இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத் தேர்தல்

வடக்குக் கிழக்குத் தாயகப் பகுதியில் கூடுதல் வாக்குப் பதிவு

கொழும்பில் வாக்களிப்பு வீதம் குறைவு
பதிப்பு: 2020 ஓகஸ்ட் 05 23:26
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 05 23:53
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#parliament
#election
இலங்கை ஒற்றையாட்சி அரசின் 16 ஆவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பில் 25 தேர்தல் மாவட்டங்களிலும் 71 சதவீத வாக்களிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கைச் சுயாதீனத் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 83 சதவீத வாக்களிப்பு பதிவாகியிருந்தது. 2015ஆம் ஆண்டு நடபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 76சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இன்று புதன்கிழமை நடைபெற்ற தேர்தலில் கொழும்பு மாவட்ட தேர்தல் தொகுதியில் 70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆனால் கடந்த 2105ஆம் ஆண்டு தேர்தலில் 78.93% வாக்குகள் பதிவாகியிருந்தன. ஆகவே இந்த ஆண்டு கொழும்பில் வாக்களிப்பு வீதம் குறைவாகும்.
 
அதேவேளை, யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் 2015ஆம் ஆண்டுத் தேர்தலில் 61.56% வாக்களிப்பு பதிவாகியிருந்தது. ஆனால் இந்த ஆண்டு யாழ்ப்பாணத்தில் 67.2% வாக்களிப்பு பதிவாகியுள்ளது.

வன்னி தேர்தல் மாவட்டத்தில் 2015ஆம் ஆண்டுத் தேர்தலில 71. 89% வாக்களிப்பு பதிவாகியிருந்தது. ஆனால் 205ஆம் ஆண்டு 73% வாக்களிப்பு பதிவாகியுள்ளது.

மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில் 2015ஆம் அண்டுத் தேர்தலில் 69. 11% வாக்குகளும் இந்த ஆண்டு 76% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

திருகோணமலையில் 2015ஆம் அண்டுத் தேர்தலில் 74..34% வாக்குகளும் இந்த ஆண்டு 73% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

அம்பாறை தேர்தல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 73. 99% இந்த ஆண்டு 73% வாக்களிப்பு பதிவாகியுள்ளன. வாக்களிப்பு