மெய்ப்பொருள் அன்றி எப்பொருளும் சாரா தமிழர் புலங்களின் உயிரோட்ட நாட்காட்டி
இலங்கைத்தீவில்

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் ஒரு மாதத்திற்கும் மேலாகத் தொடர்கிறது

ஒரு நாளில் மரணிப்போரின் எண்ணிக்கை நூற்றுக்கும் அதிகம்
பதிப்பு: 2021 செப். 17 09:44
புதுப்பிப்பு: செப். 18 09:49
இலங்கைத்தீவு முழுவதிலும் தனிமைப் படுத்தல் ஊரடங்குச் சட்டம் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடிக்கப்பட்டு வருகின்றது. 21 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்குத் தளர்த்தப்படவிருந்த ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் முதலாம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை அதிகாரபூர்வற்ற முறையில் மதுபானச்வாலைகளைத் திறப்பதற்கு அரசாங்கம் அனுமதியளித்தால் இலங்கைத்தீவின் அனைத்து மதுபானச் சலைகள் முன்பாக மதுப்பிரியர்கள் நீண்ட வரையில் காத்திருந்தனர் >> மேலும் வாசிக்க
செப். 18 19:15

மன்னாரில் தடுப்பூசி செலுத்தப்பட்ட அட்டைகளைப் பரிசோதிக்க முடிவு

(மன்னார், ஈழம்) இலங்கையின் வட மாகாணம் மன்னார் மாவட்டத்தில் உள்ள வீதிச் சோதனைச் சாவடிகள் ஊடாக பயணிக்கும் பொது மக்கள் தமது கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்ட அட்டைகளைப் படையினர் மற்றும் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் பார்வையிடும் வகையில் தம்வசம் வைத்திருத்தல் வேண்டும் எனும் புதிய நடைமுறை கடந்த 15ஆம் புதன்கிழமை தொடக்கம் மன்னாரில் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் தர்மராஜன் வினோதன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.மன்னார் மாவட்டத்தில் 30 தொடக்கம் 60 வயதுடைய பெருமளவானோர் கொவிட்-19 தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
செப். 16 20:44

தலை மன்னாருக்கு இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட போதைப் பொருள்

(மன்னார், ஈழம்) இலங்கை தீவில் கொவிட் - 19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் அனைத்துப் பகுதிகளிலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப் பட்டுள்ள நிலையில் அதனையும் மீறி மிகத் துணிகரமாக இந்தியாவில் இருந்து மீன்பிடிப் படகொன்றில் தலைமன்னாருக்கு கடத்தி வரப்பட்ட சுமார் எட்டு கோடி பெருமதியான ஜஸ் எனப்படும் போதைவஸ்து அடங்கிய பொதிகள் சென்ற செவ்வாய் நள்ளிரவு தலைமன்னார் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் குறித்த ஐஸ் போதைவஸ்தினை கடத்தி வந்த சந்தேகத்தின் பேரில் தலைமன்னார் கிராமத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்களும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செப். 15 22:56

அமைச்சரைப் பதவி விலகவைத்துப் பொறுப்புக்கூறும் தோற்றப்பாட்டை ஜெனீவாவுக்குக் காண்பிக்க முயற்சி

(மன்னார், ஈழம்) வடமத்திய மாகாணம் அநுராதபுரம் சிறைச்சாலையில் குடிபோதையில் சென்ற இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளிடச் செய்து, துப்பாக்கி முனையில் கைதிகளுக்கு உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளும் பொது அமைப்புகளும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. அமைச்சர் லொகான் ரத்வத்தயைக் கைது செய்ய வேண்டுமெனவும் கோரியுள்ளன. ஜெனீவா மனித உரிமைச் சபை அமர்வு 13 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பித்துள்ள நிலையில், 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
செப். 14 22:32

மன்னார் பிரதேச சபைத் தவிசாளர் பதவி நீக்கம்

(மன்னார், ஈழம்) இலங்கையின் வட மாகாணம் மன்னார் மாவட்டம் மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் சாகுல் கமீட் முகம்மது முஜாகீர் மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் பதவியில் இருந்தும் பிரதேச சபை உறுப்பினர் பதவியில் இருந்தும் வட மாகாண ஆளுநரினால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நேற்றுத் திங்கட்கிழமை மாலை வெளியிடப்பட்ட இலங்கை விசேட வர்த்தமானியில் வட மாகாண ஆளுநர் திருமதி பீ. எஸ். எம். சார்ள்ஸினால் குறித்த பதவி நீக்க அறிவித்தல் பிரசூரிக்கபட்டுள்ளதுடன் இன்று செவ்வாய்கிழமை தொடக்கம் இவரின் பதவி வரிதாக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானியில் தெரிவிக்கப்படடுள்ளது.
செப். 14 14:21

பச்சலெற் கோட்டபாயாவைக் குறிப்பெடுத்து பீரிஸை ஆமோதிக்கிறார்

(வவுனியா, ஈழம்) ஈழத்தமிழர்களுக்கு எதிராகக் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலிலும் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அது பற்றிய விபரங்கள் எதனையும் குறிப்பெடுக்காமல் (note), பொறுப்புக்கூறல் தொடர்பாக ஐ.நாவுடன் இணைந்து நிறுவன ரீதியான சீர்திருத்தங்களை மேற்கொள்வோமெனக் கடந்த யூன் மாதம் ஜனாதிபதி கோட்டாபய வழங்கிய உறுதிமொழியைக் குறிப்பெடுப்பதாக ஜெனீவா மனித உரிமைச் சபையின் ஆணையாளர் மிச்செல் பச்சலெற் கூறியுள்ளார்.
செப். 12 20:53

வவுனியாவில் அதிகரிக்கும் கொவிட் மரணங்கள்

(மன்னார், ஈழம்) இலங்கையின் தமிழர் தாயகமான வட மாகாணத்தின் வவுனியா மாவட்டத்தில் கொவிட்- 19 நோய் தொற்று மிக வேகமாக பரவிவரும் நிலையில் இம் மாவட்டத்தில் கொவிட் மரணங்களும் சடுதியாக அதிகரித்துள்ளதாக சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தனர். வவுனியா மாவட்ட மக்கள் கொவிட் நோயின் பாரதூரத்தை கருத்தில் கொள்ளாமல் அவர்களின் தொடர்ச்சியான அசமந்த போக்கு காரணமாக கொவிட் நோய்த் தொற்று மிகத் தீவிரமாகப் பரவிவரும் நிலையில் கொவிட் தொற்றினால் இம் மாதம் 11ஆம் திகதிவரை வவுனியா மாவட்டத்தில் 63 பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
செப். 12 11:04

மத்திய வங்கி ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால்

(மன்னார், ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் மத்திய வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து வீ.டி.லக்ஸ்மன் விலகவுள்ளதாக அறிவித்துள்ளார். புதிய ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகின்றது. மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது மத்திய வங்கியின் ஆளுநராகப் பதவி வகித்த அஜித் நிவாட் கப்ரால், தற்போதும் ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய நண்பராகவுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகவும் இவர் பதவி வகிக்கின்றார். ஆளுநர் பதவியை ஏற்பதற்காக இவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன.
செப். 10 13:55

இலங்கை செல்ல முற்பட்ட பெண் கைது

(மன்னார், ஈழம்) இந்தியாவின் தனுஷ்கோடியில் இருந்து சட்டவிரோதமாகப் படகு மூலம் இலங்கை செல்ல முற்பட்ட இளம் யுவதியொருவர் கடலோரப் பொலிஸாரினால் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இந்தியப் பெண்ணொருவர் உட்பட மேலும் நால்வரைக் கைது செய்துள்ளதாக இராமேஸ்வரம் தகவல்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தன.
செப். 09 19:56

றிஸாத் பதீயூதீன் சிறைச்சாலை விதிகளை மீறினார்

(மன்னார், ஈழம்) உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மற்றும் மலையகம் டயகம பகுதியைச் சேர்ந்த சிறுமியின் மரணம் தொடர்பான குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் தற்போது மகசின் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் றிஸாத் பதீயூதீன் சிறைச்சாலை விதி முறைகளுக்கு முரணாகப் பல செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் இதனால் சிறை அதிகாரிகளுக்குப் பல நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாகவும் கொழும்பு வட்டாரங்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தகவல் தெரிவித்தன.