கட்சியின் 106 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 66 உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவின் பக்கம் நிற்பதாகவும் ஏனையவர்கள் சஜித் பிரேமதாசவின் பக்கம் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
எவ்வாறாயினும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி யானைச் சின்னத்திலேயே போட்டியிடுமெனவும் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி யானைச் சின்னத்தில் இணைந்து போட்டியிட முடியும் எனவும் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவன்ச தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அன்னம் சின்னத்திலேயே போட்யிடுமென உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன. அதேவேளை, வடக்குக் கிழக்குத் தாயகப் பகுதிகளில் பிரதான தமிழக் கட்சிகளின் வாக்குகளைச் சிறதடிக்கும் நோக்கில் பல்வேறு சுயேற்சைக் குழுக்கள் மற்றும் பிரதான சிங்களக் கட்சிகளின் வேட்பாளர் பட்டியல்களில் பிரபல்யம் மிக்க தமிழ் வேட்பாளர்களை நிறுத்தும் முயற்சிகள் தொடர்ந்து இடம்பெறுகின்றன.
தமக்கு ஆதரவான ஈபிடிபி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தமிழ் உறுப்பினர்கள் மூலம் நிவாரணங்கள், சலுகைகளை வழங்க கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச ஆகியோரை மையமாகக் கொண்ட அரசாங்கம் தீவிர முயற்சியில் ஈடுபடுவதாகக் கொழும்பு உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.
எவ்வாறாயினும் தாயகம், வடக்குக் கிழக்கு இணைந்த சுயாட்சி அதிகாரத்துடன் கூடிய அரசியல் தீர்வு மற்றும் சர்வதேச விசாரணை மூலம் தாயகத்தில் இடம்பெற்ற தமிழ் இனப்படுகொலைகளை வெளிக்கொணரும் தமிழ்க் கட்சிகளுக்கு மாத்திரமே வாக்களிக்க முடியுமென வடக்குக் கிழக்கில் உள்ள சிவில் சமூக அமைப்புகள் கூறுகின்றன.