(வவுனியா, ஈழம்)
அமெரிக்கா - சீனா, அமெரிக்கா - ரசிய உறவுகள் இந்திய - சீனா உறவுகளுக்கான சூழலை மாற்றியுள்ளதாக புதுடில்லியைத் தளமாகக் கொண்ட மூலோபாய விவகார நிபுணரான ஜோராவர் தௌலெட் சிங் வலியுறுத்துகிறார். மேற்குலகின் கூட்டு மற்றும் மேற்கின் மதிப்பிழந்த நவதாராளவாத பூகோளவாத சித்தாந்தத்தில் தொகுக்கப்படாத பல்முனை, பல நாகரீக உலக ஒழுங்கு, இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான நடைமுறை ஒத்துழைப்பிற்கான அடிப்படையாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மொடோன்டிப்ளோமேசி (moderndiplomacy) என்ற ஆங்கில செய்தி இணையத்தளத்தில் 'இந்தியா, சீனா மற்றும் ஒரு புதிய பல்முனை, பல நாகரிக உலகம்' என்ற தலைப்பில் இன்று புதன்கிழமை இருபத்து ஆறாம் திகதி வெளியான செய்திக் கட்டுரையிலேயே இவ்வாறு வர்ணிக்கப்பட்டுள்ளது.