

தவறவிடப்பட்ட வாக்களிப்பும் திறக்கப்பட்டுள்ள ஆபத்தான கோணமும்

(யாழ்ப்பாணம், ஈழம்) மொத்தக் கடன்களில் ஆகக் குறைந்தது முப்பத்தைந்து பில்லியன் டொலர்களைத் திருப்பிச் செலுத்த ஒப்புக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி ரணில், இலங்கை மத்திய வங்கி அதிகாரிகளுடன் கடந்தவாரம் இடம்பெற்ற சந்திப்பில் கூறியிருந்தார். இந்த நிலையில் மூன்று பில்லியன் கடன்களைப் பெற ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியத்துடன் மார்ச் மாதம் கைச்சாத்திட்ட ஒப்பந்தம், வெள்ளிக்கிமை இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்தில் அங்கீகாரம் பெற்றுள்ளது. இதன் மூலம் சிங்கள பௌத்த தேசியப் பொது பொறிமுறைக்கும்  (General Mechanism)  அங்கீகாரம் கிடைத்திருக்கின்றது போல் தெரிகிறது. 
ஏப். 22 23:52

இந்திய ரூபாவின் பயன்பாடு - அமெரிக்க டொலருக்கு எச்சரிக்கையா? இலங்கையின் காத்திருப்பு

(வவுனியா, ஈழம்) 1983 இல் ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கும் வரையும் அமெரிக்காவுடன் இணக்கமில்லாத பரம வைரியாக இருந்த இந்தியா, ஈழப் போர் தொடங்கியதும், அமெரிக்காவுடன் சுமூகமான அரசியலைப் பேண ஆரம்பித்தது. அதற்கேற்ப இந்திய வெளியுறவுக் கொள்கையை அன்று இந்திராகாந்தி வகுத்திருந்தார். அதன் பின்னரான சூழலில் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு இந்திய ஆட்சியாளர்களும் அமெரிக்காவுடன் சீரான உறவைப் பேணி வந்தனர். 2016 இல் டொனால்ட் ட்ரம்பின் ஆட்சியின்போது நரேந்திர மோடி அமெரிக்காவுடனான உறவை மேலும் இறுக்கமாகப் பற்றிப் பிடித்தார். இருந்தாலும் ரசிய - உக்ரெயன் போர்ச் சூழலில் ஜோ பைடன் நிர்வாகத்துடன் பனிப்போர் ஏற்பட்டுள்ளதால், ரசியாவுடனான இந்திய உறவு மேலும் நெருக்கமடைந்துள்ளது.
ஏப். 16 08:44

பதின்மூன்று நடைமுறைப்படுததப்படும் என்ற உறுதிமொழியை நம்பிய இராஜதந்திரிகள்

(வவுனியா, ஈழம்) பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் பற்றி பல வழிகளிலும் இந்தியா இலங்கைக்குக் கொடுக்கும் அழுத்தங்களை சிங்கள ஆட்சியாளர்கள் குறிப்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுச் செயற்படுத்துவது போன்ற ஒரு தோற்றப்பாட்டை (Acting Appearance) காண்பித்தாலும், அமெரிக்க - சீன அரசுகளுடன் நேரடியாக உறவைப் பேணி இலங்கையின் முக்கியத்துவத்தைப் பேண வேண்டும் என்ற அரசியல் நோக்கமே விஞ்சிக் காணப்படுகின்றன. இந்தியாவுடன் உறவைப் பேணி ஆனால் இந்தியாவைக் கடந்து ஈழத்தமிழர் விவகாரத்தைக் கையாள வேண்டும் என்ற சிந்தனை சஜித் பிரேமதாச உள்ளிட்ட அனைத்து சிங்கள ஆட்சியாளர்களிடமும் உண்டு என்பது வெளிப்படை.
ஏப். 08 20:18

இலங்கைத் தேசியத்தைப் பாதுகாத்து பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் முயற்சியில் ரணில்

(யாழ்ப்பாணம், ஈழம்) 2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில், ஈழத்தமிழர்களுக்கு ஒழுங்காகக் கட்டமைக்கப்பட்ட அரசியல் கட்சி அல்லது தமிழ்த்தேசிய அரசியல் தலைமை இல்லாமல் போனது போன்று, பிரதான சிங்கள அரசியல் கட்சிகளும் பிளவுபட்டிருந்தன. ஆனால் தற்போது பௌத்த சமயத்தை மையமாகக் கொண்ட "இலங்கைத்தேசியம்" என்ற கட்டமைப்பைப் பாதுகாக்கும் நோக்கில் ஒன்றிணையும் முயற்சிகள் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2009 இறுதிப் போரின்போதும், இலங்கைத்தேசியம் என்பதைப் பாதுகாக்க கட்சி வேறுபாடுகள் இன்றி ஒன்றிணைந்தனர். 2023 இல் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள மீண்டும் ஒன்றிணைந்து செயலாற்ற முனைகின்றனர். இதன் பின்னணியில் மகாநாயக்கத் தேரர்களின் ஆசீர்வாதம் உண்டென்பது இரகசியமல்ல.
ஏப். 01 23:08

பலஸ்தீன மேற்குக் கரை மற்றும் காஸா போன்று மாறிவரும் முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை

(முல்லைத்தீவு) இஸ்ரேல் ஜெருசலேம் முழுவதையும் தனது தலைநகர் என்கிறது. பலத்தீனம் கிழக்கு ஜெருசலேத்தை தனது எதிர்கால பலத்தீனிய நாட்டின் தலைநகராக கருதுகிறது. இஸ்ரேல், முழு நகரையும் உரிமையாக்க முற்படுவதை அங்கீகரித்துள்ள அமெரிக்காவும் வேறு சில ஐரோப்பிய நாடுகளும் கடந்த ஐம்பது ஆண்டுகளில் கிழக்கு ஜெருசலேம் உள்ளிட்ட பகுதிகளில் ஆறு இலட்சம் யூதர்கள் குடியேற்றப்பட்டதைக் கண்டிக்கவில்லை. சர்வதேச சட்டங்களின்படி இக் குடியேற்றங்கள் தவறு என்றும் அமைதிக்குத் தடையாக உள்ளதாகவும் பலத்தீனம் கூறினாலும், இஸ்ரேல் அதனைத் தொடர்ந்து மறுக்கின்றது.