கட்டுரை: செய்திக்கட்டுரை: நிரல்
ஏப். 10 16:03

சத்குமாரவின் கைதும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையும்- பொல்காவல நீதிமன்றத்தின் தீர்ப்பு எவ்வாறு அமையும்?

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையில் தேரவாத பௌத்த சமயத்தை (Theravada Buddhist) மையப்படுத்திய பிக்குமார் சிலரின் ஒருபால் சேர்க்கை (Homosexuality) தொடர்பாக சிங்கள மொழியில் களு மக்கற (Black Dragon) என்ற சிறுகதையை எழுதிய சக்திக சத்குமார என்ற சிங்கள இளைஞன், குருநாகல் மாவட்ட பொல்காவல நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு தடுப்புக் காவில் வைக்கப்பட்டுள்ளார். இலங்கையின் 2007 ஆண்டு 56 ஆம் இலக்கச் சட்டத்தின் பிரகாரம் இலங்கை நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேசச் சமவாயத்தின் பிரிவு மூன்றின் கீழ் (International Covenant on Civil and Political Rights) (ICCPR) கைது செய்யப்பட்டே முப்பத்தி மூன்று வயதான சக்திக சத்குமார நீதிமன்ற உத்தரவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
ஏப். 09 18:30

கோட்டாபய போட்டியிடுவது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில்- மேதினக் கூட்டத்தில் உரையாற்றுவார்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச. நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் என்ற அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளிவருவதற்கு முன்னரே சர்வதேச மட்டத்திலான சதி முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விரைவில் கோட்டாபய ராஜபக்சவின் பெயரை ஜனாதிபதி வேட்பாளராகப் பிரேரிப்பார் என்றும் அதற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ள சதி முயற்சிகள் அனைத்தும் முறியடிக்கப்படுமெனவும் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. நடைபெறவுள்ள மே தினக் கூட்டத்தில் மக்கள் மத்தியில் கோட்டாபய ராஜபக்ச உரையாற்றுவாரென்றும் அன்றில் இருந்து அவருடைய அரசியல் பயணம் ஆரம்பிக்குமெனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கூறியுள்ளது.
மார்ச் 30 16:45

வவுனியா மாவட்டத்தில் தமிழரின் இன விகிதாசாரத்தைக் குறைக்க முயற்சி-

(வவுனியா, ஈழம் ) வடமாகாணம் வவுனியா மாவட்டத்தில் தற்போது தமிழர்கள் 83 வீதம் முஸ்லீம்கள் ஏழு வீதம் சிங்களவர்கள் பத்து வீதமும் உள்ளனர். மகிந்த ராஜபக்ச ஆட்சியின் பின்னரு வவுனியாவில் குடிப்பரம்பலில் மாற்றங்களை ஏற்படுத்தும் அளவுக்கு சிங்களக் குடியேற்றங்கள் ஆரம்பிக்கப்பட்டன. 2015 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த மைத்திரி- ரணில் அரசாங்கமும் சிங்களக் குடியேற்றத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் வவுனியா மாவட்டத்தை இலக்கு வைத்து குடியேற்றங்கள் இடம்பெறுவதாக தமிழ் உறுப்பினர்கள் பலரும் இலங்கை நாடாளுமன்றத்தில் கூறியிருந்தனர்.
மார்ச் 27 10:38

நடப்பு ஆண்டின் ஜெனீவாத் தீர்மானம் இலங்கை அரசாங்கத்துக்கே சாதகம்- மனித உரிமைச் சபையின் பலவீனம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைச் சபையின் 40 ஆவது கூட்டத் தொடரில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தில் புதிதாக எந்தவொரு மாற்றங்களும் செய்யப்படவில்லை. மாறாக 2015 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டிருந்த விடயங்களையே அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் செய்து முடிக்க வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது. ஆணையாளரின் அறிக்கையில் கூட போர்க்குற்ற விசாரணைக்கான சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்புப் பொறிமுறை நீதிக்கட்டமைப்பு உருவாக்கக்பட வேண்டுமெனத் தெளிவாகக் கூறப்படவில்லை. ஆகவே இந்த ஆண்டு ஜெனீவாவில் முன்வைக்கப்பட்ட இலங்கை குறித்த தீர்மானம் தெளிவற்றதும் தமிழ்த்தரப்பை சமாளிப்பதற்கும் ஏற்ற முறையில் அமைந்துள்ளதாகவே அவதானிகள் கூறுகின்றனர்.
மார்ச் 21 15:25

ஆணையாளரின் அறிக்கையில் தமிழ் மக்கள், வடக்குக் கிழக்கு என்ற வார்த்தைப் பிரயோகங்கள் தவிர்ப்பு

(யாழ்ப்பாணம், ஈழம் ) ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைச் சபை ஆணையாளர் மிச்செல் பச்சலெட் இலங்கை தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் தமிழ் மக்கள் என்றோ, வடக்கு - கிழக்கு மாகாணம் என்றோ எந்தவொரு வார்த்தைப் பிரயோகங்களும் பயன்படுத்தப்படவில்லை. மாறாக இலங்கை மக்கள் என்றே ஆணையாளரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இலங்கையில் சிங்கள - தமிழ் இனப்பிரச்சினையாகக் காண்பித்தால் போர்க்குற்ற விசாரணைக்குப் பதிலாக தமிழ் இன அழிப்பு என்ற அடிப்படையிலான விசாரணையாக மாறிவிடலாம் என்ற நோக்கில் ஆணையாளரின் அறிக்கையில் இலங்கை மக்கள் என்ற சொற்பிரயோகம் பயன்படுத்தப்பட்டிருக்கலாமென ஜெனீவாவில் உள்ள தமிழ்ப் பிரதிநிதியொருவர் தெரிவித்தார்.