கட்டுரை: செய்திக்கட்டுரை: நிரல்
ஒக். 24 11:48

பெண் சமத்துவ நிலைநிறுத்தலில் மீரூ இயக்கமா விடுதலைப்புலிகளா தமிழர்களுக்கான முன்னுதாரணம்?

பிரபலங்களிடையே பாலியல் கலாசாரத்தில் சமத்துவம் என்பதையே சமுதாயத்திற்கான பாலியல் சமத்துவமாகச் சித்தரிப்பதோடு தனது தேவையை முடித்துக்கொள்கிறது இன்றைய மீரூ இயக்கம். குடும்ப மட்டத்திலே பெண்களுக்கெதிரான பாலியல் சுரண்டல்களை இல்லாமற் செய்யவல்ல வேலைத்திட்டங்களை எந்தவித விளம்பரங்களும் இன்றி விடுதலைப் புலிகள் சாதித்திருந்தார்கள். இவற்றை ஈழத்தமிழர்களே இப்போது தொலைத்துவிட்டு நிற்கிறார்கள். தமிழ்நாட்டில் சின்மயியும் வரலட்சுமியும் தற்போது பேசியிருப்பவற்றை இந்தக் கோணத்தில் நோக்கவேண்டும் என்கிறார் மனித உரிமைச் செயற்பாட்டாளரும் வன்னியில் இடம்பெற்ற இன அழிப்புப் போரில் உயிர்பிழைத்துத் தனது அனுபவங்களைக் கேள்விகளாக உலக மானுடத்திடம் எழுப்பிவருபவருமான 70 வயது நிரம்பிய ஈழத்தமிழ் எழுத்தாளர் பெண்மணி முனைவர் ந. மாலதி.
ஒக். 17 20:04

தமிழ்த் தரப்பினால் உருவாக்கப்படவுள்ள புதிய கட்சிகள் பூகோள அரசியலுக்கு ஏற்ப செயற்படுமா?

(கிளிநொச்சி, ஈழம்) பூகோள அரசியல் தாக்கத்தினால் மைத்திரி - ரணில் அரசாங்கத்திற்குள் மோதல்கள் அல்லது முரண்பாடுகள் போன்ற சூழல் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்த்தரப்பு எந்தவிதமான அரசியல் தயாரிப்புகளும் இல்லாமல் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர். இந்த நிலையில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோம் என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். வவுனியா - சிவபுரத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இந்தக் கருத்தை தெரிவித்தார். வடக்கு- கிழக்கு தமிழர் தாயகத்தை உள்ளடக்கிய திருகோணமலை, முல்லைத்தீவுக் கடற் பிரதேசங்களில் அமெரிக்கா எண்ணெய் வள ஆய்வில் ஈடுபட்டு வருகின்றது.
ஒக். 17 15:03

இலங்கை மீதான வல்லரசுகளின் ஆதிக்கம், கொழும்பு அரசியலில் முரண்பாடுகளை உருவாக்கும் பூகோள அரசியல்

(மன்னார், ஈழம்) இந்தியாவின் புலனாய்வுப் பிரிவான றோ தன்னைக் கொலை செய்வதற்கு திட்டமிட்டுள்ளது என்றும் இந்த சதித் திட்டம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை எனவும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். நேற்றுச் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கூறியுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய ஊடகவியலாளர்கள் தொவித்துள்ளனர். ஆனால் மைத்திரிபால சிறிசேன அவ்வாறு கூறவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.
ஒக். 15 00:04

இந்துமா சமுத்திரத்தின் பாதுகாப்புத் தொடர்பான மாநாட்டின் பின்னர் மைத்திரி சீனாவுக்கும் ரணில் டில்லிக்கும் பயணம்

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கையின் தென் மாகாணத்தில் உள்ள அம்பாந்தோட்டைத் துறைமுகம் அனைத்து நாடுகளின் கப்பல்களும் வந்து செல்லக்கூடிய முறையில் மாற்றியமைக்கப்பட வேண்டும் என ஜப்பான் பாதுகாப்புத் துறை அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா (Itsunori Onodera) கடந்த ஓகஸ்ட் மாதம் கொழும்புக்குப் பயணம் செய்திருந்தபோது கூறியிருந்தார். இந்த நிலையில் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இலங்கைக் கடற்படைக் கப்பல்கள், வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள் தரித்து நிற்பதற்குரியவாறு தனியான இறங்குதுறை ஒன்றை அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக இலங்கைக் கடற்படையின் தலைமை அதிகாரி, றியர் அட்மிரல் பியால் டி சில்வா கொழும்பில் கடந்த வெள்ளிக்கிழமை கூறியுள்ளார்.
ஒக். 13 15:08

சிவசக்தி ஆனந்தனுக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் பத்து மாதங்களுக்கும் மேலாகப் பேச்சுரிமை மறுப்பு

(வவுனியா, ஈழம் ) தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈபிஆர்எல்எப் கூட்டமைப்பில் இருந்து விலகியதால் இலங்கை நாடாளுமன்றத்தில் உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தனித்து செயற்படுகின்றார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து அவர் எதிர்க்கட்சி வரிசையில் தனித்து இயங்கி வருகின்றார். இதனால் இலங்கை நாடாளுமன்றத்தில் அவருக்கு உரையாற்றுவதற்கான நேரத்தை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வழங்க மறுத்துள்ளது. இது தொடர்பாக சிவசக்தி ஆனந்தன் நான்கு தடவைகள் நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் சிறப்புரிமைப் பிரச்சனையை முன்வைத்து தனக்குரிய நேர ஒதுக்கீடு தொடர்பாக வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் கடந்த பத்து மாதங்களுக்கும் மேலாக சபாநாயகர் கருஜெயசூரிய நடவடிக்கை எதையுமே எடுக்கவில்லை.