கட்டுரை: நிரல்
ஜன. 26 14:37

கருத்துச் சுதந்திரமா? அது கிரிமினல் குற்றம்

(மட்டக்களப்பு, ஈழம்) அரசாங்கத்தால் அவசரமாக முன்மொழியப்பட்ட நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலத்தின் ஆபத்துக்களை ஊடக அமைப்புகளும் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களும் சுட்டிக்காட்டியபோதும், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் அதனைச் செவிமடுக்கும் நிலையில் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பின் 12 (1) ஆவது சரத்தை வெவ்வேறு வழிகளில் மீறுவதற்கு இடமளிக்கக்கூடும் என்று ஊடக அமைப்புகள் எச்சரித்துள்ளன. இணையப் பாதுகாப்பு எனப்படும் நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை மீறும் ஒருவர் கிரிமினல் குற்றவாளியாகக் கருதப்படும் ஆபத்தும் உண்டு.
ஜன. 14 11:28

சர்வதேச நீதிமன்ற விவகாரம் - நுட்பமாக கையாளும் இலங்கை

(கிளிநொச்சி, ஈழம்) காசாவில் நடப்பது இன அழிப்பு என்று தென்னாபிரிக்க அரசு சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்குதல் செய்துள்ளதை அமெரிக்கா கண்டித்திருக்கிறது. ஆனால் ஐரோப்பிய நாடுகள் காசாவில் நடக்கும் தாக்குதல்களைக் கண்டிப்பதுடன் இஸ்ரேல் அரசு மீதும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. காசாவில் தொடரும் உயிரிழப்புகள் ஏற்க முடியாதவை என நியூயோர்க் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை கூட்டத்தில் இந்தியா அறிவித்துள்ளது. பலஸ்தீன காசா பகுதியில் நிலவும் சூழல் குறித்து இந்தியாவின் தற்போதைய நிலைப்பாட்டை தெரிவித்து உரையாற்றும் போது இந்தியாவின் ஐ.நாவுக்கான நிரந்தரப் பிரதிநிதி ருசிரா கம்போஜ் இவ்வாறு கூறியிருக்கிறார்.
ஜன. 06 16:14

காசாவில் இன அழிப்பு - சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாபிரிக்கா மனு

(வவுனியா, ஈழம்) பலஸ்தீன மக்கள் மீது இன அழிப்பு நடைபெறுவதாகவும் அந்தப் பெரும் சர்வதேசக் குற்றத்துக்கு இஸ்ரேலின் அரச பொறுப்பு விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்றும் காசா மீது மேற்கொண்டுள்ள படையெடுப்பை உடனடியாக விலத்திக்கொள்ளும் ஆணையையும் பிறப்பிக்கவேண்டும் என்றும் கோரி தென்னாபிரிக்க அரசு சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ள வரலாற்று முக்கியத்துவமான சர்வதேசச் சட்ட நகர்வு டிசம்பர் 29 ஆம் திகதியன்று நடைபெற்றுள்ளது. எண்பத்து நான்கு பக்கங்கள் நீளமான தென்னாபிரிக்காவின் குற்றப்பத்திரிகை கிடைத்துள்ளதை சர்வதேச நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது மட்டுமல்ல, உடனடி நடவடிக்கை தொடர்பான பகிரங்க இரண்டு நாள் அமர்வுகளை ஜனவரி 11 ஆம் 12 ஆம் திகதிகளில் நடாத்தவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
டிச. 17 19:04

இமாலயப் பிரகடனம் - பின்னணியும் வரலாறும்

(வவுனியா, ஈழம்) அதிகளவு சிங்கள உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை ஒற்றை ஆட்சி நாடாளுமன்றத்தில் ஈழத்தமிழர் தேசியச் சிக்கலுக்குரிய தீர்வை முன்வைக்க முடியாது என்பதாலேயே 'ஈழத்தமிழர் தேசியம்' என்ற கோட்பாடு எழுந்தது. சிங்களவர் ஈழத்தமிழர் ஆகிய இரு அரசியல் சமூகங்களும் தேசங்களாக ஒற்றையாட்சி நாடாளுமன்றத்திற்கு வெளியே கூட்டாக நின்று நிர்வாக அதிகாரத்தை அல்ல ஆட்சி அதிகாரத்தைப் பங்கிடுவதன் மூலமே இனப்பிரச்சினைக்குரிய நிரந்தர அரசியல் தீர்வை எட்ட முடியும். இதற்கான கூட்டுச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய தமிழ்த் தேசியக் கட்சிகள் தனித்தனியாகச் செயற்பட்டு ஒற்றையாட்சி நாடாளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றும் வியூகங்களுடன் மாத்திரம் இயங்கி வருவதால் மிகவும் பலவீனமான நிலைமை அதலபாதாளமாக வெளித் தோற்றத்துக்குத் தெரிகிறது.
டிச. 03 05:23

கூட்டுப் பொறுப்பும் முன்கூட்டிய தயாரிப்புமற்ற புதுடில்லிச் சந்திப்பு

(மட்டக்களப்பு, ஈழம்) ஜே.வி.பியின் அரசியல் கொள்கைகள் ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்கு ஏற்புடையதல்ல. ஆனால் கட்சி அரசியலுக்குரிய அத்தனை பண்புகளையும் ஜே.வி.பியின் அடித்தள உறுப்பினர்கூட பின்பற்றும் ஒழுக்கம் முதன்மை பெறுகின்றது. கட்சித் தலைமைக்குத் தெரியாமல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர்களைச் சந்திப்பதில்லை. நாடாளுமன்ற விவாதங்களில் ஒவ்வொரு விடயதானங்களிலும், தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் மாத்திரமே உரையாற்றுவர். எல்லா விடயங்களையும் எல்லா உறுப்பினர்களும் தாம் நினைத்தபாட்டிற்குப் பேச முடியாது. தேர்தலில்கூட போட்டியிடும் உறுப்பினர்கள் கட்சியின் சின்னத்தை மாத்திரமே பிரச்சாரப்படுத்துவர்.
நவ. 19 08:58

சீன திட்டங்களை தமிழ்த்தேசியகட்சிகள் ஏன் எதிர்க்க வேண்டும்?

(வவுனியா, ஈழம்) ரசிய - சீனக் கூட்டை மையப்படுத்திய பிறிக்ஸ் நாடுகளின்  மொத்த வர்த்தகத்தின் மதிப்பு ஒன்று தசம் பதினான்கு ரில்லியன் அமெரிக்க டொலர் என்று சர்வதேச நாணய நிதியத்தின் சென்ற ஓகஸ்ட் மாத அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்தியா உள்ளடங்கலாக பிரேசில், ரசியா, சீனா மற்றும்  தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து  நாடுகளை மையப்படுத்தியே அறிக்கை வெளியாகியுள்ளது. இந்திய வர்த்தக முறைகளும் இந்தியாவின் பங்களிப்பும் பிறிக்ஸ் கூட்டமைப்புக்குள் பிரதானமானது எனவும் சீன, இந்திய வர்த்தகச் செயற்பாடுகள் பிறிக்ஸ் கூட்டமைப்புக்குள் அதிகரித்த நிலையில் இருப்பதாகவும் புள்ளி விபரங்கள் காண்பிக்கின்றன. 
நவ. 16 08:07

தமிழ்த் தேசியக் கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை என்று கூறி நழுவிச் செல்லும் இந்தியா

(மட்டக்களப்பு, ஈழம்) பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழ்த்தேசியக் கட்சிகளின் ஆதரவு தேவையில்லை. ஏனெனில் 1988 இல் அறுதிப் பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் பிரதான திருத்தமாக உள்ள இந்த அரசியலமைப்புச் சட்டத்தில் தற்போது இருப்பதை முழுமையாக நடைமுறைப்படுத்த ஒரு வர்த்தமானி அறிவித்தல் போதுமானது. ஆனால், 2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் பதின்மூன்றை  நடைமுறைப்படுத்த வேண்டுமென்ற விருப்பம் சிங்கள ஆட்சியாளர்கள் எவருக்கும் இல்லை என்பதே உண்மை.
நவ. 12 01:10

மாணவர் போராட்டமும் யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும்

(வவுனியா, ஈழம்) இந்தியப் பொதுத் தேர்தலில் இந்திரா காங்கிரஸ் என அழைக்கப்படும் இந்திய தேசிய காங்கிரஸ் தோல்வியடைந்து ராஜீவ் காந்தி பதவியிழந்த பின்னர் பிரதமராகப் பதவியேற்ற பி.வி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசாங்கம் 1989 செப்ரெம்பர் மாதம் இருபதாம் திகதியன்று இந்தியப் படைகளை இலங்கையில் இருந்து வெளியேறுமாறு உத்திரவிட்டிருந்தது. அதற்கு அடுத்த நாள் இருபத்தோராம் திகதி மனித உரிமைச் செயற்பாட்டாளரும் யாழ் பல்கலைக்கழக உடற்கூற்றியல் மருத்துவருமான கலாநிதி ராஜினி திராணகம (Rajani Thiranagama) இனம் தெரியாத ஆயுதக் குழு ஒன்றினால் படுகொலை செய்யப்பட்டார். ரஜினி திரணகம ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளுடன் நெருக்கமாகச் செயற்பட்டுப் பின்னர் விலகியிருந்தார்.
நவ. 05 05:11

புலிகள் பாசிசவாதிகளா? இலங்கை அரசை பார்த்துச் சொல்ல முடியுமா?

(முல்லைத்தீவு) 1920 இலங்கைத் தேசிய இயக்கம் பிளவுபட்டு 1921 தமிழர் மகாசபை உருவாவதற்குக் காரணம் யார்? ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை விவகாரத்தில் 'இலங்கை அரசு' என்ற கட்டமைப்பு 1948 இல் இருந்து 2009 மே மாதம் வரையும் நடந்து கொண்ட முறை சரியானதா? 2009 மே மாதத்திற்குப் பின்னரான கடந்த பதினான்கு வருடங்களில் அதாவது விடுதலைப் புலிகள் இல்லாதொழிக்கப்பட்ட பின்னரான சூழலில் செயற்பட்ட முறை நீதியானதா? இங்கே நீதி தவறியது யார் புலிகளா? இலங்கை அரசா? வன்முறையை முதலில் ஆரம்பித்தது யார? புலிகளா? இலங்கை அரசா? தமிழ் முற்போக்குவாதிகளுக்கும் தமிழ் மாற்றுக் கருத்தாளர்களுக்கும் புத்தி எங்கிருந்து பிறக்கிறது? பாதிக்கப்பட்டவன் பக்கம் நின்று பேசாமல் பாதிப்புக்கு உட்படுத்தியவன் பக்கம் நின்று நியாயம் கற்பிக்க முற்படுவது மாற்றுக் கருத்தா?
ஒக். 29 07:53

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர்

(கிளிநொச்சி, ஈழம்) 2009 மே மாதம் போர் இல்லாதொழிக்கப்பட்டு பதின் நான்கு ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில் சர்வதேச அரங்கில் ஈழத்தமிழர் விவகாரம் தொடர்ந்தும் பேசுபொருளாக இருக்கின்றது. ஆனால் புவிசார் அரசியல் பொருளாதார நிலைமைகளை ஆராய்ந்து அதற்கேற்ப நகர்வுகளை முன்னெடுக்கக்கூடிய தமிழ் அரசியல் கட்டமைப்புகள் ஒழுங்கான முறையில் இல்லை. குறிப்பாக ரசிய - உக்ரெயின் போர், இஸ்ரேல் பலஸ்தீனியப் போர் ஆகிய புவிசார் அரசியல் பொருளாதாரப் போட்டிச் சூழலுக்குள் ஈழத் தமிழர்கள் மிக நுட்பமாகக் கையாள வேண்டிய திட்டங்கள் பல உண்டு. தற்போதைய உலக அரசியல் ஒழுங்குக் குழப்ப நிலைமையை இலங்கை உரிய முறையில் பயன்படுத்தி வருகின்றது.