கூர்மையின் பார்வையில்
டிச. 25 20:36

இலங்கை அரசும் சிங்கள அமைப்புகளும் கனடிய அரசியலுக்கு அஞ்ச ஆரம்பித்துவிட்டன

(வவுனியா, ஈழம்) புலம்பெயர் தேசங்களில் தமிழ்த் தேசியத்தை இலக்காகக் கொண்ட ஈழத்தமிழ் அமைப்புகளின் பலத்தை அறிந்த ஒரு பின்னணியிலேதான், சிங்கள அரசியல் தலைவர்கள் பிரித்தானியா, அமெரிக்கா, கனடா போன்ற மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இயங்கும் குறிப்பிட்ட சில தமிழ் அமைப்புகளையும் தனிநபர் குழுக்களையும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர் என்பது பட்டவர்த்தனமாகும். ஈழத்தமிழர்கள் அனைவரும் இலங்கை அரச கட்டமைப்புக்குள் இணைந்து வாழத் தயார் என்ற பொய்யான பரப்புரையின் ஊடாக புலம்பெயர் தமிழர்கள் பெருமளவில் வாழும் கனடா போன்ற நாடுகளில் கணக்கைக் காண்பிக்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
செப். 18 08:44

உயிர்த்த ஞயிறுத் தாக்குதல் குற்றவாளிகளுக்கு மன்னிப்பா? 

(யாழ்ப்பாணம், ஈழம்) 1991 ஆம் ஆண்டு யூன் மாதம் பதினேழாம் திகதி தாங்கள் கொழும்பு துணைப் பேராயராக திருநிலைப்படுத்தப்பட்டுப் பின்னர் 1995 இல் இரத்தனபுரி மறை மாவட்ட ஆயராகவும் 1995 முதல் 2001 வரை இரத்தினபுரி ஆயராகவும் பணிபுரிந்தீர்கள். அதன் பின்னர் 2001 ஒக்ரோபர் முதலாம் திகதி உரோமை மறைபரப்பு பேராயத்தின் துணைச் செயலராகவும் நியமனம் பெற்றிருந்தீர்கள். வத்திக்கானில் உள்ள உலகக் கத்தோலிக்கத் திருத்தந்தையின் (Pope) இந்தோனேசிய மற்றும் கிழக்குத்தீமோர் நாடுகளுக்கான தூதுவராக 2004 ஏப்ரல் முதல் 2005 டிசம்பர் வரை பணியாற்றியபோதுதான் தாங்கள் பேராயராகவும் தரமுயர்த்தப்பட்டீர்கள் என்பது உலகம் அறிந்த உண்மை.
ஜூன் 26 11:37

போர்க்காலச் செய்தியாளர் தில்லைநாதனின் ஊடக வகிபாகம்

(யாழ்ப்பாணம், ஈழம்) நாளிதழ்கள், ஞாயிறு வார இதழ்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் போன்றவைகளுக்குச் செய்திகளைச் சேகரித்துத் தொகுத்து வழங்கும் பணிகளைச் செய்பவர்கள் செய்தியாளர்கள் என அழைக்கப்படுகிறார்கள். பிராந்தியங்களில் இருந்து செய்திகளை அனுப்பும் செய்தியாளர்களை நிருபர்கள் என்ற அடைமொழி கொண்டும் அழைப்பர். இவர்கள் நேர்காணல், கவனித்தல் மற்றும் ஆய்வுசெய்து ஊடாகச் செய்திகளைச் சேகரிப்பார்கள். 1990 ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில் ஊடகத்துறையில் செய்தியாளர்களாகப் பணிபுரிவோருக்கு இலங்கையில் ஊடகத்துறைப் பட்டப்படிப்புகள் மற்றும் ஊடகக் கற்கை நெறிகள், பயிற்சிகள் என்று பல திட்டங்கள் உண்டு. ஆனால் அதற்கு முந்திய காலாத்தில் அதுவும் 1950 களில் செய்தியாளர்களுக்குப் பயிற்சிகள் என எதுவும் இருந்ததில்லை.
மே 19 21:50

விருப்பங்கள், விமர்சனங்கள் அல்ல என்பதை உணர்த்தியுள்ள மாணிக்கவாசகத்தின் நூல்

ஈழத் தமிழர்களின் அரசியல் விவகாரத்தை இந்தியா 1987 இல் கையாண்ட முறையின் பெறுபேறுகள் பல எதிர்வினைகளுக்குக் காரண காரியமானது (Causality) என்ற தொனியை 'நினைவுகள் நிகழ்வுகள் நெஞ்சில் மோதும் எண்ண அலைகள்' என்ற தனது செய்தி அனுபவப் பகிர்வு நூலில் அமரர் பொன்னையா மாணிக்கவாசகம் எடுத்துரைக்கிறார். தமிழ்ப் பத்திரிகை உலகின் புதுமைப்பித்தன் (Innovator) மூத்த செய்தியாளர் மாணிக்கவாசகம், போர்க் காலத்தில் உயிர் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி இருந்தவர். ஆனால் அவருடைய செய்தி எழுத்தின் மதியுகமும், விதியை மதியால் வெற்றி பெறக்கூடிய சாமர்த்தியமும் (Dexterity) அவரது உயிரைக் காத்தது எனலாம்.
டிச. 02 23:15

13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது- மோடி முன்னிலையில் நேரடியாகவே மறுத்தாரா கோட்டாபய

(யாழ்ப்பாணம், ஈழம்) இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாண சபை முறைகளுக்கான 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியிடம் நேரடியாகவே கூறியதாகப் புதுடில்லித் தகவல்கள் கூறுகின்றன. கோட்டாபய ராஜபக்சவுடனான சந்திப்பின்போது தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வாக 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொண்டதாக, நரேந்திரமோடி செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். இருவருக்குமிடையிலான சந்திப்பு முடிவடைந்த பின்னர் புதுடில்லியில் நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் கோட்டாபய ராஜபக்சவுக்கு முன்பாகவே நரேந்திரமோடி அவ்வாறு கூறியிருந்தார்.