இலங்கை ஒற்றையாட்சி அரசின்
                       
                  
                     இனப்படுகொலைக்கு நீதிகோரி முள்ளிவாய்காலில் மக்கள் ஒன்று கூடல்
                 
                      
                          இலங்கை இராணுவத்தின் தடகைளையும் மீறி அக வணக்க நிகழ்வுகள்
                        
                      
                  
                 பதிப்பு: 2020 மே 18 23:41
                 
                        புலம்: முல்லைத்தீவு, ஈழம் 
                 
                 
                      புதுப்பிப்பு: 
                      மே 18 23:49 
                 
                  
                 
            
            
                
                    
                        
                            
                            
                            நிருபர் திருத்தியது
                         
                        
                            
                            
                            ஆசிரியர் திருத்தியது
                         
                        
                            
                            
                            உறுதிப்படுத்தப்படக்கூடியது
                         
                        
                            
                            
                            ஆசிரியபீட அங்கீகாரம்
                         
                        
                            
                            
                            மொழி திருத்திய பதிப்பு
                         
                     
                 
            
       
            
            
                 
                     ஈழத் தமிழர்கள் மீதான இனப்படுகொலைகள் செய்யப்பட்டமைக்கான நீதி பதினொரு ஆண்டுகள் சென்றுவிட்ட நிலையிலும் கிடைக்கவில்லையென முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்துகொண்ட மக்கள் கவலை வெளியிட்டனர். சர்வதேசம் நீதயைப் பெற்றுத்தர வேண்டுமெனவும் மக்கள் கோரிக்கை விடுத்தனர். கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவது என்ற போர்வையில் இலங்கை இராணுவம் கடுஐமயான தடையுத்தரவுகளைப் பிறப்பித்திருந்தும் மக்கள் துணிவோடு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளனர். உலக சுகாதார நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு ஏற்ப சமூக இடைவெளிகளைப் பின்பற்றி மக்கள் பங்கெடுத்தனர்;. துமிழ்த் தரப்பு அரசியல் பிரதிநிதிகள் பலர் நிகழ்வுகளில் கலந்துகொள்ளவிடாமல் தடுக்கப்பட்டனர்.
                     
 
                     ஆனாலும் வடமாகாணத்தில் ஏனைய பகுதிகளில் அங்காங்கே நினைவுச் சுடர் ஏற்றி மக்களுடன் சேர்ந்து அரசியல் பிரதிநிதிகள் அக வணக்க நிகழ்வுகளில் பங்கெடுத்தனர். யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நினைவுத் தூபியிலும் மாணவர்கள் மலர்களை வைத்துத் தீபம் ஏற்றினர்.இன்று திங்கட்கிழமை முள்ளிவாங்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டமென இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. ஆனால் மக்கள் அந்த அறிவிப்பை பொருட்படுத்தவில்லை.
இலங்கை இராணுவப் புலானாய்வுப் பிரிவனர் சிவில் உடைகளில் நின்று மக்களை அவதானித்தாகவும் படங்கள், வீடியோக் காட்சிகளையும் எடுது்ததாகவும் நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் கூறுகின்றனர்.